27/08/2026
இன்றைய தியானம் 27-08-2026
கிரியையில்லா விசுவாசம்
"...கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது." -யாக்கோபு 2:26
இன்றைய வேதப் பகுதியில் சீஷர்களிடம் கிரியைகளில்லாத விசுவாசம் காணப்பட்டதை காண்கிறோம். வனாந்தரத்தில் ஜனங்கள் வெகு நேரம் பட்டினியாயிருந்ததைக் குறித்து அக்கறைப்பட்டு, அவர்களை உணவு வாங்கிக் கொள்ள அருகிலிருந்த கிராமங்களுக்கு அனுப்பி விட வேண்டுமென்ற ஆலோசனையை, எல்லாவற்றையும் அறிந்த ஆலோசனைக் கர்த்தரிடமே சொல்லுகிறார்கள். நாமும் கூட நாம் விரும்பும் வகையில் இயேசு செயல்படும்படியாக அவருக்கே ஜெபத்தில் ஆலோசனை கொடுக்கிறோம் அல்லவா? இது இயேசு சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாகச் செய்கிறவர் என்பதை நாம் விசுவாசிக்கவில்லை என்பதையே காட்டுகின்றன.
இயேசு சீஷர்களிடம் ஜனங்களுக்கு போஜனம் கொடுக்கும்படி கூறிய போது, கொஞ்சங் கொஞ்சம் கொடுத்தாலும், இருநூறு பணத்துக்கு அப்பம் வாங்கினாலும் போதாதே என்று பிலிப்பும் (யோ.6:7) மற்ற சீஷரும் கூறுகிறார்கள். ஒரு பையனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு என்று அந்திரேயா கூறுகிறார் (யோ. 6:9). கானா ஊர் கலியாண வீட்டின் வேலைக்காரர் இயேசு சொன்னபடியே கற்சாடிகளில் தண்ணீரை நிரப்பி, அதை பரிமாறும்படியும் இயேசு கூறிய வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்தார்கள். இதுவரை இயேசு அற்புதம் செய்ததேயில்லை. அவர் அற்புதம் செய்வார் என்றும் அவர்களுக்குத் தெரியாது. ஆனாலும் கீழ்ப்படிந்தார்கள், அற்புதம் நடந்தது. ஆனால் இயேசு செய்த அநேக அற்புதங்களைக் கண்ணார கண்டிருந்த சீஷர்கள், சூழ்நிலையை கண்டபோது இயேசுவால் அற்புதம் செய்ய முடியும் என்பதை விசுவாசிக்கவில்லை.
நாமும் கூட இயேசு அவருக்கு சித்தமானதை செய்யும்படி உணர்த்தும் போது, அவர் நமக்கு உதவி செய்ய வல்லவர் என்பதை மறந்து, நம் சூழ்நிலையையும், இயலாமையையும் கூறிக்கொண்டு பின் வாங்குகிறோம். நம் வாழ்வில் கர்த்தர் செய்த அற்புதங்களையும், பிறரது அற்புத சாட்சிகளைக் கேட்டும் நம் விசுவாசம் கிரியை செய்யாதபடி பல நேரங்களில் சோர்வடைந்து விடுகிறோம். அப்படியானால், "ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி செய்து, என் விசுவாசம் வர்த்திக்க உதவி செய்யும்" என்று ஜெபித்து, நம் விசுவாச வாழ்வில் முன்னேறுவோமாக!
-Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:-
இந்தியாவில் மேலும் 15 மாநிலங்களில் மிஷனெரி பணித்தளம் ஆரம்பிக்கப்பட்ட ஜெபியுங்கள்
*Whatsapp*
To receive this Daily Devotion in Tamil, English, Hindi, Malayalam, Telugu, Kannada, Punjabi and Oriya on WhatsApp, Please contact *+91 94440 11864*
Website: www.vmm.org.in
Email: [email protected]
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
Village Missionary Movement,
Virudhunagar, India – 626001
For Prayer Support: +91 94873 67663, +91 94424 93250