Nandeeswarar Foundation

Nandeeswarar Foundation Learning Internal Finding Eternal

23/10/2023

அன்பே சிவம் மனமே குரு சிவாயநம நமசிவாய

திருநீறு

திருநீறு எவ்வளவு இந்த உயிருக்கு பயன்படுகிறது என்பது பற்றிப் பார்ப்போம்
சைவத் திருவேடங்களில் திருநீறு உருத்திராக்கம் சடாமுடி ஆகியன இம்மூன்றும் மிகவும் உன்னதமாக போற்றப்படுகின்றன இறைவனே திருநீற்றினை மேனி( உடல் முழுவதும்) முழுவதும் பூசி விரும்பி அணிந்துள்ள குறிப்புகள் புராணங்களிலும் உபநிடதங்களிலும் ஆகமங்களிலும் திருமுறைகளிலும் நிறைந்துள்ளன
திருநீற்றின் ஆற்றலால் திருஞானசம்பந்தர் சமணர்களை வாதில் வென்றது வரலாற்றுச் சான்றக உள்ளது அடியார் பெருமக்கள் திருநீற்றினை இறைவன் அருளிய பெரும் செல்வமாக ( சொத்தாக) போற்றி அணிய வேண்டும் கையிருப்பில் திருநீற்றுப்பை வைத்துக்கொண்டு அவ்வப்போது திருவைந்தெழுத்து ( சிவாயநம) என நினைந்து அணிய வேண்டும் திருநீற்றின் மகிமை முழுவதும் அறியாததாலேயே அடியார் பெருமக்கள் கூட திருநீற்றினை நிறைய அணியா நிலை உள்ளது

“திருஞானசம்பந்தர் வாக்கில் விபூதியின் பெருமை ” சொல்லப்பட்ட திறத்தை பார்ப்போம்

1: மந்திரம் ஆவது நீறு

2: வானவர்கள் அணிவது நீறு

3: அழகு தருவது நீறு

4: வணங்கப்படுவது நீறு

5: வேத சிவ ஆகமங்களில் புகழ்ந்து கூறப்படுவது நீறு

6: கொடிய துயர்களை ( துன்பங்களை) நீக்க கூடியது நீறு

7: சிவஞானம் தருவது நீறு

8: அறியாமையை போக்குவது நீறு

9: ஓதத் தக்கது நீறு

10: உண்மையாய் நிலைபெற்றிருப்பது நீறு

11: முத்தி தருவது நீறு

12: முனிவர் அணிவது நீறு

13: சத்தியமாவது நீறு

14: தக்கோர் புகழ்வது நீறு

15: இறைவனிடம் பக்தியை ஏற்படுத்துவது நீறு

16: போற்றிப் பரவ இனியது நீறு

17: எண் வகைச் ( அட்டமா சித்திகளை) சித்திகளை அருளுவது நீறு

18: காண இனியது நீறு

19: கவர்ச்சியை ( தேஜஸ் – ஒளியை) கொடுப்பது நீறு

20: போற்றி அணிந்து கொள்வோருக்கு பெருமைகள் கொடுப்பது நீறு

21: கொடிய மரணத்தை தவிர்ப்பது நீறு

22: அறிவை ( ஞானத்தை) தருவது நீறு

23: உயர்வை ( மேலான நிலையை) அளிப்பது நீறு

24: பூசிக் கொள்ள இனியது நீறு

25: புண்ணியம் தருவது நீறு

26: அதன் ( திருநீற்றின்) பெருமை பேச இனியது நீறு

27: பெருந்தவப் புரிவோருக்கு உலகியல் ஆசை கெடுப்பது நீறு

28: முத்தியாகிய ( திருவடிப்பேறு, முக்திப்பேறு) நிலையான பேரின்பம் நல்குவது நீறு

29: உலகோரால் ( உலகியல் வாழ்க்கை வாழும்) புகழப்படுவது நீறு

30: செல்வங்கள் ( நிலையான செல்வம்) ஆவது நீறு

31 : உலகியல் துன்பம் நீக்குவது நீறு

32: மன வருத்தங்களை தணிப்பது நீறு

33: வானுலகம் அளிப்பது நீறு

34: பொருத்தி ( உடல் முழுவதும்) அமைவது நீறு

35: புண்ணியர்கள் பூசுவது நீறு

36: முப்புரங்களை அழித்தது நீறு

37: இம்மைக்கும் மறுமைக்கும் துணையாய் இருப்பது நீறு

38: அதன் ( திருநீற்றின் தன்மைகளை நூலில் பார்த்து உணர்வது) பெருமைகளை பயிலப்படுவது நீறு

