Shrikainkaryam

  • Home
  • Shrikainkaryam
Call Website Contact the place of worship

Shrikainkaryam To renovate the dilapidated Vishnu temples while aiding them with material and financial support to ensure their continued functioning

 #ஸ்ரீஜயந்தீ உத்ஸவம் எம்பெருமானுடைய அவதாரங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்ததான ஸ்ரீ க்ருஷ்ணன் அவதரித்த புண்யதினமாம் ஸ்ரீஜ...
04/09/2026

#ஸ்ரீஜயந்தீ உத்ஸவம்

எம்பெருமானுடைய அவதாரங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்ததான ஸ்ரீ க்ருஷ்ணன் அவதரித்த புண்யதினமாம் ஸ்ரீஜயந்தீயை முன்னிட்டு #ஸ்ரீகைங்கர்யம் சார்பில் கீழ்கண்ட ஸ்ரீக்ராம ஸன்னிதிகளில் விசேஷ புஷ்பம், நவநீதம்(வெண்ணெய்) மற்றும் தளிகையுடன் விசேஷ திருவாராதனத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸன்னிதிகள் விவரம்:
1. பாதிரி ஸ்ரீ லக்ஷ்மீநாராயணப் பெருமாள் ஸன்னிதி
2. விளாநல்லூர் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸன்னிதி
3. மேல்பாதி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் ஸன்னிதி
4. மேல்மட்டை விண்ணமங்கலம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் ஸன்னிதி
5. ஓசூர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் ஸன்னிதி

மேற்படி உத்ஸவ ஏற்பாடுகளுக்கு சுமார் ரூ.11500 தேவைப்படுவதால் ஆஸ்திகர்கள் யதாசக்தி என்று தங்களால் இயன்ற பொருளுதவி செய்து ஸ்ரீக்ருஷ்ணனின் பரிபூர்ண அனுக்ரஹத்திற்குப் பாத்திரராகும்படி ப்ரார்த்திக்கிறோம்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு:
Shrikainkaryam
Bank Account No - 378405005146
IFSC code - ICIC0003784
ICICI Bank, Vandavasi

ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்!

இங்ஙனம்,
ஸ்ரீக்ருஷ்ணதாஸன் - 9994783677

 #மேல்சோழங்குப்பம் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஸன்னிதி மஹாஸம்ப்ரோக்ஷணம் - 31.08.2026திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்ட...
01/09/2026

#மேல்சோழங்குப்பம் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஸன்னிதி மஹாஸம்ப்ரோக்ஷணம் - 31.08.2026

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் மேல்சோழங்குப்பம் என்னும் ஸ்ரீக்ராமத்தில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ பத்மாவதி தாயார் ஸமேத ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஸன்னிதி அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக சிதிலமடைந்திருந்த இந்த ஸன்னிதியை கிராம பக்தர்கள் மற்றும் ஆஸ்திகர்கள் பலரும் இணைந்து புனருத்தாரணம் செய்து நிறைவாக மஹாஸம்ப்ரோணம் கடந்த 29ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி (நேற்று) காலை வரை நடைபெற்றது.

இந்த ஸன்னிதியின் புனருத்தாரண திருப்பணியில் இருந்தே பங்கெடுத்த #ஸ்ரீகைங்கர்யம் மஹாஸம்ப்ரோக்ஷணத்தின் அங்கமாக சுமார் 60000 ரூபாய் அளவிலான கீழ்கண்ட கைங்கர்யகளை ஏற்றுக்கொண்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இக்கைங்கர்யத்தில் பங்குகொள்ள விரும்பும் ஆஸ்திகர்கள் யதாசக்தி என்று தங்களால் இயன்ற பொருளுதவி செய்து ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் பரிபூர்ண அனுக்ரஹத்திற்குப் பாத்திரராகும்படி ப்ரார்த்திக்கிறோம்.

