27/02/2023
2023.02.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு, சமூகத் தலைவர்களை சந்தித்தல் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் களனி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கொள்ளுபிட்டியே மஹிந்த சங்கரக்கித்த தேரர் அவர்களை சினேகபூர்வமாக சந்தித்தது. இச்சந்திப்பில் ஜம்இய்யாவின் நூற்றாண்டு கால செயற்பாட்டறிக்கை, அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதி மற்றும் ஏனைய வெளியீடுகள் கையளிக்கப்பட்டதோடு இனங்களுக்கு மத்தியிலான சகவாழ்வு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதில் ஜம்இய்யா சார்பாக நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர் மற்றும் அஷ்-ஷைக் பாழில் பாரூக் உட்பட அஷ்-ஷைக் ஸல்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.