இலங்கை தேவாரப் பண்ணிசை வளர்ச்சிக் கழகம் Pannisai Valarchik Kalzagam

  • Home
  • Sri Lanka
  • Colombo
  • இலங்கை தேவாரப் பண்ணிசை வளர்ச்சிக் கழகம் Pannisai Valarchik Kalzagam

இலங்கை தேவாரப் பண்ணிசை வளர்ச்சிக் கழகம் Pannisai Valarchik Kalzagam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from இலங்கை தேவாரப் பண்ணிசை வளர்ச்சிக் கழகம் Pannisai Valarchik Kalzagam, Religious organisation, Colombo.

நாயன்மார் குருபூஜை பதிகங்கள் வரிசையில் மாணிக்க வாசக சுவாமிகளின் குருபூஜை தினத்தை முன்னிட்டு எமது கழக பயிலுனர்களால் பாடப்...
23/06/2025

நாயன்மார் குருபூஜை பதிகங்கள் வரிசையில் மாணிக்க வாசக சுவாமிகளின் குருபூஜை தினத்தை முன்னிட்டு எமது கழக பயிலுனர்களால் பாடப்பட்ட குரல் பதிவை கேட்டு மகிழுங்கள்..

சிவ.. சிவா..

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் குருபூஜை தினத்தை முன்னிட்டு  இலங்கையில் பாடல் பெற்ற தலமான திருக்கோணமலையில்  ,திருகோணமல...
13/06/2025

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் குருபூஜை தினத்தை முன்னிட்டு இலங்கையில் பாடல் பெற்ற தலமான திருக்கோணமலையில் ,
திருகோணமலைஅருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்வினை ,
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை தேவாரப்பண்ணிசை வளர்ச்சிக்கழகம், திருகோணமலை மாவட்டச் செயலகம்,
அருள்மிகு விஸ்வநாத சிவன் ஆலயம் ஆகியவை இணைந்து சிறப்பாக கொண்டாடப்பட்டது .
விழாவின் ஆரம்பத்தில் ,திருக்கேதீச்சரத்தில் இருந்து எழுந்தருளிய ஞானசம்பந்தப் பெருமானின் திருவுருவிற்கு விஸ்வநாத சிவன் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டு ,அங்கிருந்து ஊர்வலமாக சம்பந்தப்பெருமானையும்,திருமுறைப் பெட்டகமும் ,எடுத்துவரப்பட்டு , திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வைத்து, விசேட வழிபாடுகள் செய்யப்பட்டு ,திருமுறை சேர்ந்திசை விண்ணப்பம் நிகழ்த்தப்பட்டது .
நிகழ்வில் , தேவாரப் பண்ணிசை வளர்ச்சிக் கழகத்தினர் ,மற்றும் ,திருகேணமலை மாவட்ட பாடசாலை மாணவர்களும் ,சைவ அடியார்களும் ,கலந்துகொண்டு சிறப்பித்தனர்
ஓம் சிவாய நம 🙏🙏

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரின் குருபூஜை தினத்தினை முன்னிட்டு எமது கழக உறுப்பினர்களின் குரல் பதிவில் ஒலிப்பதிவு செய்ய...
12/06/2025

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரின் குருபூஜை தினத்தினை முன்னிட்டு எமது கழக உறுப்பினர்களின் குரல் பதிவில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பதிகபாடல்கள்.

முதற் பதிகம் - திருமதி தயாளினி ஜெயகுமார்நாயன்மார் குருபூசைப் பாடல்கள் | திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் | 2025 |

"குற்றமிலாதார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை " பதிகம் பாடி அருளிய ஞானசம்பந்தப்பெருமானின் குருபூஜைத்திருநாளாகிய வை...
11/06/2025

