Iynthuveetu swamy

Iynthuveetu swamy ஹரி ஓம் இராமானுஜாய
� ஸ்ரீ ஐந்து வீட்ட?

🙏🪷🙏 ஹரிஓம் ராமானுஜாயா🙏🪷 அருள்மிகு எங்க குல நாயகி ஸ்ரீ அனந்தம்மன் தாயே உன் கமல திருவடி சரணம் காத்து அருள்வீராக அன்னையே🙏🌺 ...
22/05/2026

🙏🪷🙏 ஹரிஓம் ராமானுஜாயா🙏🪷 அருள்மிகு எங்க குல நாயகி ஸ்ரீ அனந்தம்மன் தாயே உன் கமல திருவடி சரணம் காத்து அருள்வீராக அன்னையே🙏🌺 அடியேன் தாசன்🙏🙏🙏🌺👑

🪷👑அனந்தம்மாள் தாயே துனண🙏ஹரி ஓம் ராமானுஜாய நமக எங்கள் குலதெய்வம் ஐந்து வீட்டு சுவாமிகள் துணை அடியேன் தாசன் 🙏
20/05/2026

🪷👑அனந்தம்மாள் தாயே துனண🙏
ஹரி ஓம் ராமானுஜாய நமக எங்கள் குலதெய்வம் ஐந்து வீட்டு சுவாமிகள் துணை அடியேன் தாசன் 🙏

👑அனந்தம்மாள் தாயே துனண ஹரி ஓம் ராமானுஜயா நமஹ  🌺🪷
17/05/2026

👑அனந்தம்மாள் தாயே துனண ஹரி ஓம் ராமானுஜயா நமஹ 🌺🪷

ஐந்துவீட்டு சுவாமி கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோ மீட்...
11/05/2026

ஐந்துவீட்டு சுவாமி கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடன்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ள செட்டியாபத்து என்ற ஊரில் குடிகொண்டுள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில். ஐந்து வீட்டு சுவாமி கோவில், தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா 8 நாட்கள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு. அன்னமுத்திரி பிரசாதம் வாங்கிச் செல்வது இக்கோவிலின் சிறப்பு ஆகும். ஐந்துவீட்டு சுவாமி கோயிலுக்கும் வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். [1]

ஜாதி பேதம் இல்லாமல் அனைவரும் வழிபடும் இந்த கோயிலை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில், கோவிலுக்கான செலவுகளை பஞ்சபாண்டவர்கள் பகிர்ந்து கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. இந்த கோவிலில் செய்யப்படும் அன்னதானமானது மீனவர்கள், அங்காடியில் வியாபாரம் செய்பவர்கள், வெற்றிலை விற்கும் நாடார்கள், ஆடு மாடுகளை வளர்த்துவந்த கோணார்கள், நெசவாளர்கள் இப்படி ஜாதி மத வேறுபாடின்றி இவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட சன்மானத்தில் இந்த ஆலயமானது பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

பெரிய சுவாமி திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றைப் போக்கும் தலமாகவும், மாந்திரீக பிரச்னை களுக்கும், மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் பரிகார தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியசுவாமி சன்னிதியின் எதிர் புறம் ஆஞ்சநேயர் சன்னிதி அமைக்கப்பட்டு ள்ளது. சிறப்பு மிக்க பிரார்த்தனை தலமான இந்த ஆலயத்தில் வினை மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட வர்கள், தீராத பணிகளால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து தங்கள் குறைகள் நீங்கப்பெறுகின்றனர். இத்தலத்தில் விரதம் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு தீராத வியாதிகள் தீரும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மக்கள் செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. வேண்டுவோருக்கு வேண்டுபவை எல்லாம் கிடைக்கும் அற்புதத் தலம் இதுவாகும். குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்தினால் வேண்டியது நிறைவேறும். கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்தி சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செருப்பு மற்றும் கதாயுதம் காணிக்கை செலுத்துகின்றனர்.

ஹரி ஓம் ராமானுஜாய நமக எங்கள் குலதெய்வம் ஐந்து வீட்டு சுவாமிகள் துணை      இக்கோவிலின் சிறப்பு அம்சங்கள் மற்றும் தெய்வங்கள...
07/05/2026

ஹரி ஓம் ராமானுஜாய நமக எங்கள் குலதெய்வம் ஐந்து வீட்டு சுவாமிகள் துணை

இக்கோவிலின் சிறப்பு அம்சங்கள் மற்றும் தெய்வங்கள் குறித்த விவரங்கள்:மூலவர் மற்றும் சன்னிதிகள்:ஸ்ரீ பெரியசாமி: பிரதான மூலவர் விக்கிரகமாக அருள்பாலிக்கிறார்.ஸ்ரீ வைணவ பெருமாள்: ஸ்ரீ பெரியசாமிக்குத் தெற்குப் பக்கத்தில் சன்னிதி உள்ளது.ஸ்ரீ அனந்தம்மாள்:ஸ்ரீ ஆத்தி சுவாமி: குதிரை சுவாமிக்கு அருகே அமைந்திருக்கிறது.ஸ்ரீ பெரியபிராட்டி அம்மன்:மேலும் பெரியசாமி சன்னதி எதிர்புறம் ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் குதிரை சுவாமி சன்னதிகளும் உள்ளன. பெரியசாமிக்கு மட்டுமே மூலவர் விக்கிரகம் உள்ளது, மற்றவை சன்னதிகளாக உள்ளன.தல சிறப்பு:ஜாதி பேதமற்ற வழிபாடு: ஜாதி, மத வேறுபாடின்றி பக்தர்கள் அனைவரும் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியைத் தொட்டு தரிசனம் செய்ய அனுமதிப்பது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.பெரியசாமி வரலாறு: பெரியசாமியிடம் பக்தி கொண்ட நெசவுத் தொழிலாளியின் பிள்ளைகளாக வளர்ந்தவர்கள், முற்பிறப்பை உணர்ந்து தெய்வ வடிவம் பெற்று ஸ்ரீ வயணப் பெருமாளாகவும், ஸ்ரீ அனந்தம்மாளாகவும் காட்சி தருவதாக நம்பப்படுகிறது.படையல் வழிபாடு: பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும், மூலஸ்தானத்தில் படையல் போட்டு பூஜை செய்யும் முறை உள்ளது.வழிபாடு நேரம்: தினசரி காலை 8 மணி, மதியம் 12 மணி, இரவு 7 மணி என 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன.திருவிழா: ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 8 நாட்கள் பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.மலையாள தேசத்திலிருந்து வந்த மந்திரவாதிக்கு பெரியசுவாமிகள் காட்சி அளித்தது போன்ற தல வரலாறுகளும் இக்கோவிலுக்கு உண்டு.

Address

Tirupati

Alerts

Be the first to know and let us send you an email when Iynthuveetu swamy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share