39: பாக்கியமாவது நீறு

40: அறியாமையால் மூழ்கும் துயிலை தடுப்பது நீறு

41: மும்மலங்களை ( ஆணவம்,கன்மம்,மாயை) அகற்றி சுத்தம் செய்வது நீறு

42: சிவ பக்தனான இராவணன் விரும்பி அணிவது நீறு

43: அதன் ( திருநீற்றின்) பெருமைகளை எண்ணி இன்புறத் தகுவது நீறு

44: பாரசக்தி ( பார்வதி அம்மை அம்சம்) வடிவமானது நீறு

45: எல்லா பாவங்களையும் ( பஞ்ச மகா பாவங்கள்) நீக்குவது நீறு

46: தராவணமாவது ( அசுரர்கள் விரும்பி அணியும்) (தரா -சங்கு) நீறு

47:தத்துவங்களாவது ( 36 தத்துவங்கள் மற்றும் 60 தாத்வீகங்கள்) நீறு

48: திருமாலும்
நான்முகனும் அறியாதது நீறு

49: மேலுறையும் ( கவசமாக) தேவர்கள் காப்பாக மேல் அணிவது நீறு

50: பிறவிப் பிணி ( அறியாமை என்ற இருள்) அடையும் உடலிடர் தீர்த்துப் பிறவி அறுப்பது நீறு

51 : புத்தரும் சமணரும் காண அவர்கள் கண்களை திகைக்கச்செய்வது நீறு

52: அதை திருவைந்தெழுத்தை ( சிவாயநம) கருதி தியானிக்க இனியது நீறு

53: எண் ( எட்டு திசைகளிலும்) திசைகளிலும் சிவமே பரம்பொருள் என வாழும் மெய்ஞானிகள் ஏற்றிப் போற்றுவது நீறு

54: அண்டமெல்லாம் வாழும் சிவனடியார்கள் பணிந்து போற்றுவது நீறு

55: பாண்டியனின் தீப்பிணியை உலகோர் முன் திருநீற்றின் பெருமைகளை பாட அவன் பிணி தீர்த்தது நீறு

இவ்வாறு திருநீற்றின் பெருமைகளை சொல்லிக்கொண்டே இருக்கலாம் ஆகவே திருநீறு நமக்கெல்லாம் கவசம் போல் உடலில் உள்ள உயிரை ஈடேற்றும் ஒரு சிறந்த மருந்தாகும்
இந்தப் பிறவி என்னும் நோயை தீர்க்க வல்லமை வாய்ந்த மாமருந்தாகும் திருநீறு எனவே சிவனடியார்கள் எப்போதும் திருநீற்றை பூசிக்கொண்டே இருக்க வேண்டும்

திருச்சிற்றம்பலம்.

04/10/2023
கண் திருஷ்டி யாரை அதிகம் பாதிக்கும் இலக்னம், ஐந்து, ஒன்பதாம் இடத்தில் மாந்தி இருந்தால், அந்த நபர்களை கண் திருஷ்டி எளிதில...
24/08/2023

கண் திருஷ்டி யாரை அதிகம் பாதிக்கும்

இலக்னம், ஐந்து, ஒன்பதாம் இடத்தில் மாந்தி இருந்தால், அந்த நபர்களை கண் திருஷ்டி எளிதில் பாதிக்கும். இலக்னாதிபதி 6, 8, 12ஆம் வீட்டில் மறைந்திருந்தால், அவர்களுக்கு கண் திருஷ்டி பாதிப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும். சிலருக்கு செய்வினையாக மாறவும் வாய்ப்புண்டு.