"குற்றமிலாதார் குரைகடல்
சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை " பதிகம் பாடி அருளிய ஞானசம்பந்தப்பெருமானின் குருபூஜைத்திருநாளாகிய வைகாசி மூல நன்னாளில், தவமுதல்வருக்கு நன்றிகூறும் முகத்தான்,திருகோணமலையில் சைவப்பெருமக்கள் ஒன்று கூடி , திருகோணமலை அருள்மிகு விஸ்வநாத சிவன் ஆலயத்தில் சம்பந்தப்பெருமானுக்கு காலை அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்து , ஊர்வலமாக அடியார்களால் கொண்டுவரப்பட்டு திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தை அடைந்து ,அங்கு விசேடபூஜைகளுடன்,திருமுறை சேர்ந்திசை விண்ணப்பம் செய்யப்படவுள்ளது .
இந்நிகழ்வுகளை
திருகோணமலை அருள்மிகு விஸ்வநாதர் சிவன் ஆலய தேவஸ்தானம்,
திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் ,
இந்துகாலசார அமைச்சு அலுவல்கள் திணைக்களம் ,
இலங்கை தேவாரப்பண்ணிசை வளர்ச்சிக்கழகம், திருகோணமலை மாவட்டச் செயலகம் ஆகியவை இணைந்து வழங்கவுள்ளன 🙏🙏🙏

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை தேவாரப் பண்ணிசை வளர்ச்சி கழகம், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபை இணைந்து...
03/06/2025

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை தேவாரப் பண்ணிசை வளர்ச்சி கழகம், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபை இணைந்து வழங்கிய

முப்பெரும் சைவப் பெருவிழா -2025"
~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை தேவாரப் பண்ணிசை வளர்ச்சி கழகம், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபை இணைந்து நடத்திய முப்பெரும் சைவப் பெருவிழா நிகழ்வானது கடந்த 31,01- 05-2025 சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பாடல்பெற்றத் தலமாகிய திருக்கேதீஸ்வரப் பதியிலே பண்சுமந்த பாடல்களோடு மெய்சிலிர்க்கும் வகையிலே நடைபெற்றது.

இவ்விழாவின் முதல் நிகழ்வானது சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் பாலாவித்தீர்த்தக் கரையில் இருந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களினால் 63 நாயன்மார்களின் வேடப் புனைவுடன் பண் சுமந்த பாடல்கள் பாடி ஊர்வலமாக "படவேறிடை மடவாளொடு உறை கேதீச்சரநாதர்" சன்னதியில் வருகை தந்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.ஆலய வசந்த மண்டபத்தில் வேடப்புனைவுடன் வருகை தந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் தியாகராஜா சரஸ்வதி கலாசார மண்டபத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்டு வருகின்ற உயர் பண்ணிசைக் கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இடம்பெற்றது.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.ய.அனிருத்தனன் அவர்கள் தலைமையில் இந் நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக திரு. சிவக்கொழுந்து ஸ்ரீ சற்குணராசா( துணைவேந்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்களும்,சிறப்பு அதிதியாக திரு.க. கனகேஸ்வரன் (மாவட்டச் செயலாளர், மன்னார்) அவர்களும், விசேட அதிதிகளாக திருமுறை கலாநிதி
தி. பாலச்சந்திர ஓதுவா மூர்த்திகள் (தேவார உதவிப் பேராசிரியர்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,தமிழ்நாடு)
மற்றும் தேவார இசைக் கலைமணி, முனைவர் திருமதி. சிவகௌரி கிரீஷ்குமார் (சிதம்பரம், தமிழ்நாடு) அவர்களும் வருகை தந்திருந்தனர்.

மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.அதனைத்தொடர்ந்து வரவேற்புரையினை மன்னார் மாவட்ட இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.அ.தனுஜன் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து வாழ்த்துரையினை திருமதி .அபிராமி கைலாச பிள்ளை( தலைவர், அகில இலங்கை இந்துமாமன்றம்)அவர்கள் வழங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அரங்க இசை இரண்டாம் மூன்றாம் ஆண்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பயிலுனர்களால் நிகழ்த்தப்பட்டது.

