16/01/2018
குணாம்சத்தின் அடிப்படைக்கூறாக (மூலதத்துவமாக) உள்ள பொறுமை
PATIENCE AS AN ELEMENT OF CHARACTER
“என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்” (வெளி 3:10)
❤ இந்த வசனத்தில் விசேஷித்த அழுத்தம் "பொறுமைக்கு - Patience" கொடுக்கப்பட்டுள்ளது. இது, குறிப்பாக "என் பொறுமையை குறித்து சொல்லிய வசனம்(வார்த்தை)" அல்லது "எனது வார்த்தை (மனதில்) ஆழப்பதியும்படி பணிக்கப்பட்ட பொறுமை" என்பதாகும்.
💚 இந்த வார்த்தையை தீர்க்கமாக ஆராய்ந்து பார்க்கும்போது, புதிய ஏற்பாட்டிலுள்ள “Patience” என்கிற ஆங்கில வார்த்தை, கிரேக்க மொழியிலே இரு வேறுபட்ட வார்த்தைகளினால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை நாம் அறியக்கூடும். இதில் ஒன்று "மக்ரோதுனியா - makrothunia" என்பதாகும் (எபிரேயர் 6:12; யாக்கோபு 5:10; அப்போஸ்தலர் 26:3).
💜 இது, நமது வாழ்க்கையின் அனுதின விவகாரங்களில் நாம் பேசுகையில் தொடர்பு கொண்டு இருக்கும், பொறுமை என்னும் பொதுவான கண்ணோட்டத்தில் பொதுவான முறையில் அமைந்துள்ள வார்த்தையாகும். இது "நீடிய சகிப்பு" என்று மாத்திரம் அர்த்தப்படுத்தும். உண்மையில், மக்ரோதுனியா (makrothunia) புதிய ஏற்பாடு முழுவதும் இப்படியாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (ரோமர். 2:4; 9:22; எபேசியர் 4:2; கொலோசெயர் 1:11; 3:12; 1தீமோத்தேயு 1:16; 2 பேதுரு 3:15).
🧡 எனினும், நமது பாட வாக்கியத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள வார்த்தை இந்த மக்ரோதுனியாவும் அல்ல, அதேபோல, புதிய ஏற்பாடு முழுவதும் பொறுமை என்று பொதுவாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தையும் அல்ல. ஆனால் அது "ஹிப்பமானே - hupomonee" என்ற வார்த்தையே ஆகும்.
💙 Patience என்னும் ஆங்கில வார்த்தையோடு சம்பந்தனைகொண்டுள்ள அதன் கருதாம்சத்தை காட்டிலும், ஹிப்போமானே என்னும் இந்த வார்த்தை, அதிகளவில் ஆழ்ந்ததும், முழுநிறைவான உட்கருத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது.
💛 இது மாறாத்தன்மையோடு நிலைத்திருத்தலை (Constancy) அர்த்தப்படுத்துகிறது. அதாவது, உற்சாகத்தோடும், மனமுவந்த வகையிலும், பொறுமையோடும் தீமையை சகிக்கும் கருத்தை இது கொடுக்கிறது. ஒரு தற்காலிகமான நிலைபாட்டிலோ, உணர்ச்சியிலோ அல்லது செயலிலோ கட்டுப்பட்ட நிலையில் இருப்பதை மாத்திரமல்ல, அதேசமயம் இது குணாம்சத்தின் மூலதத்துவமாகவும் இருக்கிறது.
❤ ஆனால், பொறுமை என்று நம்முடைய பாட வசனத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தை, தேவனுடைய குறித்த காலத்தில் பிடிங்கி எறியப்படும் என்று வாக்குத்தத்தம் செய்யப்பட்டபிரகாரம் அனுமதிக்கப்பட்டுள்ள, இப்பொழுதிருக்கும் தீமைகளின் தவறுகள் அல்லது துன்பங்களை மனநிறைவோடும், கலகம் உண்டாக்காமல், தெய்வீக ஞானம் மற்றும் அன்போடு தடைசொல்லின்றி உடன்படுதலிலும் வெளிப்படக்கூடிய இருதயம் மற்றும் குணாம்சத்தின் இப்படிப்பட்ட வளர்ச்சியையே இது அர்த்தப்படுத்துகிறது.
