29/08/2026
அன்பு நண்பர்களே பிரிவினை சகோதரர்கள் நமது பாரம்பரிய வழிபாடுகளை குறிப்பாக நமது ஆராதனைகளிலும் மற்ற வழிபாடு முறைகளிலும் நமது ஆலய நேர்ச்சைகளையும் பிறமத வழிபாடுகளை செய்கிறீர்கள் என்று தப்பறையான போதனைகளை நம்மீது வீசுகிறார்கள்
யூதத்தின் தொடர்ச்சியே கத்தோலிக்கம்
பிரிவினை மற்றும் பெந்தகோஸ்து அமைப்பினர் சொல்வது இவைகளைத்தான்
💥💥💥💥💥💥👇👇👇👇👇👇👇
1, ஆலயங்களில் கொடி ஏற்றுதல் திரு விழாக்கள்
2,ஆலயங்களில்
மெழுகுவர்த்தி அல்லது விளக்கு ஏற்றுதல்
3, சாம்பிராணி , தூபம் காட்டுதல்
4, பூக்களால் ஆலங்காரம.
5, சந்தனம் மற்றும் நறுமணம் பொருட்களை ஆலயங்களில் பயன் படுத்துவது
6,ஆலயங்களில் தாழ்ந்து பணிந்து முட்டிபோட்டு நடந்து இறைவேண்டல் செய்வது .
7,ஆலயங்களில் மொட்டையடித்தல்
8,பாதயாத்திரை
9,தேர் , சப்பரபவனி
10,செபமாலை
11,உப்பு
👆👆👆👆👆👆👆
💥மேலே உள்ள வழிபாடு மற்றும் திருநிகழ்வுகள் பிறமதம் சார்ந்தவைகளா இல்லை அதற்கான விவிலிய சான்றுகளும் பாரம்பரிய நிகழ்வுகளும் 💥
1,,கொடியேற்றுதல் திருவிழா 🏳️
🏳️
திருப்பாடல்கள் - திபா 20 5 உமது வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக! நம் கடவுளின் பெயரால் வெற்றிக்கொடி நாட்டுவோமாக! உம் விண்ணப்பங்களையெல்லாம் ஆண்டவர் நிறைவேற்றுவாராக!
இணைச் சட்டம் - இச 16 15 உன் ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஏழு நாள்கள் விழாக் கொண்டாடு. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார். அப்பொழுது நீ நிறைவாக மகிழ்ச்சியுறுவாய்
2, மெழுகுவர்த்தி அல்லது விளக்கு ஏற்றுதல்
விடுதலைப் பயணம் - விப 25 31 பசும் பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்வாய். அடிப்பு வேலையுடன் விளக்குத் தண்டை அமைப்பாய். அதன் அடித்தண்டு, கிளைகள், கிண்ணங்கள், குமிழ்கள், மலர்கள் ஆகியவை ஒன்றிணைந்ததாக விளங்கட்டும்.
விடுதலைப் பயணம் - விப 25 37 அதற்காக ஏழு அகல்கள் செய்வாய்; முன் பக்கமாக ஒளிவீசும் முறையில் அவற்றை ஏற்றிவைப்பாய்.
லூக்கா - லூக் 11 33 “எவரும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ மரக்காலுக்குள்ளோ வைப்பதில்லை; மாறாக அறையின் உள்ளே வருவோர்க்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர்.
ஆலயங்களில் ஏற்றப்படும் விளக்கு அந்நிய கலாச்சாரமா ????
💥💥💥💥💥💥
3, சாம்பிராணி தூபம் காட்டுதல்
மலாக்கி - மலா 1 11 கதிரவன் தோன்றும் திசை தொடங்கி மறையும் திசைவரை வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ்மிக்கது. எவ்விடத்திலும் என் பெயருக்குத் தூபமும் தூய காணிக்கையும் செலுத்துப்படுகின்றன. ஏனெனில் வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ் மிக்கதே” என்கிறார்,
படைகளின் ஆண்டவர்.
மத்தேயு : 2 : 11 - அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
திருவெளிப்பாடு - திவெ 8 3 மற்றொரு வானதூதர் பொன் தூபக் கிண்ணம் ஏந்தியவராய்ப் பலிபீடத்தின் அருகில் வந்து நின்றார். அரியணைமுன் இருந்த பொன் பலிபீடத்தின்மீது இறைமக்கள் அனைவரும் செய்த வேண்டுதல்களோடு படைக்குமாறு அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது.