கைங்கர்யங்கள் விவரம்:
1. திருமஞ்சன வேதிகை - ரூ.26000
2. பிரபந்த பாராயணம் (2 திருநாமங்கள்) - ரூ.14000
3. கல்பதித்த திருமண், பூணூல் மற்றும் திலகம் செட் (மூலவர் மற்றும் உத்ஸவர்) - ரூ.10000
4. திரைசீலை & ஆலவட்டம் - ரூ.10000 (ஸன்னிதிகள்: பெருமாள் ரூ.3000, தாயார் ரூ.3000, ஆண்டாள் - ரூ.2000, ஆலவட்டம் - ரூ.2000)
மொத்தம் - ரூ.60000

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு:
Shrikainkaryam
Bank Account No - 378405005146
IFSC code - ICIC0003784
ICICI Bank, Vandavasi

UPI (G Pay) மூலம் நன்கொடை அளிக்க: UPI ID - msshrikainkaryam.eazypay@icici அல்லது கீழ்கண்ட QR Codeஐ ஸ்கேன் செய்தும் நன்கொடை அளிக்கலாம்

ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்!

இங்ஙனம்,
ஸ்ரீக்ருஷ்ணதாஸன் - 9994783677

ஆவணி  #ஶ்ரவணம் ( #திருவோணம்) - 26.08.2026சகல வித்யைகளுக்கும் அதிபதியான ஸ்ரீ  #ஹயக்ரீவர் அவதரித்ததும், ஈரடியால் மூவுலகை அ...
26/08/2026

ஆவணி #ஶ்ரவணம் ( #திருவோணம்) - 26.08.2026

சகல வித்யைகளுக்கும் அதிபதியான ஸ்ரீ #ஹயக்ரீவர் அவதரித்ததும், ஈரடியால் மூவுலகை அளந்த #வாமன மூர்த்தி அவதரித்ததுமான ஆவணி திருவோணத்தை முன்னிட்டு #ஸ்ரீகைங்கர்யம் சார்பில் கீழ்கண்ட ஸ்ரீக்ராம ஸன்னிதிகளில் எம்பெருமான்களுக்கும் ஆசார்யஸார்வபௌமரான ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகனுக்கும் விசேஷ புஷ்பம் தளிகையுடன் கூடிய விசேஷ திருவாராதனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸன்னிதிகள் விவரம்:
1. பாதிரி ஸ்ரீ லக்ஷ்மீநாராயணப் பெருமாள் ஸன்னிதி
2. விளாநல்லூர் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸன்னிதி
3. மேல்பாதி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் ஸன்னிதி
4. மேல்மட்டை விண்ணமங்கலம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் ஸன்னிதி
5. கீழ்கொடுங்காலூர் ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் ஸன்னிதி
6. ஓசூர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் ஸன்னிதி

இந்த உத்ஸவ ஏற்பாடுகளுக்குத் தேவையான சுமார் 13000 ரூபாயை அமெரிக்கா வாழ் தேசிகனடியார்கள் உபயமாக ஏற்றுக்கொண்டு ஸமர்ப்பித்துள்ளார்கள் . அவ்வன்பர்களுக்கு நம்முடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு திவ்யதம்பதிகள் மற்றும் ஸ்வாமி தேசிகனின் பரிபூர்ண அனுக்ரஹம் கிடைக்கவும் ப்ரார்த்திக்கிறோம்.

ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்!

இங்ஙனம்,
ஸ்ரீக்ருஷ்ணதாஸன் - 9994783677

 #பாதிரி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸன்னிதி மஹாஸம்ப்ரோக்ஷணம் - திருக்குடை & திரைசீலை கைங்கர்யம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந...
23/08/2026

#பாதிரி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸன்னிதி மஹாஸம்ப்ரோக்ஷணம் - திருக்குடை & திரைசீலை கைங்கர்யம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் பாதிரி ஸ்ரீக்ராமத்தில் அமைந்துள்ளது பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ பெருந்தேவி நாயிகா ஸமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸன்னிதி. ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகனின் திருவவதார ஸ்தலமான தூப்புல் திவ்யதேசத்துடன் சம்பந்தமுள்ள இந்த திருத்தலத்தில் ஆச்சர்யமாக ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகன் மூலவர் மற்றும் உத்ஸவருடன் தனி ஸன்னிதியில் எழுந்தருளியிருக்கிறார். கடந்த சில வருடங்களாக நடைபெற்ற புனருத்தாரண திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று மஹாஸம்ப்ரோக்ஷணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மேற்படி ஸம்ப்ரோக்ஷணத்தில் #ஸ்ரீகைங்கர்யம் சார்பில் சுமார் 50000 ரூபாய் மதிப்பிலான கீழ்கண்ட கைங்கர்யங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஸமர்ப்பிக்கப்பட்டன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இக்கைங்கர்யத்தில் கலந்துகொள்ள விரும்பும் ஆஸ்திகர்கள் யதாசக்தி என்று தங்களால் இயன்ற பொருளுதவி செய்து திவ்யதம்பதிகளின் பரிபூர்ண அனுக்ரஹத்திற்குப் பாத்திரராகும்படி ப்ரார்த்திக்கிறோம்.

