13/02/2019
#வானதிராயன்பட்டி
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட முகாம்.
#சி #விஜயபாஸ்கர்MBBS அழைக்கிறார்.
#வானதிராயன்பட்டி கிராமம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் முக்கிய அறிவிப்பு
#நாளை (14/02/2019) #வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு அத்திப்பள்ளம் ஊராட்சி மன்றக் கட்டிடத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதில் அனைத்து மக்களுக்கும் கலந்து கொண்டு காப்பீட்டு அட்டையைப் புதுப்பிக்கலாம் அட்டை இல்லாதவர்கள் புதிய அட்டை பெற்றுக் கொள்ளலாம். அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
#ஆதார் அட்டை
#குடும்ப அட்டை ஆகியவை கொண்டு வரவேண்டும்.
இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது.
• இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
பயன்கள் :
• அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்க்கு, ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்கான மருத்துவ பட்டியல் CMCHISTN வலைத்தளத்தில் இணைக்கபட்டுள்ளது.
• இந்த திட்டத்தில் மருத்துவ சிகிச்சைகள் மட்டுமல்லாமல் நோய் கண்டறியும் சோதனைகளும் [இணைப்பு ‘F’] மற்றும் தொடர் சிகிச்சைகளும் [இணைப்பு ‘E’] வழங்கப்படுகின்றன.
என்றும் அண்ணன் வழியில் செபாஸ்டின் ஜேம்ஸ் செவனம்பட்டி