அருணாசலேஷ்வரா അരുണാച Arunachaleshvara namshivaya annamalaiyaarku Arogara

  • Home
  • India
  • Tiruvannamalai
  • அருணாசலேஷ்வரா അരുണാച Arunachaleshvara namshivaya annamalaiyaarku Arogara

அருணாசலேஷ்வரா   അരുണാച  Arunachaleshvara namshivaya annamalaiyaarku Arogara Annamalaiyaar Temple Tiruvannamalai Festivals https://arunaomnamasivaya.blogspot.in/

14/04/2026
10/04/2026

சப்த கைலாய – கரைகண்டீஸ்வரர் ஸ்தலங்களின் மகிமைகள்

திருவண்ணாமலை என்பது ஒரு கோயில் மட்டுமல்ல, அது ஒரு சிவமண்டலம். ஏனெனில்,
ஏராளமான வரலாற்றுச் சிறப்புமிக்க சிவஸ்தலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
அண்ணாமலையாரை தரிசிப்பதற்கு முன்,
சென்று வழிபட வேண்டிய பதினான்கு சிவபதிகளான சப்த கைலாய, சப்த கரைகண்டேஸ்வரர் தலங்கள் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
இவற்றின் முக்கியத்துவம் மற்றும் வரலாற்று சிறப்புகள் பற்றி இப்போது விரிவாக காணலாம்.
ஒருமுறை பார்வதி தேவி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் பூலோக ஜீவராசிகள் இருளில் பல இன்னல்களை அடைந்தன. இந்த பாவம் தீர்க்க வேண்டி பார்வதி தேவி பூலோகத்தில் காசியை அடைந்து பின்னர் காஞ்சி மாநகரில் காமாட்சி அம்மனாக மணலில் லிங்கம் அமைத்து
பூஜை செய்து வரும் நாளில் சிவபெருமான் தோன்றி திருவண்ணாமலை சென்று தவம் இயற்றி தமது இடப்பாகம் பெறுமாறு அருளிச்செய்தார்.
தேவியின் அருணாச்சலத்தை நோக்கிய பயணத்தில் வாழைப்பந்தல் எனுமிடத்தில் அனுஷ்டானம் செய்வதற்காக நீர் கொண்டு வரும்படி முருகப்பெருமானிடம் வேண்டுகிறார். முருகப்பெருமானும் தனது வேலாயுதத்தை வீசி எறிய ஏழு குன்றுகளை துளைத்து சென்று சேயாறு உருவானது. அந்த நீர் சிவப்பாக இருக்கும் காரணம் என்னவென்று குமரக்கடவுள் அன்னையிடம் வினவ, அன்னையும் பாவவிமோசனம் வேண்டி தவமிருந்த ஏழு அந்தணர்களுக்கு பாவவிமோசனமும் முக்தியும் கிடைத்த புராண வரலாற்றை கூறினாள். எனினும் உலக நன்மையின் பொருட்டு பிரமகத்தி தோசம் நீங்க ஏழு லிங்கம் அமைத்து வழிபடுமாறு பணித்தாள்.
முருகப் பெருமானும் சேயாற்றின் வடகரையில்
ஏழு லிங்கங்களை நிறுவி வழிபட்டார்…
அந்த புனித ஸ்தலங்களே ‘சப்த கரைகண்டீஸ்வரர் தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன.
அவை முறையே—
1. காஞ்சி
2. கடலாடி
3. மாம்பாக்கம்
4. மாதிமங்கலம்
5. ஏலத்தூர்
6. பூண்டி
7. குருவிமலை

அம்பாள், ஈசனின் இடப்பாகம் பெற வேண்டி
சேயாற்றின் தென்கரையில்
ஏழு லிங்கங்களை நிறுவி பூஜித்தாள்.
அந்த புனித தலங்களே ‘சப்த கைலாயத் தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன. அவை முறையே
1. மண்டைக்குளத்தூர்
2. கரைப்பூண்டி
3. தென்பள்ளிப்பட்டு
4. நார்த்தாம்பூண்டி
5. பழங்கோயில்
6. தாமரைப்பாக்கம்
7. வாசுதேவன்பட்டு
இத்தலங்களை முறையாக தரிசித்து,
அண்ணாமலையாரின் பூரண அருளைப் பெறுவோம்.