4 அச்சாம்பிராணிப் புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது.
கடவுளை ஆராதனை செய்ய பயன்படுத்த தூபமும் சாம்பிராணியும் பயன்படுத்துவது மரபு
💥💥💥💥💥💥💥
4 ,இறைவன் விரும்பும் பூக்களாலான அலங்காரம் .
🌷💥💥💥💥💥💥💥💥🌷💥💥💥💥🌷
விடுதலைப் பயணம் - விப 25 33 ஒரு கிளையில் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் 🌷மலருடனும் சேர்ந்து அமையும். மறுகிளையிலும் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் 🌷மலருடனும் அமையும். இவ்வாறே விளக்குத்தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் இருக்கட்டும்.
எண்ணிக்கை - எண் 17 8 மறுநாள் மோசே உடன்படிக்கைக் கூடாரத்தினுள் சென்றார்; லேவிகுலத்துக்காக இருந்த ஆரோனின் கோல் துளிர் விட்டிருந்தது; அது துளிர்த்துப் 🌷பூத்து வாதுமைப் பழங்களைத் தாங்கியிருந்தது.
5, இறைவன் விரும்பும் சந்தனம் மற்றும் குங்குமம்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
திருப்பாடல்கள் - திபா 45 8 நறுமணத் துகள், அகிலொடு இலவங்கத்தின் மணங்கமழும் உம் ஆடையெலாம்; தந்தம் இழைத்த மாளிகைதனிலே யாழிசை உம்மை மகிழ்விக்கும்.
6,ஆலயங்களில் இறைபிரசன்னம் முன்பாகதாழ்ந்து பணிந்து முட்டிபோட்டு நடந்து இறைவேண்டல் செய்வது .
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
யோசுவா - யோசு 7 6 யோசுவா தம் ஆடைகளைக் கிழித்துக்கொள்ள, அவரும் அவருடன் இஸ்ரயேலின் முதியோரும் ஆண்டவரின் பேழைக்குமுன் மாலைவரை தரையில் முகம்குப்புற விழுந்து கிடந்தனர். தம் தலைமீது புழுதியைப் போட்டுக் கொண்டனர்.
திருப்பாடல்கள் - திபா 132 7 “அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்! வாருங்கள்; அவரது திருவடிதாங்கி முன் வீழ்ந்து பணிவோம்!” என்றோம்.
மத்தேயு : 2 : 11 - அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
7 ,ஆலயங்களில் மொட்டையடிப்பது
(இது கத்தோலிக்க திருச்சபை கோட்பாடோ ,கொள்கையோ அல்ல..ஆனால் இது அந்தந்த இடத்து கலாச்சாரத்தோடும் சேர்ந்த பக்தி முயற்சியே..உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கமக்கள் மொட்டை அடிப்பதுமில்லை, கட்டாயமும் இல்லை..அதேவேளை பைபிளில் உள்ள சம்பவமே)
எண்ணிக்கை - எண் 6 18 நாசீர் புனிதப்படுத்தப்பட்ட தன் தலையைச் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் மழித்து, புனிதப்படுத்தப்பட்ட தன் தலைமுடியை எடுத்து நல்லுறவுப் பலியின் அடியில் இருக்கும் நெருப்பில் போடுவான்.
திருத்தூதர் பணிகள் - திப 18 18 பவுல் அந்தியோக்கியா திரும்புதல்
பவுல் பல நாள்கள் கொரிந்துவிலுள்ள சகோதரர் சகோதரிகளிடம் தங்கியிருந்தார். அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டுத் தம் நேர்த்திக் கடனை நிறைவேற்றக் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக்கொண்டு, அக்கில்லா பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார்
பவுல் நேர்ச்சை மொட்டை அடித்தது அந்நிய கலாச்சாரமா ????
💥💥💥💥💥💥💥
8,பாதயாத்திரை
லூக்கா - லூக் 2 41 ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்;
திரு பாடல்கள் தியாநித்து இறைவனை மகிமை படுத்தி நடந்து செல்வார்கள்
அதாவது நாசரேத்துக்கும் ஜெருசலேம் இடைப்பட்ட தூரம் 90 மைல்கள் 147 கிலோமீட்டர் தூரம்
பெரும்பாலும் கால்நடையாகத்தான் பயணம் இருக்கும்
காரில் ஆலயம் சென்றால் ரத யாத்திரை
💥💥💥💥💥💥
9,தேர் அல்லது சப்பரம்
யோசுவா - யோசு 3 15 உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர். அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன், மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகுதொலையில் நின்றது. அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும்.
