Rudra Gnana Peedam

Rudra Gnana Peedam "Rudra Gnana Peedam” is a Saiva, Non-Profit, Public Charitable Voluntary Spiritual Organization.

02/07/2024

இன்று பிரதோஷம்

புதன்கிழமையில் வரும் பிரதோஷத்தின் சிறப்பு !

சிவனுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதமாகும். பிரதோஷ விரதமிருந்து சிவ பெருமானை வழிபட்டால் பாவங்கள் விலகி, நன்மைகள் பெரும், கஷ்டங்கள் தீரும். அதிலும் சில குறிப்பிட்ட நாட்களில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் கிரக தோஷங்கள் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும்.

தொடர்ந்து பிரதோஷ விரதத்தை 12 வருடங்கள் கடைபிடிப்பவர்கள் சிவ கணங்களில் ஒருவராகி, சிவனுக்கு தொண்டு செய்யும் பாக்கியத்தை பெறுவார்கள். பிரதோஷ விரதத்தை தொடர்ந்து கடைபிடிப்பவர்களுக்கு அனைத்து விதமான துன்பங்களும் நீங்கி, சகல நன்மைகளும் வந்து சேரும்.

பிரதோஷம் :

சிவ பெருமான் மற்றும் பார்வதி தேவியின் பரிபூரண அருளை பெறுவதற்காக கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதமாகும். சுக்லபட்சம், கிருஷ்ண பட்சம் என மாதத்திற்கு இரண்டு பிரதோஷங்கள் வருவது வழக்கம்.

பிரதோஷ விரதம் :

திங்கட்கிழமையில் வருவது சோமவார பிரதோஷம் என்றும், சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தை சனி மகா பிரதோஷம் என்றும் சொல்கிறோம். அதே போல் புதன்கிழமையில் வரும் பிரதோஷமும் அதீத விசேஷமானதாகும். இந்து மத நம்பிக்கையின் படி புதன்கிழமையும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன்கிழமையில் வரும் பிரதோஷத்தன்று விரதமிருந்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.

​புதன்கிழமை பிரதோஷ பலன்கள் :

ஒவ்வொரு கிழமையில் வரும் பிரதோஷத்திற்கும் ஒரு விசேஷ பலன் உண்டு. அந்த வகையில் புதன்கிழமையில் வரும் பிரதோஷமானது பதினாறு வகையான செல்வங்களையும் அள்ளித் தரக்கூடியதாகும். திருமணமாகாதவர்கள் புதன்கிழமையில் வரும் பிரதோஷத்தன்று சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் வேண்டிக் கொண்டு விரதம் இருந்தால் விரைவில் திருமண பாக்கியம் கை கூடி வரும். அது மட்டுமல்ல ஆரோக்கியம், குழந்தை பாக்கியம், குடும்ப ஒற்றுமை ஆகிய பாக்கியங்களும் கிடைக்கும்.

விரதம் இருக்கும் முறை :

புதன்கிழமையன்று வரும் பிரதோஷத்தன்று விரதம் இருக்க நினைப்பவர்கள் செவ்வாய்கிழமை மாலையே குளித்து, சிவ வழிபாட்டை துவக்கி விட வேண்டும். அன்று இரவு எளிமையான உணவை எடுத்துக் கொண்டு, புதன்கிழமை அதிகாலையிலேயே எழுந்து, நீராடி, விரதத்தை துவக்கி விட வேண்டும். உபவாசமாக விரதம் இருப்பது மிகவும் சிறந்தது. முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். ஓம் நம சிவாய மந்திரத்தை கிழக்கு நோக்கி அமர்ந்து 108 முறை சொல்ல வேண்டும்.

சொல்ல வேண்டிய மந்திரம் :

சிவ ஸ்லோகங்கள், சிவ புராணம் ஆகியவற்றை படிப்பது சிறப்பான பலன்களை தரும். மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று, நந்திக்கும் சிவ பெருமானுக்கும் நடக்கும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்ய வேண்டும். நந்திக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபட்டால் தடைகள் அனைத்தும் விலகும். புதன்கிழமையில் வரும் பிரதோஷத்தன்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் புத்தி தெளிவடையும், மனோபலம் அதிகரிக்கும்.

பிரதோஷ காலத்தில் பிரதட்சணம் செய்யும் முறை:

பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சிவபெருமானை வணங்கும் முறையைப் பற்றி கடண்பவன புராணத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

பிரதோஷ தினத்தில் நந்தியை தரிசனம் செய்து அங்கு நின்று சிவனை வணங்கி, இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். (உங்களுக்கு வலது புறம்). பின்னர் மீண்டும் சண்டிகேஸ்வர் உள்ள இடத்திலிருந்து வல சென்று கோமுகி எனப்படும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும் நீர் வெளியே வரும் துவார வழியே தரிசனம் செய்து, அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். மீண்டும் அதே போல் மீண்டும் கோமுகிக்கு சென்றூ தரிசனம் செய்து பின் சண்டிகேஸ்வரர் உள்ள சன்னதிக்கு வந்து தரிசனம் செய்ய வேண்டும். மீண்டும் இதே போல் செய்ய வேண்டும்.

கடைசியில் நந்தியை தரிசனம் செய்த பின்னர் சிவ பெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.

சோமசூத்திர பிரதட்சணம்

இப்படி பரிதட்சணம் செய்து வழிபடுவதற்கு ‘சோமசூத்திர பிரதட்சணம்’ என்று பெயர். சோம சூத்திர பிரதட்சணம் செய்து வழிபட்ட பின்னர் தன்னைத் தானே மூன்று முறை சுற்றிக் கொண்டு, ‘ஆத்ம பிரதட்சணம்’ செய்ய வேண்டும். இப்படி பிரதோஷ தினத்தில் பரிதட்சணம் செய்து வழிபட நம்முடைய பாவங்கள் நீங்கி நற்பலன்கள் அடைப்பெறுவோம்.