பின்னர் 1ம்,2ம், 3ம்ஆண்டு பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் விருந்தினர்களின் விசேட உரைகளும் நடைபெற்றது. இந் நிகழ்வினை தேவார பண்ணிசை வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் திரு.செல்லம் அம்பலவானர் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. பவானி முகுந்தன் தொகுத்து வழங்கினார்.மேலும் இவ் நிகழ்வினை சிறப்பிக்கும் வண்ணம் இப் பண்ணிசை கற்கை நெறியினை நெறிப்படுத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சிந்தூரன் மற்றும் முன்னாள் மன்னார் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.ஆ.ஜீவிதா அவர்களுடன் இன்னும் பல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வருகை தந்து இவ் விழாவினை சிறப்பித்தனர். அன்றையதினம் கழகத்திற்கான அடையாள அட்டை அதன் அனுசரணையாளர் திருமதி காந்திமதி அம்மாவினால் இசைஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டு முதல் அட்டை தலைவருக்கு அணிவிக்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் திருக்கேதீஸ்வர ஆலய வசந்த மண்டபத்தில் இக்கற்கை நெறியின் இசை ஆசிரியர்களின் தலைமையில் கற்கை நெறியினை பயின்ற பயலுனர்கள் மற்றும் சிங்கப்பூர் திருநெறிய தமிழிசைக் குழு, இந்தியா, மலேசியா, கனடா, இத்தாலி நாட்டில் இருந்து வருகை தந்த அடியவர்கள் இணைந்து வழங்கிய சேர்ந்திசை விண்ணப்பம் வெகு விமர்சையாக இடம்பெற்று "முப்பெரும் சைவப் பெரு விழா" நிகழ்வானது சிறப்பான முறையில் நிறைவு பெற்றது.

மேன்மைகொள் சைவநீதி
விளங்குக உலகமெல்லாம்.

திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 மே 2 முதல் மே 7 வரை மிகச் சிறப்பாக  நடைபெற்று முடிந்த தருமை ஆதீனத்தின் ஆறாவது  அனைத்துலக சைவசித்தா...
11/05/2025

திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 மே 2 முதல் மே 7 வரை மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்த தருமை ஆதீனத்தின் ஆறாவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டில்
தருமை குருமணிகளின் பெருங்கருணையினால்,

இலங்கை தேவாரப் பண்ணிசை வளர்ச்சிக்கழகத்தினரின் தேவாரப்பண்ணிசை நிகழ்வு நடைபெற அனுமதி அளித்திருந்தார்கள்.

இலங்கை முழுவதிலுமிருந்து 40 அன்பர்கள் சென்றிருந்தனர்.
தாய் வீட்டிற்கு வந்த மகளை அன்னையானவள் எவ்வாறு அன்புடன் கவனிப்பாளோ? அதேபோல் குருமஹா சன்னிதானம் தமது வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் , எமது பயிலுனர்களின் பயணத்திட்டங்களில் தனி கவனம் செலுத்தினார்கள். கப்பலில் வந்து இறங்கிய அன்று முதல் திரும்பி செல்வது வரை அனைத்து ஏற்பாடுகளையும் விசாரித்து வேண்டிய வசதிகளை செய்திருந்தார்கள். மே 2ம் திகதி கழகத்தினர் கப்பலில் நாகப்பட்டினம் துறைமுகம் வந்த மக்களுக்கு அன்று இரவு சுவையான உணவு திருக்கடையூர் தருமபுரம் கட்டளை மடத்தில் வழங்கப்பட்டது.

மாநாட்டில் மூன்று நாட்களும் தங்குமிடம்,உணவு ஏற்பாடுகள் மிகச்சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

மாநாட்டில் கழகத்தினரின் பண்ணிசை நிகழ்வின் போது மேடையில் எழுந்தருளி நிகழ்வினை கேட்டு பாராட்டி ஆசி வழங்கினார்கள்.