கைங்கர்யங்கள் விவரம்:
6 ஜான் குடை (2) - ரூ.18000 (ஒரு குடை - ரூ.9000)
திண்டு 1 செட் - ரூ.7500
ஆலவட்டம்- ரூ.2500
திரைசீலை
பெருமாள் ஸன்னிதி - ரூ.6000
தாயார் ஸன்னிதி - ரூ.6000
தேசிகன் ஸன்னிதி - ரூ.6000
ஆண்டாள் ஸன்னிதி - ரூ.4000

மொத்தம் - ரூ.50000

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு:
Shrikainkaryam
Bank Account No - 378405005146
IFSC code - ICIC0003784
ICICI Bank, Vandavasi

UPI (G Pay) மூலம் நன்கொடை அளிக்க: UPI ID - msshrikainkaryam.eazypay@icici அல்லது கீழ்கண்ட QR Codeஐ ஸ்கேன் செய்தும் நன்கொடை அளிக்கலாம்

ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்!

இங்ஙனம்,
ஸ்ரீக்ருஷ்ணதாஸன் - 9994783677

ஸ்ரீ வைகாநஸ ஸூக்த ரத்நாகர: புஸ்தகம் வெளியீடு #ஸ்ரீகைங்கர்யம் சார்பில் பல ஆண்டுகளாக ஸ்ரீவைஷ்ணவம் சார்ந்த கிரந்தங்கள்/நூல்...
19/08/2026

ஸ்ரீ வைகாநஸ ஸூக்த ரத்நாகர: புஸ்தகம் வெளியீடு

#ஸ்ரீகைங்கர்யம் சார்பில் பல ஆண்டுகளாக ஸ்ரீவைஷ்ணவம் சார்ந்த கிரந்தங்கள்/நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வைகாநஸ ஆகம பாஸ்கரர் வைகுண்டவாஸி ஸ்ரீ.உ.வே. ராமக்ருஷ்ண பட்டாசார்யர் ஸ்வாமியின் நினைவாக அவருடைய சிஷ்யரும் ஸ்ரீகைங்கர்யம் அமைப்பின் வைகாநஸ ஆகம ப்ரதான அர்ச்சகரும் ஆலோசகருமான பெருநகர் ஸ்ரீ.உ.வே. சக்ரவர்த்தி (எ) வாசுதேவ பட்டாசார்யர் ஸ்வாமியால் தொகுக்கப்பட்ட ஸ்ரீ வைகாநஸ ஸூக்த ரத்நாகர: என்னும் நூல் கடந்த 17.08.2026 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வாலாஜாபேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸன்னிதியில் வெளியிடப்பட்டது.