பிரதோஷ விரதம் இருந்து சிவபெருமான், நந்தியை வழிபடும் போது நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என சிவபுராணம் படிப்பது அவசியம். யாரை பற்றியும் குற்றம் குறை சொல்லி பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டாம். சிவனின் நாமத்தை மாட்டும் உச்சரியுங்கள். நந்தியை மறைத்துக் கொண்டு சிவ பெருமானை வணங்காதீர்கள். நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவ தரிசனம் பாருங்கள்.

ஹரி ஓம் நமசிவாய

பாணலிங்கம் என்றால் என்ன?கல்லால் செய்யப்பட்ட ஆயிரம் சிவலிங்கங்களுக்கு ஒரு ஸ்படிக லிங்கம் சமமானது. அதே போல் 12 லட்சம் ஸ்பட...
27/06/2024

பாணலிங்கம் என்றால் என்ன?

கல்லால் செய்யப்பட்ட ஆயிரம் சிவலிங்கங்களுக்கு ஒரு ஸ்படிக லிங்கம் சமமானது.
அதே போல் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு சமமானது ஒரு பாணலிங்கம்.

பாக்கியம் அருளும் பாணலிங்கம் - வழிபாடு செய்வது எப்படி?

எல்லா நேரங்களிலும் இறைவனால் மனிதர்களுக்கு நேரடியாக உதவிக்கொண்டிருக்க முடியாது. அதனால்தான் இறைவனும், இயற்கையும் இணைந்து, மனிதர்களின் ஆன்மிக வாழ்விற்கு உதவக்கூடிய வகையில் பல்வேறு பொருட்களை நமக்கு அருளியிருக்கிறார்கள்.

அவை பல்வேறு விதங்களில் ஆச்சரியம் தருவதாகவும், நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருவதாகவும் உள்ளன. இன்றைய நாகரிக வாழ்க்கை சூழலில் அத்தகைய பொருட்கள் பற்றி நாம் தெரிந்துகொள்ளும்போது, நிச்சயம் அது வியப்பளிப்பதாகவே இருக்கும். அதுபோன்ற சாதனங்கள் பற்றி தான் இந்தத் தொடரில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

இயற்கையிலேயே இறையம்சம் பொருந்தியதாக உள்ள பல பொருட்களில் பாணலிங்கம் ஒன்று. இது லிங்க வடிவத்தில், வழவழப்பான தன்மையுடன் இருக்கும் ஒரு வகைக் கல். அவற்றின் மேற்புறத்தில் பூணூல் அணிந்திருப்பது போன்ற ரேகை அமைப்பு இயற்கையாகவே இருக்கும். பாணலிங்கம் என்பது, பாணம் எனப்படும் நீரில் தாமாக உற்பத்தியாகிறது என்ற கருத்தும் இருக்கிறது.

கல்லால் செய்யப்பட்ட ஆயிரம் சிவலிங்கங்களுக்கு, ஒரு ஸ்படிக லிங்கம் சமமானது. அதே போல் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு சமமானது ஒரு பாணலிங்கம் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். தானாகவே தோன்றக்கூடிய பாணலிங்கம், மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதை நதியில் பெருமளவுக்கு கிடைக்கின்றன. பாணலிங்கத்தை முன்வைத்து செய்யப்படும் பல்வேறு பூஜை முறைகளைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.

*பாணாசுரன் வழிபட்ட லிங்கம் :*
************************************

பாணாசுரன் என்ற அசுரன், சாஸ்திரங்களின் உள்ளர்த்தங்களை, அதற்குத் தகுந்த பெரியவர்களிடம் கேட்கும் பழக்கம் கொண்டவன். அவ்வாறு கேட்டதன் வாயிலாக, சிவலிங்க வழிபாட்டின் மகிமையையும், சிவபூஜை செய்வதன் பலன்களையும் மானசீகமாக உணர்ந்து, அதைச் செய்ய விரும்பினான். அதற்காக சிவபெருமானை நோக்கி கடுமையான தவத்தில் ஈடுபட்டான்.

அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவன் முன்பாக தோன்றி, ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.

பாணாசுரன், சிவபெருமானிடம் ‘ஆயிரம் தலைகள் கொண்டும், இரண்டாயிரம் கைகளுடனும் சர்வேஸ்வரனான உம்மை வழிபட விரும்புகிறேன். அந்த வழிபாட்டைச் செய்வதற்காக எனக்கு 14 கோடி சிவலிங்கங்கள் வேண்டும்’ என்று கேட்டான்.

அவனது வேண்டுதலின்படியே சிவபெருமான் வரத்தை அளித்தார். தனது பூத கணங்களின் மூலமாக, பாணாசுரனுக்கு 14 கோடி சிவலிங்கங் களைத் தந்தருளினார். அதைக் கொண்டு பாணா சுரன் பல காலமாக வழிபாடு செய்தான். அவன் வழிபட்ட சிவலிங்க திருமேனிகள் பாணலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.

புண்ணிய தீர்த்தக்கரைகள்

பாணாசுரன், தான் வழிபட்ட சிவலிங்கங்களை புண்ணிய தலங்களான #ஸ்ரீசைலம், #கங்கை, #நீலகண்டம், #நேபாளம், #யமுனை, #நர்மதை, #கன்னியாகுமரி முதலான புண்ணிய தீர்த்தங்கள் கொண்ட வழிபாட்டு தலங்களில் ஸ்தாபித்து வழிபட்டான்.

