30/11/2025
https://youtu.be/4kWt9zV26hg
60 ஆண்டுகள் அடிமைகளாக இருந்து விடுதலையாக்கப்பட்டும் வேறு தேசத்துக்கு செல்லாமல் அதே இடத்தில் இருந்து தன் பெற்றோர் இல்லாமல், தன் அண்ணனோடு யெகோவாவை மாத்திரம் நம்பி வாழ்ந்து வந்தார் அக்சாள். அவள் தன் அண்ணனாகிய மொர்தகாயின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து யெகோவாவை மாத்திரம் நம்பி அரசி பதவியின் தேர்வுக்கு சென்றாள். அங்கே எத்தனையோ பேர் அரசி பதவியின் தேர்வுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் தன் சுயத்தை மட்டுமே நம்பி அத்தேர்வுக்கு வந்திருந்தனர், ஆனால் அக்சாளோ யெகோவாவை மாத்திரம் நம்பி சென்றாள். யெகோவாவின் உதவியால் அடிமைப்பெண் அரசியாக உயர்த்தப்பட்டாள்.
அது மட்டுமில்லாமல் தன் ஜனத்துக்கு வரப்போகும் அழிவை தன் அண்ணன் மூலம் தெரிந்து கொண்டு தன்னிடம் அரசி பதவி உள்ளது அதை வைத்து தன் மக்களை காப்பாற்றிவிடலாம் என்று எண்ணாமல் யெகோவா ஒருவரே தன்னையும் தன் ஜனங்களையும் இந்த பெரும் அழிவிலிருந்து காக்க வல்லவர் என்பதை அறிந்து அவரை மாத்திரம் நம்பி மூன்று நாட்கள் தானும் உபவாசித்து ஜெபித்து தன் ஜனங்களையும் உபவாசித்து ஜெபிக்கும்படி கூறி யெகோவாவிடம் மன்றாட வைத்தாள். அதன் பெரிய பலனாக யெகோவா ஒருவரே அவளையும் அவள் ஜனங்களையும் அந்த பேராபத்திலிருந்து விடுதலையாக்கி காப்பாற்றினார். அவர்கள் வாழ்வை மாற்றினார்.
எஸ்தரின் அண்ணனாகிய மொர்தெகாயையும் அழிக்க நினைத்தவன் அழிக்கப்பட்டு அவன் இடத்திற்கு மொர்தெகாய் உயர்த்தப்பட்டார். ஆகவே உபவாசித்து ஜெபிக்கும் போது எவ்வளவு பேராபத்தாய் இருந்தாலும் அதிலிருந்து விடுதலையாக்க அவராலே முடியும் என்பதை இந்த எஸ்தர் சரித்திரத்தின் மூலம் தெரிந்துகொள்வோம்.
யூத ஜனங்களை அழிக்க ஆமான் எப்படி சதி திட்டம் தீட்டினானோ அதே போல இன்றும் தேவ ஜனங்களை அழித்து கொன்று நிர்மூலமாக்க சத்துருவான சாத்தான் சதி திட்டம் தீட்டிக்கொண்டே தான் இருக்கிறான். யூத ஜனங்களை காக்க எப்படி எஸ்தர் ராஜாத்தி தன்னுடைய ஜனங்களுக்காக தன்னுடைய உயிரையும் தன் பதவியையும் துட்சமாக எண்ணி திறப்பில் நின்றாரோ, அதே போல் நாமும் அழிந்து கொண்டிருக்கும் நமது தேசத்தின் ஜனங்களுக்காக திறப்பில் நின்று ஜெபித்து ஒளி வீசுவோம் நம் தேசத்தையும் ஒளி வீச எழும்பி பிரகாசிக்க செய்வோம். நன்றி.
இந்த எஸ்தர் சரித்திர நாடக காணொளியை கண்டு மகிழ்ந்து தேவனைத் துதித்திருப்பீர்கள் என நம்புகிறோம்.
மேலும் வீடியோக்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள்.
இந்த எஸ்தர் சரித்திர நாடக காணொளி மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருக்க SHARE செய்யுங்கள்.
சிறப்பு நன்றி:
ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள் & மாணவர்கள் (2024-25)
வாலிப பெண்கள் ஐக்கிய சங்கம் (2024-25)
தேவனுக்கே மகிமை உண்டாவதாக!60 ஆண்டுகள் அடிமைகளாக இருந்து விடுதலையாக்கப்பட்டும் வேறு தேசத்துக்கு செல்லாமல் அதே ....