கண் திருஷ்டி ஒரு சிலரை எளிதில் தாக்காது. அதற்கு ஜோதிட ரீதியான காரணங்கள் உள்ளன.

ஒருவரது ஜாதகத்தில் இலக்னம் மற்றும் இலக்னாதிபதி வலிமையாக இருந்தால், அவரை கண் திருஷ்டி எளிதில் பாதிக்காது.

இலக்னாதிபதி 8ஆம் வீட்டில் மறைந்தவர்களுக்கு கண் திருஷ்டியால் விபத்து, அல்லது உயிர் பயம் இருந்து கொண்டே இருக்கும்.

இலக்னத்திற்கு 2, 12ஆம் வீட்டில் மாந்தி, சனி, இராகு-கேதுக்கள் இருப்பின், அவர்களின் கண் பார்வைக்கு கெட்ட சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் அதிகம்.

20/08/2023
28/07/2023
உருளி எங்கு வைப்பது நல்லது?வீட்டின் செழிப்பிற்காக பழங்காலம் முதலாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஒரு பழக்கம் தான், வீட்டு வாசலுக...
11/07/2023

உருளி எங்கு வைப்பது நல்லது?

வீட்டின் செழிப்பிற்காக பழங்காலம் முதலாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஒரு பழக்கம் தான், வீட்டு வாசலுக்கு அருகே ஒரு கிண்ணத்தில் நீரை நிரப்பி, பூக்களை வைப்பது. இதை உருளி என்று அழைப்பர்.

நீர் செழிப்பு, நேர்மறையைக் குறிக்கிறது. எனவே தான் அக்காலத்தில் வீட்டில் ஒரு கிண்ணத்தில் நீரை நிரப்பி, அதில் பூக்களைக் கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டு வந்தது.

இப்படி வீட்டில் உருளியை வைக்கும் போது அந்த வீட்டில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் நீங்கி, நன்மைகள் நடக்கும்.

முக்கியமாக அந்த வீட்டில் உள்ளோர் வெளியே செல்லும் போது, இதைப் பார்த்து விட்டு செல்வதால், காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.

இப்போது வாஸ்துப்படி வீட்டில் உருளியை வைப்பதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் மற்றும் எந்த இடத்தில் உருளியை வைக்க வேண்டும் என்பன குறித்து காண்போம்.

ஒரு வீட்டில் உருளியை வைக்க சிறந்த பகுதி என்றால், அது அனைவரது கண்களும் படும்படியான இடம் தான். அப்படி அனைவரது கண்ணில் படக்கூடிய ஒரு பகுதி வீட்டின் ஹால் அல்லது நுழைவு வாயில் பகுதி தான்.

உருளியை வீட்டின் வலது பக்கத்தில், ஹாலின் மையப் பகுதியில், தென்கிழக்கு மூலை அல்லது வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும்.

உருளியில் பச்சை அல்லது நீல நிற பூக்களை வைப்பதாக இருந்தால், அதை வடக்கு அல்லது வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும்.

அதுவே மஞ்சள் நிற பூக்களை வைப்பதாக இருந்தால், தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும்.

வீட்டில் உள்ள வாஸ்து தோஷத்தைப் போக்க விரும்பினால், வீட்டின் வடகிழக்கு திசையில் உருளியை வைப்பதனால், வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

வீட்டின் ஈசான மூலையான, வடகிழக்கு மூளையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உருளியை வைப்பதன் மூலம், வீடு செல்வ செழிப்போடு இருக்கும்.

வீட்டின் பூஜை அறையில் வெள்ளை அல்லது மஞ்சள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உருளியை வைக்கும் போது, அது அந்த வீட்டில் உள்ள கடவுளை சாந்தப்படுத்தி மகிழ்ச்சியடையச் செய்யும்.