💚 நமது கர்த்தரால் மிகவும் உயர்வாக பாராட்டப்படுகிற (மெச்சப்படுகிற), கிறிஸ்தவ குணாம்சத்தின் இந்த மூலதத்துவத்தை கவனமாக ஆராய்ந்து பார்ப்பதின் மூலம், இது நமக்கு பிரயோஜனமுள்ளதாக இருக்குமென்று நாம் விசுவாசிக்கின்றோம்.
💜 இதனை தெளிவாக உணர்ந்துகொள்ளுவதின் மூலமாக, நாம் இதனை பின்பற்றுகிறவர்களாக, அதிக முழுமையாக இதனை அடைந்துகொள்ளுவதோடு, இவ்வாறு, கர்த்தருடைய அதீத அபரிமிதமான அங்கீகரிப்பையும் கூட உடையவர்களாக இருக்கமுடியும்.
🧡 இந்த பொறுமையோடு சகித்தலை பற்றி, நமது பாடவாக்கியமானது, கர்த்தருடைய "வார்த்தை" அல்லது "போதனை" என்று குறிப்பிட்டுள்ளதாகையால், சுவிசேஷ நடபடிகளை சற்று பின்னோக்கி பார்த்து, தமது போதனையில் கர்த்தர் உபயோகித்த இந்த வார்த்தையை குறித்து கவனிக்க கடவோமாக.
💙 அவர் உரைத்தத்தில் இரு முறை இது பதிவாகி உள்ளது. லூக்கா 8:15ல் விதை பற்றிய உவமையை சொல்லும்போது, “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே [உற்சாகத்தோடு சகிப்பதோடும், மாறாத்தன்மையோடு (திடவுறுதியோடு) நிலைத்திருப்பது] பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்”
என்று வாசிக்கின்றோம்.
💛 அதாவது, கனி தரக்கூடிய வகுப்பாராக, கர்த்தர் தம்முடைய இராஜ்ஜியத்தில் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கப்படுபவர்கள், அவருடைய வார்த்தையிலுள்ள சாட்சியத்தை சந்தோஷத்தோடு பெற்றுக்கொண்டாலும், இதனை பெற்றுக்கொள்ளுவதற்கு இன்னும் அதிகம் செய்ய வேண்டி உள்ளது என்பது அவசியமாக இருக்கிறது.
❤ எப்படியெனில், உவமையில் சொல்லப்பட்டிருக்கிற கற்பாறை நிலமென்னும் வகுப்பார், முதலில் அதிக கனி ஈட்டக்கூடியவர்களாகவும் அதிக சாரமுள்ளவர்களாகவும் தங்களை காண்பித்தனர். ஆனால், உபாத்திரவத்தின் சூரியன் எழும்பியபோதோ, மண்ணின் ஆழம் இல்லாத காரணத்தினால், தளர்ந்து போனவர்களை (வதங்கிப்போனவர்களை) அடையாளப்படுத்துகிறது.
💚 கற்பாறையுள்ள, ஆழங்குறைவுள்ள மண்ணுள்ள நிலம், சத்தியத்தில் அதிகளவுக்கு களிகூர்ந்த, சத்தியத்தை கேட்கக்கூடிய வகுப்பாராக இருந்தாலும்உபத்திரவம் அல்லது எதிர்ப்புகளுக்கு நிலைநிற்க கூடாதவர்களாக, அதனை சகிக்க கூடாதவர்களாக, ஆனால் இதனால் தளர்வடைந்து (சோர்வுற்று) அதைரியமடைந்தவர்களை அடையாளப்படுத்துவதாக கர்த்தர் விளக்கி தருகிறார்.
