ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலயம் ஏறாவூர் 5ம் குறிச்சி

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலயம் ஏறாவூர் 5ம் குறிச்சி

ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலயம் ஏறாவூர் 5ம் குறிச்சி மட்டக்களப்பு மாவட்டம் © Verified Official Reg: HA/5/BT/137

மட்டக்களப்பு நகரின் வடக்கே சுமார் 12 கி.மீ தொலைவில் ஏறாவூர் எனும் பழைமை வாய்ந்த கிராமம் அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் எகுளப்பற்று என்றழைக்கப்பட்ட பகுதியின் தலைப்பட்டினமாக ஏறாவூர் விளங்கியதாக நம்பப்படுகிறது. இங்குள்ள 5 ஆம் குறிச்சி எனும் இடத்தில் பிரதான வீதியில் தென்மேற்குப் பக்கத்தில் வீரபத்திரர் ஆலயம் அமைந்துள்ளது.

19/08/2026

ஏரூரில் வீற்றிருக்கும் வீரபத்திரா,
உனை நாடி ஓடி வந்தோமய்யா!
உனைக் காண ஓடி வந்தோமய்யா!

அரோகரா… அரோகரா…
ஶ்ரீ மதுமலர்க்கா வீரபத்திர சுவாமிக்கு அரோகரா!
எங்கள் குலசாமி வீரபத்திரா,
உன் திருவடி நாடி வந்தோமய்யா!
குறைகள் தீர்த்து அருள் புரிவாய்,
எங்கள் குடும்பம் காத்திடுவாய் ஐயா!
ஏரூரின் காவல் தெய்வம் நீயய்யா,
எங்கள் உயிரின் நம்பிக்கையும் நீயய்யா!
அரோகரா… வீரபத்திரா!
அரோகரா… சுவாமியே!

இன்று (27.07.2026) திங்கட்கிழமை, இலங்கை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சின் இந்து சமய விவகாரங்களுக்கா...
27/07/2026

இன்று (27.07.2026) திங்கட்கிழமை, இலங்கை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சின் இந்து சமய விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் திரு. பி. பாலஸ்ரீதரன் அவர்கள் எமது ஶ்ரீமதுமலர்க்கா வீரபத்திர சுவாமி ஆலயத்திற்கு வருகை தந்து ஆலயத்தைப் பார்வையிட்டார்.

இதன்போது, ஆலயத்தின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்த அவர், தம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு உறுதியளித்தார்.

அவரது அன்பான வருகைக்கும், ஆலயத்தின் மீது காட்டிய அக்கறைக்கும், வழங்கிய உறுதிமொழிக்கும் எமது ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓம் வீரபத்திராய நம:

“நீங்களும் உதவ நினைத்தால், உங்களால் இயன்ற அளவில் இந்த புனித திருப்பணிக்கு பங்களித்து, மஹா கும்பாபிஷேகத்தின் புண்ணிய பலனை...
17/07/2026

“நீங்களும் உதவ நினைத்தால், உங்களால் இயன்ற அளவில் இந்த புனித திருப்பணிக்கு பங்களித்து, மஹா கும்பாபிஷேகத்தின் புண்ணிய பலனைப் பெற்றிடுங்கள்.”

'ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 66வது உற்சவம் - 2026'
10/06/2026

'ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 66வது உற்சவம் - 2026'

இலங்கை வாக்கிய பஞ்சாங்கம் - 2026
09/04/2026

இலங்கை வாக்கிய பஞ்சாங்கம் - 2026

29/03/2026

மெய்யடியார்களே,
நடைபெற இருக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எமது ஆலயத்தின் வரலாற்றை மையப்படுத்தியதாக ஒரு நூல் வெளியிடப்பட இருக்கின்றது. இந்நூலில் சேர்த்துக்கொள்ள தங்களிடம் உள்ள எமது ஆலயம் சார்ந்த நிகழ்வுகளில் எடுத்த புகைப்படங்கள், ஆலயத்தின் முன்னைய புகைப்படங்கள், முன்னைய நிர்வாகத்தினரின் புகைப்படங்கள் மற்றும் ஆலயம் பற்றி நீங்கள் செவிவழியாக கேட்ட கதைகள், அற்புதங்கள் என்பவற்றை கீழ்வரும் வட்சப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
சுவேந்- +94768040883 வீகிர்தன் -+94778454671

28/03/2026

எங்கள் ஆலய கும்பாபிஷேகம் முன்னிட்டு
அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற
WhatsApp குழுவில் இனைந்து கொள்ளுங்கள்.
👉 WhatsApp குழுவில் Join செய்ய

25/03/2026
நாளைய தினம், எமது ஆலயத்தில் வர்ணம் பூசும் திருப்பணி பூஜை வழிபாட்டுடன் இனிதே ஆரம்பமாக உள்ளது… காலை 9.00 மணிக்கு இந்நிகழ்வ...
24/03/2026

நாளைய தினம், எமது ஆலயத்தில் வர்ணம் பூசும் திருப்பணி பூஜை வழிபாட்டுடன் இனிதே ஆரம்பமாக உள்ளது… காலை 9.00 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறும்.
அனைத்து பக்தர்களும் கலந்து கொள்ளுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்… 🙏🙏

ஆலய கும்பாபிஷேகம் பற்றிய விஷேட கலந்துரையாடல்
21/03/2026

ஆலய கும்பாபிஷேகம் பற்றிய விஷேட கலந்துரையாடல்

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலயம் ஏறாவூர் 5ம் குறிச்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category