உருளியை பித்தளை, வெள்ளி, ஐம்பொன், தங்கம் என்று எந்த உலோகத்திலும் வைக்கலாம். அதுமட்டுமின்றி, கண்ணாடி, மண், பீங்கான் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். ஆனால் சில்வர், இரும்பு, அலுமினியம் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது

வீட்டில் உருளியை வைத்தால், அதில் உள்ள நீரையும், பூக்களையும் தினமும் மாற்ற வேண்டும். உருளியில் உள்ள பூக்கள் வாடாமல் இருக்க வேண்டும். ஒருவேளை பூக்கள் வாடாமல் இருந்தால், அந்த பூக்களை அடுத்த நாளும் பயன்படுத்தலாம். ஆனால் நீரை தினமும் மறக்காமல் மாற்ற வேண்டும்.

உருளியில் ஜவ்வாது பொடிகளை சிறிது போடுவதன் மூலம், அது அந்த வீட்டில் நல்ல மணத்தைப் பரப்பி, வீட்டை தெய்வீகமாக வைத்திருக்கும்.

முக்கியமாக உருளியில் பூக்களைப் போடும் போது, காம்புடன் போடுவதே நல்லத. காம்புகளை அகற்றிவிட்டு பூக்களை மட்டும் பயன்படுத்துவது நல்லதல்ல. அதேப் போல் பூக்களின் இதழ்களை நீரில் உதிர்த்துவிடக் கூடாது.

09/07/2023

Dear Sir/Madam
Good evening
I am writing to request funding for the establishment of a free Siddha hospital. Siddha medicine is a traditional medical system that originated in South India and is based on the principles of Ayurveda. It utilizes natural herbs and minerals to treat various ailments and promote overall well-being.

The aim of this project is to provide accessible healthcare to underserved communities, particularly those who cannot afford conventional medical treatments. By offering free Siddha healthcare services, we hope to bridge the gap in healthcare accessibility and ensure that everyone has the opportunity to receive quality medical care.

Funds are required to cover several aspects of the hospital's establishment and operations, including:

Infrastructure: We need to acquire or build a suitable facility that meets the requirements for a healthcare center, including examination rooms, treatment areas, waiting rooms, and administrative offices.

Medical Equipment and Supplies: We require funding to purchase essential medical equipment and supplies such as diagnostic tools, treatment devices, herbal medicines, and other necessary items.

Staffing: Qualified Siddha doctors, nurses, and support staff will be required to operate the hospital efficiently. Funding will be allocated to hire and compensate these professionals adequately.

Outreach and Awareness: We intend to conduct awareness campaigns and community outreach programs to educate the local population about the benefits and availability of Siddha medicine. Funding will support these initiatives to ensure maximum reach and impact.

Operational Expenses: Various ongoing expenses, including utilities, maintenance, administrative costs, and patient support, will need to be covered to keep the hospital running smoothly.

We believe that a free Siddha hospital will significantly contribute to the well-being of the community, empowering individuals to take charge of their health and offering an alternative and affordable healthcare option. By supporting this project, you will be making a direct and positive impact on the lives of countless individuals who would otherwise lack access to healthcare services.

We kindly request your financial support to help us bring this vision to reality. Any contribution, no matter the size, will be greatly appreciated and put to good use. We are open to discussing the project in more detail and providing any additional information or documentation you may require.

Thank you for considering our request, and we look forward to the possibility of partnering with you to make quality healthcare accessible to all.

Sincerely,

V.Barathiselvan
Founder Cum -Managing Trustee
Shri Nandeeswarar Foundation
7867011976

09/07/2023
"திபெத்தியன் தாந்திரீக முத்திரை""இறை சக்தியின் இருப்பிடமாக நீங்கள் மாற இது ஒரு மகத்தான முத்திரை, நீங்கள் செய்யும் ஜெபத்த...
29/06/2023

"திபெத்தியன் தாந்திரீக முத்திரை""

இறை சக்தியின் இருப்பிடமாக நீங்கள் மாற இது ஒரு மகத்தான முத்திரை, நீங்கள் செய்யும் ஜெபத்தின் ஆற்றல் கோடி மடங்கு வெளிப்படும் இந்த முத்திரையின் உதவியினால்

உங்கள் இடது கையை 'அனாஹதம்' என்று அழைக்கப்படும் இருதய சக்கரத்திற்கு ( சரியாக வைக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது . தோராயமாக உங்கள் தொப்புள் மத்தியில் இருந்து ஒரு ஜான் அளவு ) நேராக வைக்கவும்.