💜 எல்லாருமே ஜெயம் கொள்ளக்கூடியவர்களாக இருக்க கூடியதான இராஜ்ஜிய வகுப்பாரில் இப்படிப்பட்டவர்கள் இருக்க முடியாது.
🧡 விதையை பெற்றுக்கொள்ளுவதில் உடனடியான ஆயத்ததோடு இருப்பதை தொடர்ந்து, விதை பெற்றுக்கொள்ளப்பட்டு அது இளந்தளிராக தளிர்த்ததை தொடர்ந்து, அன்பு, நம்பிக்கை, சந்தோஷம் மற்றும் விசுவாசம் ஆகியவை, இது எழும்பி வருவதற்கு உந்துதலாக இருந்து, கனிதருவதற்கும் காரணமாக இருப்பதை தொடர்ந்து, இதில் பொறுமையோடு சகித்திருத்தலே, மாறாத்தன்மையோடு (திடவுறுதியோடு) நிலைத்திருத்தலே இறுதியான பரீட்சையாக இருப்பதாக நமது கர்த்தர் இந்த உவமையில் காண்பிக்கிறார்.
💙 தானியமானது விளைந்து முழுவதுமாக முதிர்ந்து, களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதற்கு தகுதியுள்ளதாவதற்கும் பொறுமையோடு சகித்திருத்தல் (Patience Endurance) அவசியமாக உள்ளது.
💛 உற்சாகமாக சகித்திருத்தல் (Cheerfully enduring) என்கிற நமது கர்த்தருடைய வார்த்தையிலுள்ள வெளிச்சத்திலே, பொறுமையோடு சகித்திருத்தல் எவ்வளவு முக்கியத்துவம் பொருந்தியதாக உள்ளது.
❤ தமக்காக தம்முடைய பிள்ளைகள் அதிகமாக சகிப்பவர்களாக இருப்பினும், அவர்கள் பொறுமையின்மையோடும், அதிருப்தியோடும், சந்தோஷமில்லா மனநிலைமையோடும் சகித்திருப்பதை, இருதயங்களையும், எண்ணங்களின் உள்ளிந்திரியங்களையும் (நோக்கங்களையும்) நியாயந்தீர்ப்பவர், இப்படிப்பட்ட தமது பிள்ளைகளோடு பிரியமுள்ளவராக இருப்பார் என்று நாம் எண்ணிவிட கூடாது.
💚 “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய (உம்முடைய சித்தத்தை செய்ய) விரும்புகிறேன்” (சங்கீதம் 40:8) என்ற வார்த்தைகளில் தமது உணர்ச்சிகனிவுகளை (விருப்பார்வங்களை) வெளிப்படுத்திய தேவனுடைய நேச குமாரனுடைய பிரதிகளாக (Copies of God’s dear son) இவர்கள் இருக்கமாட்டார்கள்.
💜 தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த பிரதான ஆசாரியரும் மீட்பரும், மாதிரியுமானவரை போல இராஜரீக ஆசாரியகூட்டத்தார் அனைவருமே பலிதியாகம் செய்யக்கூடியவர்கள் ஆவர்.
🧡 கிறிஸ்துவின் பலி புண்ணியத்தின் மூலம் இந்த பலிகளை ஏற்றுக்கொள்ளும் தேவன், உற்சாகத்தோடு விருபாரவமுள்ள இருதயத்தோடு, உற்சாகமுள்ளவர்களாக தங்களை பலியாக படைக்கிறவர்களையே தாம் பாராட்டுவதாகவும் நேசிப்பதாகவும் கூறுகிறார்.
💙 இந்த கண்ணோட்டமே, நாம் ஆராய்ந்து கவனித்து வருகிற கிரேக்க வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உற்சாகத்தோடு சகித்தல், பொறுமையோடு சகித்தல்.. இதுவே பரிந்துரைக்கப்படுகிறது.
REF: R 2590
https://youtu.be/V9IOhGPrRvY