2 சாமுவேல் - 2 சாமு 6 15 தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.
உடன்படிக்கை பேழையின் மாதிரிகள்தான் சப்பரம்
💥💥💥💥💥💥💥
10,செபமாலை
எண்ணிக்கை - எண் 15 38 இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு; அவர்கள் தலைமுறைதோறும் தங்கள் உடைகளின் முனைகளில் குஞ்சங்கள் செய்து ஒவ்வொரு குஞ்சத்திலும் ஒரு நீல நாடாவைக் கட்டச் செய்;
எண்ணிக்கை - எண் 15 39 நீங்கள் ஒழுக்கம் கெட்டு நடப்பதற்கு ஏதுவாய் உங்கள் இதயங்களும் உங்கள் கண்களும் விரும்புவதைப் பின்பற்றாமல் நீங்கள் அவற்றைப் பார்த்து ஆண்டவர் கட்டளைகள் அனைத்தையும் நீங்கள் நினைவு கூர்ந்து அவற்றைச் செய்திடவே இக்குஞ்சம்.
ஆடைகளின் ஓரங்களில் இஸ்ராயல் மக்கள் ஏற்படுத்திய முடிச்சுகள் மறு உருபம் அடைந்து செபமாலைகளாக மாறியது
அன்னையோடிணைந்து ஆண்டவர் இயேசுவின் பிறப்பு இறப்பு விண்ணேற்பு வாழ்க்கைமுறைகளை தியானிப்பது செபமாலை
செபமாலை வாக்கியங்கள் அனைத்தும் விவிலிய வார்த்தைகள்💥💥💥💥💥
11,உப்பு
எண்ணிக்கை - எண் 18 19 இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் புனிதப்படையல்கள் அனைத்தையும் நான் உனக்கும் உன்னோடிருக்கும் உன் புதல்வர் புதல்வியருக்கும் என்றுமுள நியமமாகத் தருகிறேன்; இது உனக்கும் உன்னோடிருக்கும் உன்வழி மரபுக்கும் ஆண்டவர் திருமுன் என்றுமுள “உப்பு உடன்படிக்கை” ஆகும்.
💥💥💥💥💥💥💥💥
மத்தேயு - மத் 5 17 “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
2 தெசலோனிக்கர் - 2 தெச 2 15 ஆகவே அன்பர்களே! எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக் கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள்.
கத்தோலிக்க திருச்சபை பாரம்பரிய புனித நிகழ்வுகள் அனைத்தும் விவிலிய உண்மைகளே 💥
கத்தோலிக்கர்கள் பாவிகளா பாவம் செய்ய வேளாங்கண்ணி அல்லது வேறு ஆலயங்கள் செல்கிறார்களா??
👉கத்தோலிக்க இறை மக்களை பாவிகள் என்று குறை கூறும் பிரிவினை வாதிகளே உங்களை பார்த்து ஒரு கேள்வி நீங்கள் இராட்சிப்பை பெற்றதற்கு என்ன proof??? கடவுள் எதாவது certificate தந்தாரா? நேரில் வந்து உன்னிடம் சொன்னாரா .?
அன்பு நண்பர்களே நல்ல பாவசங்கீர்ததனம செய்து புனித திருப்பலியில் பங்கு பெற்று திவ்ய நற்கருணை உட்கொள்ளுங்கள்
நமது உடலை தூய ஆவியானவர் தங்கும் ஆலயமாக மாற்றுவோம்
🌸அற்புதங்களை #அள்ளி செல்லுங்கள் கிறிஸ்தவ வாழ்வு என்பது போராட்டமான வாழ்வு போராடி வெற்றி கொள்வோம் #ஜெபமாலை செய்வோம்
குறிப்பாக பிரிவினைவாதிகள் கடவுள் இயேசுவை ஏற்க மறுக்கும் யோகோவா விட்னெஸ் பிரிவினைவாதிகளிடம் சற்று விலகியே இருங்கள் ஏமாந்த கத்தோலிக்க விசுவாசிகளை தனது சுய லாபத்திற்காக மூளை சலவை செய்து குளப்பி ஆதாயம் தேட தங்கள் தனது அமைப்பிற்கு இழுத்து செல்ல வருவார்கள்
🌷GLORY TO JESUS 🙏 AVE MARIA🌷
👉 Follow our page for more Catholic teachings, lives of the saints, and faith-deepening reflections.