இந்நூலை வைகாநஸ ஆகம வித்வான் அனக்காவூர் ஸ்ரீ.உ.வே.துரைஸ்வாமி பட்டாசார்யர் அவர்கள் வெளியிட தேவநாகரி ப்ரதியை சோளிங்கர் ஸ்ரீ.உ.வே. ஸ்ரீராம் பட்டாசார்யர் அவர்களும், க்ரந்தாக்ஷர ப்ரதியை மயிலாப்பூர் ஸ்ரீ.உ.வே. சாரதி பட்டாசார்யர் அவர்களும் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மேலும் பல வைகாநஸ ஆகம அர்ச்சகர்கள் கலந்துகொண்டு நூலைப் பெற்று சிறப்பித்தனர். வளர்ந்து வரும் இளம் தலைமுறை அர்ச்சகர்களுக்கு பயனுதுள்ளாக இருக்கும் இந்நூலை பதிப்பிக்கும் வாய்ப்பை ஸ்ரீகைங்கர்யத்திற்கு நல்கிய பெருநகர் ஸ்ரீ.உ.வே. வாசுதேவ பட்டாசார்யர் ஸ்வாமிக்கு நம்முடைய சிரந்தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்ரீகைங்கர்யம் சார்பில் பதிப்பிக்கப்பட்ட நூல்கள்:
1. பகவத் ராமானுஜரின் ஸஹஸ்ராப்தியின் (1000வது திருநக்ஷத்ரம்) போது எம்பெருமானார் வைபவம் என்ற கையடக்க நூல்
2. ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகனின் 750வது திருநக்ஷத்ர மஹோத்ஸவத்தில் வைகுண்டவாஸி ஸ்ரீமதுபயவே. சேட்லூர் ஸ்வாமி இயற்றிய ஸ்ரீதேசிக ஸம்ப்ரதாய பாகவததோத்தமர்களின் நித்ய அனுஷ்டான விதி (பாகவத ஆஹ்நிகம்) மறுபதிப்பு
3. வைகுண்டவாஸி புலிக்குன்றம் வங்கீபுரம் ஸ்ரீ.உ.வே. ஸ்தலசயனாசார்ய ஸ்வாமியால் தொகுக்கப்பட்ட ஸாம வேதிகளுக்கான சந்தோக ஆஹ்நிகம் (பாகம் 1 & 2), ஸாமவேதீய ஸந்த்யாவந்தனம் & ஸாமவேதீய உபாகர்ம
4. உத்தமூர் ஸ்வாமி ட்ரஸ்ட் சார்பில் வெளியிடப்பட்ட உபநிஷத் ஸாரம் மறுபதிப்பு

ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்!

இங்ஙனம்,
ஸ்ரீக்ருஷ்ணதாஸன் - 9994783677

 #ஓசூர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் ஸன்னிதி - சிசிடிவி கேமரா மற்றும் இன்வெர்டர் திருப்பணி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வ...
11/08/2026

#ஓசூர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் ஸன்னிதி - சிசிடிவி கேமரா மற்றும் இன்வெர்டர் திருப்பணி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் ஓசூர் ஸ்ரீக்ராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அலர்மேல்மங்கா நாயிகா ஸமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் ஸன்னிதியில் பாதுகாப்பு கருதி #ஸ்ரீகைங்கர்யம் சார்பில் இன்வெர்டர் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மேற்படி ஸன்னிதியில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த உத்ஸவர்கள் எழுந்தருளியிருப்பதாலும், சமீபத்தில் ஆங்காங்கே நடைபெறும் அசம்பாவிதங்களால் கோவில் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியும் நவீன சிசிடிவி கேமராக்களும், மின்சார துண்டிக்கப்பட்டாலும் தடையின்றி இயங்க தேவையான இன்வெர்டர் வசதியும் தற்போது செய்யப்பட்டுள்ளது.

இத்திருப்பணிக்கு மொத்தமாக சுமார் 78000 ரூபாய் தேவைப்பட்ட நிலையில் இரண்டு ஆஸ்திகர்கள் 55000 ரூபாய் ஸமர்ப்பித்திருப்பதால் எஞ்சியிருக்கும் 23000 ரூபாயில் ஆஸ்திகர்கள் யதாசக்தி என்று தங்களால் இயன்ற பொருளுதவி செய்து ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாளின் பரிபூர்ண அனுக்ரஹத்திற்குப் பாத்திரராகும்படி ப்ரார்த்திக்கிறோம்.

பேட்டரி மற்றும் இன்வெர்டர் - ரூ.20500
கோவில் முழுக்க இன்வெர்டர் இணைப்புக்கான wiring பணி - ரூ.18500
சிசிடிவி கேமரா (4 CCTV, DVR, cable உட்பட) - ரூ.27500
கேமரா பொருத்தும் பணி - ரூ.5500
இணையவழி(broadband) இணைப்பு - ரூ.6000

மொத்தம் - ரூ. 78000

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு:
Shrikainkaryam
Bank Account No - 378405005146
IFSC code - ICIC0003784
ICICI Bank, Vandavasi

UPI (G Pay) மூலம் நன்கொடை அளிக்க: UPI ID - msshrikainkaryam.eazypay@icici அல்லது கீழ்கண்ட QR Codeஐ ஸ்கேன் செய்தும் நன்கொடை அளிக்கலாம்

ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்!