அத்தகைய சிவலிங்கங்கள் தற்போதும் பரவலாக காணப்படுகின்றன. சிறிய முந்திரி பருப்பு அளவில் இருக்கும் லிங்க வடிவம் முதல், ஒரு அடி நீளத்துக்கும் மேல் அளவு கொண்ட லிங்கங்கள் வரையில் அவனால் வழிபடப்பட்டன. அவன் மந்திரங்கள் கொண்டு சிவ பூஜை செய்திருந்த காரணத்தால், அந்த லிங்கங்களில் எல்லா காலத்திலும் சிவசான்னித்தியம் இருப்பதாக ஐதீகம்.

நர்மதேஸ்வர சிவலிங்கம் எனப்படும் பாணலிங்கத்தில், வெடிப்பு அல்லது பிளவுகள் இருந்தால் அவற்றை வைத்து பூஜைகள் செய்வது கூடாது. பாணலிங்கம் அல்லாத வேறு வகை லிங்க வடிவங்களும் ஆங்காங்கே பரவலாக காணப்படுகின்றன. தற்காலத்தில் புனிதமான நர்மதை நதியின் படுகையில் கிடைக்கும் பாணலிங்கங்கள் விலை மதிப்பற்றவையாக கருதப்படுகின்றன. அவை கீறல் போன்ற ரேகையுடனும், பிந்து வட்டம், பளபளப்பு, கருமையான நாவல்பழம் போன்ற நிறத்தோடு நீள் உருண்டை வடிவம் கொண்டதாகவும் இருக்கின்றன. அத்தகைய பாணலிங்கங்களே வழிபாட்டிற்கு உகந்ததாக உள்ளன.

பஞ்சாயதான பூஜை

நமது சம காலத்தில் வாழ்ந்து, சித்தியடைந்த மகான் ஒருவரால் பெரிதும் போற்றப்பட்ட வழிபாட்டு முறை ‘பஞ்சாயதான பூஜை’ என்பதாகும். அந்த பூஜை முறையில் ஐந்து தெய்வங் களின் அருளை, ஒரே நேரத்தில் அடைவது சாத்தியமாகும். அந்த பூஜையானது தற்போது வழக்கத்தில் அவ்வளவாக நடைமுறையில் இல்லை. பாணலிங்கம் உள்ளிட்ட மற்ற நான்கு தெய்வ சான்னித்தியம் கொண்ட கற்களை பயன்படுத்தி செய்யப்படும் பூஜை அது. நமது நாட்டின் முக்கியமான இடங்களிலிருந்து பெறப்படும் தெய்வ அம்சம் பொருந்திய கற்களை பூஜைக்கு பயன்படுத்துவதால், அந்தந்த இடங்களுக்கு தீர்த்த யாத்திரை செய்த பலனும் கிடைக்கும்.

இந்த பூஜையில் வைக்கப்படும் ஐந்துவித தெய்வாம்சம் பொருந்திய கற்கள் பாணலிங்கம், ஸ்வர்ணமுகி சிலா, சாளக் கிராமம், ஸ்படிகம் மற்றும் சோணபத்ரம். அவற்றில் ஈஸ்வர அம்சம் கொண்ட பாணலிங்கம், நர்மதை நதியின் ஓங்கார குண்டம் பகுதியில் கிடைக்கிறது. பார்வதியின் அம்சம் கொண்டு தங்க ரேகையுடன் கூடிய ஸ்வர்ணமுகி சிலா என்ற கல்லானது, ஆந்திராவில் பாயும் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. மகாவிஷ்ணுவின் அம்சமான சாளக்கிராமம், நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கிறது. சூரியதேவனின் அம்சமாக உள்ள ஸ்படிக கல்லானது, தஞ்சாவூருக்கு அருகில் உள்ள வல்லத்தில் கிடைக்கிறது. விநாயகரின் அம்சம் பொருந்திய சோணபத்ரம் என்ற கல், கங்கையில் கலக்கும் சோணா நதியில் கிடைக்கிறது.

பஞ்சாயதான பூஜையை செய்வதற்கு அதிகமாக நேரம் தேவைப்படுவதில்லை. பூஜைக்கான இடம், பொருட்கள் ஆகிய அனைத்தும் எளிமையான முறைகளைக் கொண்டதாக உள்ளது. ஐந்து வகையான கற்களுக்கும் சந்தனம், குங்குமம் அட்சதை ஆகியவற்றை வைத்து, அர்ச்சனை மற்றும் நைவேத்தியம் செய்து பூஜையை முடிக்கலாம்.

பாணலிங்கத்துக்கு வில்வம், சாளக்கிராமத்துக்கு துளசி, ஸ்வர்ணமுகி சிலாவுக்கு சிவந்த மலர்கள், சோணபத்திரத்துக்கு அருகம்புல், ஸ்படிகத்துக்கு தாமரை ஆகியவற்றை பூஜை மற்றும் அர்ச்சனைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

அவை கிடைக்காத சமயங்களில் அட்சதை கலந்து வைத்துக்கொண்டு பூஜிக்கலாம். நைவேத்தியமாக உலர்ந்த திராட்சைகளை வைத்துக்கொள்ளலாம்.

எங்கும் செய்யலாம்

நித்திய பூஜையாக பஞ்சாயதான பூஜையை செய்து வருபவர்கள், வெளியூர் செல்ல நேரும்போது அங்கும் அதைத் தொடர்ந்து செய்யலாம். மேற்கண்ட பொருட்கள் சிறிய அளவில்இருப்பதால், சுலபமாக எடுத்துச்சென்று பயன்படுத்தலாம். வீடுகளில் பூஜை செய்யும்போது சுத்தான்னம் நைவேத்தியம் செய்வது நல்லது.

மேற்கண்ட பூஜையானது நமது உடலிலும், வெளியிலும் பரவியிருக்கும் பஞ்சபூத சக்திகளை முறைப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம் என்பது கூடுதல் செய்தி.