The Glory of the Sapta Kailasa – Karakandeswarar Temples

Tiruvannamalai is not just a temple — it is a sacred Shaiva realm (Shiva Mandala).
This is because it encompasses numerous historically significant Shiva temples within its spiritual sphere.

Before having darshan of Lord Annamalaiyar,
how many of us are aware of the Sapta Kailasa Temples and the Sapta Karakandeswarar Temples that are traditionally worshipped first?

Let us now explore their significance and sacred history in detail.

Once, at Mount Kailasa, Goddess Parvati playfully closed the eyes of Lord Shiva. As a result, all living beings on Earth were plunged into darkness and suffered greatly. To atone for this sin, Goddess Parvati descended to Earth, first reaching Kashi and later arriving at Kanchipuram. There, as Goddess Kamakshi, she fashioned a Shiva Lingam out of sand and worshipped it with deep devotion.

Pleased with her penance, Lord Shiva appeared before her and instructed her to proceed to Tiruvannamalai and perform austerities there to attain the sacred union of becoming His left half.

During her journey toward Arunachala, at a place called Vazhaipandal, the Goddess requested Lord Murugan to bring water for her rituals. In response, Lord Murugan hurled his divine Vel (spear), which pierced through seven hills, giving rise to the river Cheyyar.

When Murugan noticed the reddish color of the water, he questioned the Goddess. She then revealed that seven sages (Brahmins), who were performing penance seeking liberation from their sins, had attained absolution and moksha at that very place. For the welfare of the world and to remove the sin of Brahmahatya Dosha, the Goddess instructed Murugan to establish and worship seven Shiva Lingams.

Accordingly, Lord Murugan installed and worshipped seven Lingams along the northern bank of the Cheyyar River.
These sacred sites are revered as the Sapta Karakandeswarar Temples.

They are:
1. Kanchi
2. Kadaladi
3. Mambakkam
4. Mathimangalam
5. Elathur
6. Poondi
7. Kuruvimalai

Similarly, in her quest to attain the left half of Lord Shiva, Goddess Parvati installed and worshipped seven Shiva Lingams along the southern bank of the Cheyyar River.

These sacred sites are known as the Sapta Kailasa Temples.

They are:
1. Mandaikulathur
2. Karaipoondi
3. Thenpallipattu
4. Narthampoondi
5. Pazhankoil
6. Thamaraipakkam
7. Vasudevanpattu

By devoutly visiting these sacred temples in the prescribed order,
one can receive the complete grace (Purna Anugraha) of Lord Annamalaiyar.

Referenced sources: Arunachala Puranam, Kanchi Puranam, Arunachala magimai by Paranetharan, Saptha kailaya Karaikanda thalangal

01/04/2026

அண்ணாமலையார் திருமணம்.‌சிறப்பு பாடல்

07/02/2026

கலசப்பாக்கம் ரதசப்தமி சிறப்பு பாடல். தகிட ததிமி தாளம் ஒலிக்க செய்யாற்றில் தாண்டவம் ஆடி வந்தாரே...

05/02/2026

Thiruvasagam sivapuranam. Modern instruments music version. om namashivaya.

05/02/2026

Today evening 6 o clock sivapuranam full song will be released. with modern music

Address

Tiruvannamalai

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருணாசலேஷ்வரா അരുണാച Arunachaleshvara namshivaya annamalaiyaarku Arogara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to அருணாசலேஷ்வரா അരുണാച Arunachaleshvara namshivaya annamalaiyaarku Arogara:

Share