24/11/2022
2022.11.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பில் ஆன்மிக இரவு எனும் தலைப்பிலான ஒரு நாள் செயலமர்வு மாளிகாவத்தை மஸ்ஜித் அந்நூர் பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 25 இளைஞர்கள் பங்குபற்றியதோடு வளவாளர்களாக ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எம். ரிபா ஹஸன் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர். இச்செயலமர்வில் ஆன்மிக மற்றும் தர்பியா வழிகாட்டல்கள், வாழ்க்கைப் பயிற்சி நெறி என்பன இடம்பெற்றதோடு இதனை ஜம்இய்யாவின் கொழும்பு மத்திய கிளை மற்றும் மாளிகாவத்தை மஸ்ஜித் அந்நூர் பள்ளிவாயல் நிர்வாக சபை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.