அதாவது பாணலிங்கம் பூமி அம்சமாகவும், சாளக்கிராமம் ஆகாய அம்சமாகவும், ஸ்வர்ணமுகி சிலா நெருப்பின் அம்சமாகவும், சோணபத்ரம் நீரின் அம்சமாகவும், ஸ்படிகம் வாயுவின் அம்சமாகவும் இருப்பதாக ஐதீகம்.

நமது உடலில் செயல்படும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று கூறுகளை அடிப்படையாக வைத்து இயங்கும் பஞ்சபூத இயக்கங்கள், மேற்கண்ட பூஜையால் சிறப்பாக செயல்படும் என்பது ஆன்மிக நம்பிக்கையாகும்.

ஆதார சக்கர சிவலிங்கம்

மனித உடலில் அமைந்துள்ளதாக கருதப்படும் 7 ஆதார சக்கரங்களை குறிப்பதுபோலவும், சிவலிங்கங்கள் பூமியில் அமைந்திருக்கின்றன.

மூலாதார சக்கரத்தை குறிக்கும் திருவாரூர், சுவாதிஷ்டான சக்கரத்தை குறிக்கும் திருவானைக்காவல், மணிபூரகம் எனப்படும் நாபி ஸ்தானத்தை குறிக்கும் திருவண்ணாமலை, இதயமத்தியில் உள்ள அனாகத சக்கரத்தை குறிக்கும் சிதம்பரம், விசுத்தி எனப்படும் கழுத்தின் கீழ்ப்புற சக்கரத்தை குறிக்கும் காளஹஸ்தி,
புருவ மத்தியான ஆக்கினை சக்கரத்தை குறிக்கும் காசி, பிரம்மாந்திரம் எனப்படும் உச்சந்தலையாக கயிலாசம்,
துவாதசாந்தம் எனப்படும் உச்சிக்கு மேல் 12 அங்குலத்தில் உள்ள மையம் மதுரை
என்பதாக அவை இருக்கின்றன.

மேற்கண்ட தலங்களில் பொங்கும் இறைவனது அருளானது உலகம் முழுவதும் பரவுவதாக அறியப்படுகிறது. பாணலிங்கமானது மனித உடலில் சூட்சுமமாக இயங்கும் அந்த சக்கரங்களை நல்ல முறையில் இயங்க வைப்பதாக ஆன்மிக ஆன்றோர்கள் கருதுகிறார்கள்.

பூஜை முறை

சிவ பஞ்சாயதான பூஜை:-

சிவபூஜை செய்பவர்கள் பாணலிங்கத்தை மத்தியில் வைக்க வேண்டும். சூரியனுக்குரிய ஸ்படிகத்தை தென்கிழக்கிலும், கணபதிக்குரிய சோணபத்திரத்தை தென்மேற்கிலும், அம்பாளுக்கு உரிய ஸ்வர்ணமுகி சிலாவை வடமேற்கிலும், விஷ்ணுவுக்குரிய சாளக்கிராமத்தை வடகிழக்கிலும் வைத்து பூஜையை செய்ய வேண்டும்.

அம்பாள் பஞ்சாயதான பூஜை:-

உலக அன்னை பார்வதி தேவிக்கான சக்தி பூஜை செய்பவர்கள் ஸ்வர்ணமுகிசிலாவை மத்தியில் வைக்க வேண்டும். சூரியனுக்கு உரிய ஸ்படிகத்தை வடமேற்கிலும், கணபதிக்குரிய சோணபத்திரத்தை தென்மேற்கிலும், சிவனுக்குரிய பாணலிங்கத்தை தென்கிழக்கிலும், விஷ்ணுவுக்கு உரிய சாளக்கிராமத்தை வடகிழக்கிலும் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

விஷ்ணு பஞ்சாயதான பூஜை:-

விஷ்ணு பூஜை செய்பவர்கள் சாளக்கிராமத்தை மத்தியில் வைக்க வேண்டும். மேலும், சூரியனுக்கான ஸ்படிகத்தை தென்மேற்கிலும், கணபதிக்கு உரிய சோணபத்திரத்தை தென்கிழக்கிலும், அம்பாளுக்கு உரிய ஸ்வர்ணமுகிசிலாவை வடமேற்கிலும், சிவனுக்கு உரிய பாணலிங்கத்தை வடகிழக்கிலும் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

கணபதி பஞ்சாயதான பூஜை:-

கணபதி பூஜை செய்பவர்கள் சோணபத்திரத்தை மத்தியில் வைக்க வேண்டும். சூரியனுக்குரிய ஸ்படிகத்தை தென்மேற்கிலும், அம்பிகைக்கு உரிய ஸ்வர்ணமுகிசிலாவை வடமேற்கிலும், மஹாவிஷ்ணுவுக்கு உரிய சாளக்கிராமத்தை வடகிழக்கிலும், சிவ அம்சம் பொருந்திய பாணலிங்கத்தை தென்கிழக்கிலும் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

சூரிய பஞ்சாயதான பூஜை:-

சூரிய பூஜை செய்பவர்கள் ஸ்படிகத்தை மத்தியில் வைப்பதோடு, மஹாவிஷ்ணுவுக்கு உரிய சாளக்கிராமத்தை தென்மேற்கிலும், அம்பாளுக்குரிய ஸ்வர்ண முகிசிலாவை வடமேற்கிலும், ஈஸ்வர அம்சம் கொண்ட பாணலிங்கத்தை வடகிழக்கிலும், கணபதியின் சோணபத்திரத்தை தென்கிழக்கிலும் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

ஓம் நமசிவாய

பிரதி: மாலை மலர்

ருத்ர ஞான பீடத்தில் நேற்று இடம்பேற்ற பிரதோஷ பூசைஓம் நமசிவாய
20/06/2024

ருத்ர ஞான பீடத்தில் நேற்று இடம்பேற்ற பிரதோஷ பூசை

ஓம் நமசிவாய

வீடுகள் தோறும் சிவ வழிபாட்டை கொண்டு செல்லல்!முதற்கட்டமாக வீட்டில் வைத்து வணங்கக்கூடிய உள்ளங்கை அளவுடைய 108 சிவலிங்கங்களை...
07/06/2024

வீடுகள் தோறும் சிவ வழிபாட்டை கொண்டு செல்லல்!