மாநாடு முடிந்தபின் தல தரிசனத்திற்காக அன்பர்கள் சிதம்பரத்திற்கு வந்த போது சிதம்பரத்தில் உள்ள கட்டளை மடத்தில் தங்குவதற்கு வசதிகளை ஏற்படுத்தி தந்தார்கள். அதன் பின் தருமபுர மடத்திற்கு வழிபாட்டிற்கு வந்தபோது தருமபுரம் கலைக்கல்லூரியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அன்பர்கள் மே 7ம் திகதி காலை பூஜை மடத்தில் சொக்கநாதர் பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்து பெரும் பேறு பெற்றனர் ,வழிபாடு முடித்தவர்களுக்கு சன்னிதானம் விபூதி பிரசாதம் வழங்கினார்கள்
அதன்பின் திருமடத்தில் காலை உணவு அளித்து , அடியார்களிடம் அன்பாக பேசினார்கள்.

இலங்கை தேவாரப்பண்ணிசை வளர்ச்சிக் கழகத்தின் செயற்பாடுகளை கேட்டறிந்தார்கள் , கழகத்திற்கு வேண்டிய உதவிகளை செய்வதாக கூறி கருணை புரிந்தார்கள்.அனைவரையும் தாயுள்ளத்தோடு விசாரித்து ஆசிகள் வழங்கினார்கள்.

சன்னிதானம் அவர்கள் ஏற்பாட்டினால் இலங்கை அன்பர்களுக்கு மாநாட்டிற்காக கட்டணம் உட்பட மொத்த பயணமும் இலங்கை அன்பர்களுக்கு மிக மிக குறைந்த செலவில் வந்து சென்றுள்ளனர் .குருமணிகள் பெருங்கருணையினால் இது சாத்தியமாயிற்று தருமைக் குருமணிகள் பாதங்கள் பணிந்து என்றென்றும் அவர்களுக்கும் ,தருமைத் திருமடத்திற்கும் நன்றியுடையவர்களாக இருப்போம். அத்தோடு இந்நிகழ்வை எம்மவருக்காக ஏற்பாடு செய்து இறுதிவரை எமது பயிலுனர்களுடன் பயணித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை பேராசிரியர்களான குமார வயலூர் பாலச்சந்தர் ஓதுவார் ஐயா, இசைத் துறை பேராசிரியர் சிவகௌரி கிரீஷ்குமார் அம்மையார் மற்றும் அவரது துணைவர், முனைவர் ந.கிரீஸ்குமார் ஐயா அவர்களுக்கும் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்

ஓம் சிவாய நம 🙏🙏🙏சிவன் அடியார்கள் அனைவரையும் அன்புடன் அழைகத்து நிற்கின்றோம்
02/05/2025

ஓம் சிவாய நம 🙏🙏🙏
சிவன் அடியார்கள் அனைவரையும் அன்புடன் அழைகத்து நிற்கின்றோம்

திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை தினம்இறுதிப் பதிகம்திருமதி தர்ஷினி சுகந்தன் அம்மாவின் குரல் பதிவில் ஒலிப்பதிவு செய்யப்பட...
23/04/2025

திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை தினம்
இறுதிப் பதிகம்
திருமதி தர்ஷினி சுகந்தன் அம்மாவின் குரல் பதிவில் ஒலிப்பதிவு செய்யப்படுகிறது. கேட்டு மகிழுங்கள் 🙏

திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை தினம்பொதுப் பதிகம்செல்வி மாரிமுத்து புவனேஸ்வரிஅம்மாவின் குரல் பதிவில் ஒலிப்பதிவு செய்யப்...
23/04/2025

திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை தினம்
பொதுப் பதிகம்
செல்வி மாரிமுத்து புவனேஸ்வரி
அம்மாவின் குரல் பதிவில் ஒலிப்பதிவு செய்யப்படுகிறது.🙏

திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை தினம்முதற் பதிகம்திருமதி ரேணுகா அழகர்சாமி அம்மாவின் குரல் பதிவில் ஒலிப்பதிவு செய்யப்படுக...
23/04/2025

திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை தினம்
முதற் பதிகம்
திருமதி ரேணுகா அழகர்சாமி அம்மாவின் குரல் பதிவில் ஒலிப்பதிவு செய்யப்படுகிறது. கேட்டு மகிழுங்கள் 🙏

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when இலங்கை தேவாரப் பண்ணிசை வளர்ச்சிக் கழகம் Pannisai Valarchik Kalzagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share