St Antony's Church Madapuram

St Antony's Church Madapuram புனித அந்தோனியார் ஆலயம், மடப்புரம், திருத்துறைபூண்டி பங்கு , தஞ்சாவூர் மறை மாவட்டம்

28/07/2020

இறையேசுவில் அன்புமிக்க கோடிஅற்புதர் புனித அந்தோணியாரின் அன்பு பக்தர்களே இன்று (28.07.2020) செவ்வாய்க்கிழமை நமது ஆலயமானது புதியதாக கட்டப்பட்டு அர்ச்சிப்பு விழா நடைபெற்ற தினம் முன்னிட்டு காலை 6.30 மணிக்கு நமது ஆலயத்தில் சிறப்பாக திருப்பலி நிறைவேற்றப்பட்டது

14/01/2016
14/01/2016

மடப்புரம் புனித அந்தோனியார் ஆலயம்

பொங்கல் விழா

நாள் : 17-01-2016

புனித அந்தோனியார் ஆலய பொங்கல் விழா நிகழும் ஜனவரி மாதம் 17 ஆம் தேதி ஞாயிறு காலை 7 மணி முதல் அனைவராலும் பொங்கல் சமைக்கப்பட்டு, 11 மணியளவில் பொங்கல் சிறப்பு பாடல் திருப்பலியும் நடைபெறும். பொங்கல் விழாவிற்கு வருகை தந்து புனித அந்தோனியாரின் ஆசிர் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

23/12/2015

மடப்புரம் - புனித அந்தோனியார் ஆலயம்

நமது பாதுகாவலர், கோடி அற்புதர், புனித அந்தோனியார் ஆலயத்தில், மாதத்தின் முதல் செவ்வாய் கிழமையை சிறப்பு செய்யும் விதமாக திருப்பலியுடன் சேர்ந்து சில பக்தி முயற்ச்சிகள் எற்பாடு செய்ய உள்ளன. நிகழ்வுகள் அனைத்தையும் இம்மாத இறுதிக்குள் தெரிவிக்கிறோம்.

23/07/2015

மடப்புரம் புனித அந்தோனியார் திருத்தலம் - புதிய ஆலய அர்ச்சிப்பு விழா

நாள் : 28-07-2015
நேரம் : மாலை 5:30 மணி

பேரன்புடையீர்,

இறைவனின் இரக்கத்தாலும், புனித அந்தோணியாரின் ஆசீராலும் புதிதாக கட்டப்பட்டுள்ள எழில்மிகு ஆலயம், ஜூலை 28ஆம் தேதி மாலை 5.30 மணியளவில், தஞ்சை ஆயர் மேதகு. தேவதாஸ் அம்புரோஸ் அவர்காளால் புனிதம் செய்யப்பட்டு, திறந்து வைக்கப்பட உள்ளது, இச்சிறப்புமிக்க புனித நிகழ்வுகளில் அனைவரும் பங்கேற்று புனித அந்தோணியாரின் ஆசீர் பெற அன்புடன் அழைக்கிறோம்....

அழைப்பில் மகிழும்...
மடப்புரம் கிராம மக்கள்.

20/06/2015

மடப்புரம் புனித அந்தோனியார் ஆலய திருவிழா

நாள் : 11-07-2015

நேரம் : மாலை 6:00 மணி

புனித அந்தோனியார் ஆலய திருவிழா நிகழும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி மாலை கொடி ஏற்றப்பட்டு, ஜூலை 11ஆம் தேதி மாலை திருவிழா திருப்பலியும், அதனை தொடர்ந்து திருத்தேர் பவனியும் நடைபெறும்.

திருவிழாவிற்கு வருகை தந்து புனித அந்தோனியாரின் ஆசிர் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

Address

Thiruthuraipoondi

Website

Alerts

Be the first to know and let us send you an email when St Antony's Church Madapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share