முதற்கட்டமாக வீட்டில் வைத்து வணங்கக்கூடிய உள்ளங்கை அளவுடைய 108 சிவலிங்கங்களை நர்மதா நதிக்கரையில் இருந்து எடுத்து பல புனித நதிகளில் அபிஷேகம் செய்து பல புனித தலங்களில் பூஜைக்காக வைத்து எடுத்து வந்துள்ளேன்!

சிவ வழிபாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

இதன் மூலம் பெறப்படும் பணம் ருத்ர ஞான பீடத்தின் நர்மதேஸ்வரர் ஆலய கட்டுமான பணிக்கே பயன்படுத்தப்படும்.

தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவும்
0743111960

ஓம் நமசிவாய

நர்மதேஸ்வருக்கு மகா பிரதோஷ பூசைஓம் நமசிவாய
06/04/2024

நர்மதேஸ்வருக்கு மகா பிரதோஷ பூசை

ஓம் நமசிவாய

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்ஓம் நமசிவாய
15/01/2024

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

ஓம் நமசிவாய

யார் யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சங்களை அணியலாம்?ஒவ்வொருவரும் தங்களின் பிறந்த ராசி நட்சத்திரத்திற்கு ஏற்ப முகம் கொண்...
20/10/2023

யார் யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சங்களை அணியலாம்?

ஒவ்வொருவரும் தங்களின் பிறந்த ராசி நட்சத்திரத்திற்கு ஏற்ப முகம் கொண்ட ருத்ராட்சங்களை அணிவதாலே அதன் பூரண பலன்களை பெற முடியும்.

ஒவ்வொரு முக ருத்ராட்சத்திற்கும் உரிய வணக்க முறைகள் அவற்றை எவ்வாறு அணிவது என்பது எனது இன்னொரு பதிவில் உள்ளது.

https://m.facebook.com/story.php?story_fbid=282032004738450&id=100087949580768&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=280093108265673&id=100087949580768&mibextid=Nif5oz

அஸ்வினி - ஒன்பது முகம்.
பரணி - ஆறுமுகம், பதிமூன்று முகம். கார்த்திகை - பனிரெண்டு முகம். ரோகிணி - இரண்டு முகம்.
மிருக சீரிஷம் - மூன்று முகம். திருவாதிரை - எட்டு முகம்.
புனர்பூசம் - ஐந்து முகம்.
பூசம் - ஏழு முகம்.
ஆயில்யம் - நான்கு முகம்.
மகம் - ஒன்பது முகம்.
பூரம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.
உத்திரம் - பனிரெண்டு முகம். ஹஸ்தம் - இரண்டு முகம்.
சித்திரை - மூன்று முகம்.
சுவாதி - எட்டு முகம்.
விசாகம் - ஐந்து முகம்.
அனுஷம் - ஏழு முகம்.
கேட்டை - நான்கு முகம்.
மூலம் - ஒன்பது முகம்.
பூராடம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.
உத்திராடம் - பனிரெண்டு முகம். திருவோணம் - இரண்டு முகம். அவிட்டம் - மூன்று முகம்.
சதயம் - எட்டு முகம்.
பூரட்டாதி - ஐந்து முகம்.
உத்திரட்டாதி - ஏழு முகம்.
ரேவதி - நான்கு முகம்

ஓம் நமசிவாய
Somasuriyam Thirumaran Somasuriyam ThirumaranSomasuriyam ThirumaranSomasuriyam ThirumaranSomasuriyam Thirumaran

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார்    Somasuriyam Thirumaran
19/10/2023

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார்



Somasuriyam Thirumaran

நவ ராத்திரி
15/10/2023

நவ ராத்திரி

சிவசின்னங்கள் - உருத்திராட்சமும் அதன் மகிமையும்உருத்திராக்கம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் உருத்திராக்கம் வெறும் நாகரீகத்...
15/10/2023

சிவசின்னங்கள் - உருத்திராட்சமும் அதன் மகிமையும்

உருத்திராக்கம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் உருத்திராக்கம் வெறும் நாகரீகத்திற்காக அணிகிற அணிகலன் அல்ல. எங்கெல்லாம் உருத்திராக்கம் வணங்கப் படுகின்றதோ அங்கெல்லாம் திருமகள் உறைகிறாள். உருத்திராக்கத்தை அணிவதால் ஒருவர் அகால மரணத்திலிருந்து தப்பலாம். உருத்திராக்கம் குண்டலினியை (ஆதம இன்ப முனை) எழுப்புவதில் துணை புரிகின்றது. இவ்வுலகப்பேறு, விண்ணுலகப்பேறு ஆகியவற்றை அடைவதில் உருத்திராக்கம் உதவுகின்றது. இது முழுக் குடும்பத்தையும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழச் செய்யும். உருத்திராக்கம் ஓர் ஆபூர்வமான மூலிகைப் பொருள் என்பது ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும். உருத்திராக்கம் அதனுடைய உயிரியல் மருத்துவப் (Bio-medical) பண்புகளுக்கும், மன அழுத்தம், அதி உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் தன்மைக்கும் பெயர் போனது. உருத்திராக்கம் சுய ஆற்றலையும், சுய அன்பையும் மேம்படுத்த உதவும். அணிவோரின் உள் ஒளியை இது மேலோங்கச் செய்கிறது. இது பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்களைக் குணப்படுத்த வல்லது. குறிப்பிட்ட முறையில், மருத்துவ விதி முறைகளைக்கேற்பக் கையாளப்பட்டால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் கூடக் குணப்படுத்தும். இது அணிவோருக்கு மன அமைதியையும், மன ஊக்கத்தையும், புத்திக் கூர்மையும் அளிக்கிறது. 38 வகையான உருத்திராக்கத்தில், 21 வகை மிக பிரசித்தம். முகத்தைப் பொறுத்தே ஒரு முகம், இரு முகம் என்று வரிசைப் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.