இங்ஙனம்,
ஸ்ரீக்ருஷ்ணதாஸன் - 9994783677

 #திருவாடிப்பூரம் ஸ்ரீ ஆண்டாள்  #திருக்கல்யாணோத்ஸவம் -  #ஓசூர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் ஸன்னிதி - 08.08.2026சூடிக்கொடுத...
09/08/2026

#திருவாடிப்பூரம் ஸ்ரீ ஆண்டாள் #திருக்கல்யாணோத்ஸவம் - #ஓசூர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் ஸன்னிதி - 08.08.2026

சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவவதரித்த திருவாடிபூரத்தை முன்னிட்டு #ஸ்ரீகைங்கர்யம் சார்பில் ஓசூர் ஸ்ரீக்ராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அலர்மேல்மங்கா நாயிகா ஸமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் ஸன்னிதியில் விசேஷ ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணோத்ஸவம் நேற்று (08.08.2026) வெகு விமர்சையாக நடைபெற்றது.

காலை ஸ்ரீ அலர்மேலமங்கைத் தாயார் ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும் பின்பு மாலைமாற்றுதல் வஸ்த்ர ஸமர்ப்பனை திருமாங்கல்யதாரணம் அக்ஷதை ஆசீர்வாதம் வாரணமாயிரத்துடன் திருக்கல்யாணோத்ஸவம் நடைபெற்றது. ஸ்ரீபெருமாள் ஆண்டாள் நாச்சியார் சூடிக்களைந்த மாலை ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகனுக்கு மரியாதை செய்யப்பட்டது.

மேற்படி உத்ஸவத்திற்கு திருமஞ்சன உபயமாக ஓசூர் ஸ்ரீ வெங்கடேசன் ஐயங்கார் அவர்கள் குடும்பத்தின் சார்பாக (ரூ.11000) ஸமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருக்கல்யாணோத்ஸவத்திற்கு தேவைப்படும் ரூ.20000 க்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு:
Shrikainkaryam
Bank Account No - 378405005146
IFSC code - ICIC0003784
ICICI Bank, Vandavasi

UPI (G Pay) மூலம் நன்கொடை அளிக்க: UPI ID - msshrikainkaryam.eazypay@icici அல்லது கீழ்கண்ட QR Codeஐ ஸ்கேன் செய்தும் நன்கொடை அளிக்கலாம்

ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்!

இங்ஙனம்,
ஸ்ரீக்ருஷ்ணதாஸன் - 9994783677

ஆனி மாத திருமஞ்சனம் பெருநகர் ஸ்ரீ திருவூரக வரதராஜப் பெருமாள் ஸன்னிதியில் ஆனி மாத ஸ்வாதி நக்ஷத்ரத்தை முன்னிட்டு ஸ்ரீ ந்ரு...
07/07/2026

ஆனி மாத திருமஞ்சனம்

பெருநகர் ஸ்ரீ திருவூரக வரதராஜப் பெருமாள் ஸன்னிதியில் ஆனி மாத ஸ்வாதி நக்ஷத்ரத்தை முன்னிட்டு ஸ்ரீ ந்ருஸிம்ஹர் மற்றும் கண்ணனுக்கு விசேஷ திருமஞ்சனமும், மூல நக்ஷத்ரத்தை முன்னிட்டு ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு விசேஷ திருமஞ்சனமும் கடந்த வாரம் நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்!

இங்ஙனம்,
ஸ்ரீக்ருஷ்ணதாஸன் - 9994783677

ஆஸ்திகர்களின் கனிவான கவனத்திற்கு, ஸ்ரீகைங்கர்யம் சார்பில் கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற கீழ்கண்ட உத்ஸவங்களுக்கான விண்ணப்...
01/07/2026

