20/08/2026
இந்த கிருஷ்ண ஜெயந்தியை, குடும்பத்துடன் பக்தியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு சிறப்பான அனுபவமாகக் கொண்டாடலாம்! ✨
மதுரை திருப்பாலை ISKCON ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில், செப்டம்பர் 4, 2026 அன்று ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி மஹோத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
சிறப்பு அலங்காரம், மஹா அபிஷேகம், பஜனைகள், கீர்த்தனைகள், பிரசாதம் என நாள் முழுவதும் பல ஆன்மிக நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன.
அதுமட்டுமல்ல... ஒரு சிறப்பான SURPRISE-உம் காத்திருக்கிறது! 👀
மஹா மந்திர ஜபத்தில் கலந்து கொண்டு, உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் 10 Lucky Winners தேர்வு செய்யப்பட உள்ளனர்! 🎉
அந்த Lucky Winners-க்கு என்ன பரிசு?
அது இப்போதைக்கு ரகசியம்! 🤫
என்னவென்று தெரிந்துகொள்ள, செப்டம்பர் 4 அன்று நேரில் வந்து இந்த விழாவில் கலந்துகொள்ளுங்கள்.
செப்டம்பர் 4 | ISKCON திருப்பாலை, மதுரை
ஹரே கிருஷ்ணா! 🙏