ஒரு முகம்
மந்திரம் - ஓம் நமச்சிவாய, ஓம் ஹரீம் நமஹ

ஒரு முகமுடைய உருத்திராக்கம் சூரியனால் ஆளப்படுகிறது. இந்த உருத்திராக்கம் ஏனைய எல்லா முகங்களையுடைய உருத்திராக்கங்களுக்கும் அரசனாகையால்,இது தூய உணர்வைக் (Pure consciousness) குறிக்கிறது. அணிபவருக்குப் போகமும் மோட்சமும் கிட்டும். இவர் ராஜா ஜனகர் போன்று வாழ்வர். இவர் வேண்டும் போது எல்லா சுகங்களையும் அனுபவிப்பர். எனினும் பற்றற்றவராய் இருப்பர். ஒரு முகத்து உருத்திராக்கம், நோய்களைச் சரியாகக் கண்டறிவதற்கும், அறுவை சிகிச்சையில் வெற்றி பெறுவதற்கும் உதவுவதால் மருத்துவர்களுக்கு இது மிகவும் உகந்ததாகும்.

இரண்டு முகம்
மந்திரம் - ஸ்ரீ கௌரி சங்கராய நமஹ, ஓம் நமஹ

இரு முகமுடைய உருத்திராக்கத்தை ஆளும் கோள் சந்திரன். இது பகவான் சிவனும், தேவி பார்வதியும் (சக்தி) இணைந்த உருவமான அர்த்த நாரீஸ்வரரைக் குறிக்கிறது. (மாதொரு பாகன்) இந்த உருத்திராக்கம் அணிவோருக்கு 'ஒற்றுமை' (unity) உணர்வை அளிக்கும். இந்த ஒற்றுமை குரு-சிஷ்யன், பெற்றோர்-குழந்தைகள், கணவன்-மனைவி, நண்பர்களிடையே உள்ள தொடர்பைக் குறிக்கலாம். ஒருமைத் தன்மையை நிலை பெறச் செய்வது இதன் தனித்தன்மையாகும்.

மூன்று முகம்
மந்திரம் - ஓம் கிளீம் நமஹ

இந்த மும்முகமுள்ள உருத்திராக்கதை ஆளும் கோள் செவ்வாய்.இது தீக்கடவுளை குறிக்கிறது. எல்லாப் பொருட்களையும் உண்ட பின்னரும் தீ தூய்மையாக இருப்பது போல் மூன்று முகமுள்ள உருத்திராக்கத்தை அணியவரும் அருள் கிட்டிய போது, தனது வாழ்க்கையில் பாவங்களில், தவறுகளிலிருந்து விடுபட்டுத் தூய நிலையை அடைகின்றார். இந்த மூன்று முக உருத்திரக்கம் தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex) உள்ளார்ந்த பயம் (Subjective fear) குற்ற உணர்வு (Guilt) மனச்சோர்வு போன்றவற்றால் துன்பப்படுபவர்களுக்கும் உகந்ததாகும்.

நான்கு முகம்
மந்திரம - ஓம் ஹரீம் நமஹ

இந்த நான்கு முகமுள்ள உருத்திராக்கத்தை ஆளும் கோள் புதன். இது பிரம்மனைக் குறிக்கிறது. அணிவோருக்கு அருள் கிடைத்த போது ஆக்க சக்தி கிட்டுகிறது. மாணவர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நற்பயன் அளிக்க வல்லது. ஞாபகசக்தி, கூர்ந்த மதி புத்தி சாதுர்யம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. நான்முக உருத்திராக்கங்கள் மூன்றினை வலது கையில் கட்டினால் அவர் முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது.

ஐந்து முகம்
மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ

ஐந்து முகங்களுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் வியாழன். இது மங்களகரத்தின் குறியீடான சிவனை குறிக்கும். இந்த ஐந்து முகமுடைய உருத்திராக்க மாலை அணிதோருக்கு உடல் நலம், அமைதி ஆகியன கிட்டும். இது ஒருவரின் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கிறது. இந்த உருத்திராக்க மாலையை ஜபம் செய்வதற்கும் பயன்படுத்துவர். இந்த மாலையை அணிவோருடைய மனம் அமைதியாக இருக்கும். அத்துடன் இதை அணிபவர்களுக்கு அகால மரணம் ஏற்படாது என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை.

ஆறு முகம்
மந்திரம் -ஸ்வாமி கார்த்திகேயாய நமஹ

இந்த ஆறு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் வெள்ளி. இந்த உருத்திராக்கம் சிவனின் இரண்டாவது மகனான கார்த்திகேயக் கடவுளைக் குறிக்கும். இதை அணிந்து வேண்டியோருக்கு அறிவு, மேம்படுத்தப்பட்ட புத்தி, மனத்திட்பம், திடமான மனம் ஆகியவை அருளப்படும். இந்த ஆறு முக உருத்திராக்கம், மேலாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், ஆகியோருக்கு உகந்தது. இது ஒருவரின் பிறப்புறுப்புகளை ஆள்கிறது.