ஆஸ்திகர்களின் கனிவான கவனத்திற்கு,

ஸ்ரீகைங்கர்யம் சார்பில் கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற கீழ்கண்ட உத்ஸவங்களுக்கான விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. சுமார் 1 லட்சம் ரூபாய் அளவிலான நிதி கிடைக்க வேண்டியிருப்பதால் 10 ஸ்ரீக்ராம பெருமாள் ஸன்னிதிகளில் நித்ய திருவாராதன கைங்கர்யத்திற்கான அர்ச்சகர் சம்பாவனை, புஷ்பம் மற்றும் திருவாராதன பெட்டகம் ஆகியவற்றை இன்று ஸமர்ப்பிக்க முடியாத நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

உத்ஸவங்கள் மற்றும் எஞ்சியிருக்கும் தொகை:
1. ஓசூர் ஸ்ரீ அலர்மேல்மங்கைத் தாயார் ஸன்னிதி ஸ்ரீஸுக்த ஹோமம் - ரூ.25000
2. பாதிரி ஸ்ரீ லக்ஷ்மீநாராயணப் பெருமாள் ஸன்னிதி வார்ஷிக மஹோத்ஸவம் - ரூ.30000
3. விளாநல்லூர் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸன்னிதி வார்ஷிக மஹோத்ஸவம் - ரூ.45000

இவ்விண்ணப்பத்தைக் கண்ணுறும் ஆஸ்திகர்கள் யதாசக்தி என்று தங்களால் இயன்ற பொருளுதவி செய்து திவ்யதம்பதிகளின் பரிபூர்ண க்ருபாகடாக்ஷத்திற்குப் பாத்திரராகும்படி ப்ரார்த்திக்கிறோம்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு:
Shrikainkaryam
Bank Account No - 378405005146
IFSC code - ICIC0003784
ICICI Bank, Vandavasi

UPI (G Pay) மூலம் நன்கொடை அளிக்க: UPI ID - msshrikainkaryam.eazypay@icici அல்லது கீழ்கண்ட QR Codeஐ ஸ்கேன் செய்தும் நன்கொடை அளிக்கலாம்

ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்!

இங்ஙனம்,
ஸ்ரீக்ருஷ்ணதாஸன் - 9994783677

 #விளாநல்லூர் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸன்னிதி - 7வது வார்ஷிக மஹோத்ஸவம் - 27.06.2026திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்க...
27/06/2026

#விளாநல்லூர் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸன்னிதி - 7வது வார்ஷிக மஹோத்ஸவம் - 27.06.2026

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்கா விளாநல்லூர் ஸ்ரீக்ராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸன்னிதியில் 7வது ப்ரதிஷ்டா தினத்தை முன்னிட்டு #ஸ்ரீகைங்கர்யம் சார்பில் இன்று மஹாசாந்தி ஹோமம் மற்றும் திருமஞ்சனம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த வார்ஷிக மஹோத்ஸவமானது பகவத் ப்ரார்த்தனையுடன் தொடங்கி, சங்கல்பம், புண்யாஹவாசனம், கும்ப திருவாராதனம், உக்த ஹோமம், திருமஞ்சனம், மஹாபூர்ணாஹூதிக்குப் பிறகு விசேஷ திருவாராதனமும் ஸ்ரீபெருமாள் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. திரளான கிராம பக்தர்கள் இந்த உத்ஸவத்தில் கலந்துகொண்டார்கள்.

மேற்படி மஹோத்ஸவ ஏற்பாடுகளுக்கு சுமார் 45000 ரூபாய் தேவைப்படுவதால் ஆஸ்திகர்கள் யதாசக்தி என்று தங்களால் இயன்ற பொருளுதவி செய்து ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் பரிபூர்ண அனுக்ரஹத்திற்குப் பாத்திரராகும்படி ப்ரார்த்திக்கிறோம்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு:
Shrikainkaryam
Bank Account No - 378405005146
IFSC code - ICIC0003784
ICICI Bank, Vandavasi

UPI (G Pay) மூலம் நன்கொடை அளிக்க: UPI ID - msshrikainkaryam.eazypay@icici அல்லது கீழ்கண்ட QR Codeஐ ஸ்கேன் செய்தும் நன்கொடை அளிக்கலாம்

ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்!

இங்ஙனம்,
ஸ்ரீக்ருஷ்ணதாஸன் - 9994783677

Address


604408

Alerts

Be the first to know and let us send you an email when Shrikainkaryam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Shrikainkaryam:

Shortcuts

  • Want your place of worship to be the top-listed place of worship?

Share