ஏழு முகம்
மந்திரம் - ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக

இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் சனி. இது தேவி திருமகளைக் குறிக்கும். இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள் பாலிக்கப்படும். உடல் தொடர்பான துன்பங்கள், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவற்றால் வருத்த முற்றிருப்போர் இந்த உருத்திராக்கத்தை அணிதல் வேண்டும். இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம், பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுத்துவதுடன் அவர் மகிழ்வாகக் கழிக்க முடிகிறது.

எட்டு முகம்
மந்திரம் - ஒம் ஹீம் நமஹ, ஓம் கணேஷாய நமஹ

இந்த எட்டு முகமுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் இராகு. இது பகவான் கணேசரைக் குறிக்கிறது. இது முயற்சிகளிலும் தடைகளை நீக்கி வெற்றியைத் தருகிறது. அணிவோருக்கு ரித்திகள் (Riddhis), சித்திகள் (Siddhies) ஆகிய எல்லாப் பேறுகளையும் அளிக்கும். இதை அணிவோரின் எதிரிகள் அழிந்து போவார்கள். அதாவது இவர்கள் எதிரிகளின் மனத்தையும், நோக்கங்களையும் இந்த உருத்திராக்கம் மாற்றி விடும்.

ஒன்பது முகம்
மந்திரம் - நவ துர்க்காயை நமஹ, ஓம் ஹரீம் ஹும் நமஹ

இந்த ஒன்பது முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் கேது. இது தேவி துர்க்கையைக் (சக்தி) குறிக்கிறது. இதை அணிந்து வணங்குபவர்களுக்கு அன்னைக் கடவுள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு அதிக சக்தி, ஆற்றல், செயல் திறம், அச்சமின்மை ஆகியவற்றை அளிப்பாள்.

பத்து முகம்
மந்திரம் - ஸ்ரீ நாராணாய நமஹ,ஓம் ஹ்ரீம் நமஹ

இந்த பத்து முகமுள்ள உருத்திராக்கத்திற்கு ஆளும் கோள் என்று ஒன்றுமில்லை. கோள்களினால் ஏற்படும் தீய பலன்களையும் இது சாந்தப்படுத்தும். பத்துத் திசைகளினதும், பத்து அவதாரங்களிலும் செல்வாக்கு இந்தப் பத்துமுக உருத்திராக்கத்தில் உண்டு. ஒருவரின் உடலுக்கு இது கேடயம் போல் செயல்பட்டு, எல்லாத் தீய சக்திகளையும் விரட்டுகிறது. இதை அணிந்து வணங்குவோர்களுடைய குடும்பம் பரம்பரை பரம்பரையாகச் செழிப்புற்று வாழும்.

பதினோரு முகம்
மந்திரம் - ஒம் ஸ்ரீ ருத்திர நமஹ, ஒம் ஹரீம் நும் நமஹ

இது பகவான் அனுமானைக் குறிக்கும். இது வணங்கி வேண்டியோருக்கு அறிவு, நேர்மையான நீதி ஆற்றல் மிக்க சொல்லாட்சி, துணிவுள்ள வாழ்க்கை, வெற்றி ஆகியனவற்றை அருளும். எல்லாவற்றிற்கும் மேலாக, விபத்தினால் மரணம் ஏற்படுவதை இது தடுக்கும். இதை அணிவோர் அச்சமற்றவராக ஆவார். தியானத்திற்கும் இது உதவும்.

பன்னிரண்டு முகம்
மந்திரம் - சூர்யாய நமஹ ஓம் க்ரோன் க்ஷோண் ரவுண் நமஹ

இது சூரியக் கடவுளைக் குறிக்கும். இதை அணிவோர் அளவற்ற நிர்வாகத் திறனைப் பெறுவர். அத்துடன் சூரியனின் குணங்களையும் பெறுவர். இக்குணங்களால் ஒருவர் என்றும் பிரகாசிக்கும் ஒளியுடனும், பலத்துடன், பிறரை ஆட்சி செய்து வருவர். இந்தப் பன்னிரண்டு முக உருத்திராக்கம் மந்திரிகள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள் போன்றோருக்கு உகந்தது. இது வியக்கத்தக்க வகையில் பயனளிக்க வல்லது.

பதின்மூன்று முகம்
மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ

இது இந்திரனைக் குறிக்கும். தொழுது வேண்டியவர்களுக்கு மனிதன் விரும்பத்தக்க எல்லா சுகங்களையும் இது அளிக்கும். செல்வம், மாட்சிமை ஆகியவற்றை அளிப்பதுடன் உலகத்து ஆசைகள் அனைத்தும் இது நிறைவேற்றும். அத்துடன் அஷ்டமா சித்திகளையும் இது அளிக்க வல்லது. இதை அணிவோரை காமக்கடவுள் விரும்புவர். மகிழ்ச்சி அடைந்த காமக்கடவுள், அணிவோருக்கு உலகத்து ஆசைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.

பதினான்கு முகம்
மந்திரம் - ஓம் நமஹ சிவாய

இந்தப் பதினான்கு முகமுடைய உருத்திராக்கமே அதி உயர்ந்த விலை மதிப்பற்ற தெய்வீக மணியாகும். அதுவே தேவ மணியுமாகும். இந்த உருத்திராக்கம் அணிவோருடைய ஆறாவது புலனை விழிக்கச் செய்கிறது. அதனால் அவர் எதிர்கால நிகழ்வுகளை முன் கூட்டியே அறிகின்றார். இதை அணிவோர் தாம் எடுத்த முடிவுகளில் ஒரு போதும் தோல்வியடைவதில்லை. இதை அணிவோர் இடர்கள், துன்பங்கள், கவலைகள் எல்லாவற்றையும் கடந்து விட முடிகிறது.மேலும், அணிவோருக்குப் பாதுகாப்பையும் எல்லாச் செல்வங்களையும் இது கொடுக்கிறது.

பதினைந்து முதல் இருபத்தொன்று வரை உள்ள முகங்கள் பண்டையக் கால முனிவர்கள் இந்த உருத்திராக்க மணிகளை பூஜை மேடையில் வைக்கும்படியும் அதன் வழி முழுக் குடும்பத்திற்கும் செழிப்பைக் கொடுக்கின்றன. பகவான் உருத்திரனின் அருளைப் பெறும்படியும் அறிவுரை கூறியுள்ளனர்.இப்படி ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.

கௌரி சங்கர்
மந்திரம் - ஓம் கெளரி சங்கராய நமஹ

இயல்பாகவே ஒன்றாக இணைந்த இரு உருத்திராக்கங்கள் கௌரி சங்கர் என அழைக்கப் படுகின்றன. இது சிவனும் பார்வதியும் சேர்ந்த உருவானதாகக் கொள்ளப் படுகின்றது. இது கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள உதவுகிறது. எனவே இந்த உருத்திராக்கம் குடும்பத்தில் அமைதியும் சுகமும் விளங்க வைக்கும் சிறந்த பொருளாக கருதப்படுகிறது. கௌரி சங்கர் உருத்திராக்கத்தை ஒருவர் வழிப்படும் இடத்தில் வைத்துத் தொழுது வந்தால் அவருக்கு ஏற்படும் துன்பம், வேதனை, உலகியல் தடைகள் எல்லாம் அழிகின்றன. குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் மேலோங்குகின்றன.

உருத்திராக்கத்தை 3, 4, 5, 6, எண்ணிகையில் வளையமாகக் கோர்த்து அணிவர். கழுத்தில் அணியும் மாலைகள் 27, 54, 108 என்ற கணக்கில் இருக்கும். கழுத்தில், கையில் அணியும் உருத்திராக்கம் அங்குபங்சர் போல் செயல்பட்டு பயன் அளிக்கும்.

மந்திரமும் எண்ணும்
"ஈசான மந்திரத்தால் சிகையில் நாற்பதும், சிரசில் ஆறும் தரிக்க,

தற்புற மந்திரத்தால் ' செவியொன்றுக்கு ஆறு வீதம் தரிக்க;

கண்டத்தில் அகோர மந்திரத்தால் 32 தரிக்க;

உதிரத்தில் [மார்பில்] 49 அணிக;

தோள்களில் 16ம் அணிக;

மதரத்து 12 ம் அணிக;

பிரசாத மந்திரத்தால் முன்கைக்கு 8 ம்

மார்பில் மாலையாக 108 மணிகளை அணிந்திடுக;
இது செய்வார் கருவுட் புகார். [பிறவாமை பெறுவர்)

மணி அளவு
பெரும்பாலும் இப்போது பலரும் மிகச் சிறிய அளவுடைய மணிகளையே விரும்பிப் பூணுகிறார்கள். எனினும் உருத்திராக்க விசிட்டம் என்னும் நூலில் எந்த அளவு உருத்திராக்க மணி சிறப்புடையது என்று கூறப் பெற்றுள்ளது.

நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமமானது;

இலந்தைக் கனிஅளவுள்ளது மத்திமம்;

கடலை அளவுடையது அதமம்.

இதனைப் பின்வரும் வெண்பா;
"உத்தமமே மலகத் தின்கனிக்கொப் பானகண்டி;
மத்திம மாகும் இலந்தை வன்கனிக்கொப்பு
இத்தலத்துள் நீசஞ் சணவித் திணை யென்ன வேநினைக;
பாசவிதம் பாற்ற நினைப் பார். "

செபமாலைக்குரிய மணிகள்
இரண்டு முகமுடையதும் மூன்று முகமுடையதும் செபமாலைக்கு உரியது அன்று; பத்து முகமும் பதின்மூன்று முகமும் பழுதுடையது; மற்றனைத்தும் உத்தமம்.

இதனைக் கூறும் பாடல்:
இரண்டுமுகக் கண்டிசெப மாலைக் கிசையாது
இரண்டுடன் ஒன்றும் இசையாது - இரண்டுடனே
பத்துமுக மும்பதின் மூன்றும் பழுது;
மற்றனைத்தும் உத்தம மாமென்றுணர்.

செபத்துக்குரிய விரல்
அங்குஷ்டத்தினால் மோட்சமும், தர்ச்சனியால் சத்துரு நாசம், மத்திமையால் பொருட்பேறும், அனாமிகையால் சாந்தியும், கனிஷ்டையால் இரட்சைணையும் . [அங்குஷ்ட- கட்டை விரல்; தர்ச்சனி- ஆள்காட்டி விரல்; மத்திமை-நடு விரல்; அனாகிகை- மோதிர விரல்; கனிஷ்டை- சுண்டு விரல்]

செபிக்கும் ஒலி
செபிக்குங்கால் மானதம் மந்தம் ஒலி என மூன்று விதமுண்டு.
மானதமாக உச்சிப்பது உத்தமம்;
மானதம் முத்திக்கு ஏது;
மந்தம் புத்தி சித்திக்கும்;
இழிதொழிலரே ஒலித்து உச்சரிப்பர்.

1008 செபித்தல் உத்தமம்; அதிற்பாதி மத்திமம்; 108 செபித்தல் அதமம்
"வலது கரத்தில் ஜப மாலை கொண்டு - துணியால் மறைத்துக் கொள்க; தனது குருவும் அதனைக் காண்டல் கூடாது" என்பது விதி.

ஓம் நமசிவாய

Somasuriyam Thirumaran

Address

Thirupperunthurai
Batticaloa
30000

Telephone

+94652057878

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rudra Gnana Peedam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Rudra Gnana Peedam:

Share