உங்கள் வலது கையை படத்தில் காட்டியதை போல் உங்கள் இடது கையின் மேலே (உங்கள் வலது கை படத்தில் காட்டியுள்ள இடகையின் சக்தி இயக்க புள்ளிக்கு நேராக அமைய வேண்டும் ) ஒரு "3 அங்குலம்" இடைவெளிவிட்டு வைக்கவும்.

கிழக்கு திசையை நோக்கி , இந்த முத்திரையை படத்தில் காட்டியதை போல் வைத்துக்கொண்டு உங்கள் இஷ்ட தேவதையின் மூல மந்திரத்தை ஜபம் செய்யுங்கள் , உங்கள் இஷ்ட தேவதையின் அருளால் விரைவில் இஷ்ட சித்தி ஏற்படும்.

உங்கள் ஆசைகளுக்கு ஏற்றால் போல் மூல மந்திரத்தை தேர்ந்து எடுங்கள் அல்லது மந்திரங்களை தேர்ந்து எடுங்கள் ( உதாரணம் : உங்கள் வாக்கு தெய்வீக ஆற்றல் பெற வேண்டும் என்றால் " ஐம் " என்ற வாகதேவி ( சரஸ்வதி ) பீஜத்தை பிரயோகம் செய்யலாம்)

இந்த முத்திரை தேவலோக சக்தியையும் , பூலோக ( நாம் வாழும் பூமி ) சக்தியையும் இணைக்கும். இந்த முத்திரை இரு சக்திகளையும் ஆக்ரஷ்னம் செய்து இணைத்து வெளிப்படுத்தும்

இந்த முத்திரையினால் வெளிப்படும் தாந்திரீக சக்தியானது , ஒரு லேசர் கருவியில் இருந்து வெளிப்படும் சக்தி இயக்கத்தை போல் மிகவும் சக்திவாய்ந்தது . இந்த சக்தியை நாம் சில எளிய பிரயோக முறைகளை கையாண்டு அஷ்டகர்மமும் விளையாடலாம்

சாதாரணமாக இந்த முத்திரையில் இருந்து வெளிப்படும் சக்தி உங்கள் சூட்சும சரீரத்தை பலப்படுத்தும் ( இந்த சரீரம் பலம் பெற்றால் உங்கள் தாந்திரீக கிரியைகள் பலிதமாகும் ), மற்றும் உங்களை சுற்றி உள்ள இடத்திலும் இந்த சக்தி நிரம்பி இருக்கும் , ஆதலால் உன்ளேயும் புறத்திலும் இந்த மகத்தான சக்தியக்கத்தினால் எப்பொழுதும் நீங்கள் சூழபட்டு இருப்பீர்கள் .

எந்த தேவதையின் மூல மந்திரத்தை நீங்கள் உச்சாடனம் செய்கின்றீகர்களோ அந்த தேவதையின் அருள் மிக விரைவில் உங்களுக்கு கிட்டும்.

இந்த முதத்திரையை தினம்தோறும் ஐந்து நிமிடம் பிரயோகம் செய்யவும் , சுகாசனத்தில் அல்லது வஜராசனத்தில் அமர்ந்து இந்த முத்திரையை பயன்படுத்தலாம் . நின்று கொண்டும் இந்த முத்திரையை பயன்படுத்தலாம்

மூல மந்திரத்தை ஜபித்து கொண்டே நீங்கள் இந்த முத்திரையை பிரயோகம் செய்யலாம் , அல்லது மூல மந்திரம் ஜபித்த பின்பு மூல மந்திரத்தின் அதி தேவதையை தியானம் செய்து இந்த முத்திரையை பயன்படுத்தலாம்

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ண...
29/04/2023

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும். இந்நாளை சித்ர குப்தன் பிறந்தநாள் என்றும், சித்ர குப்தனின் திருமண நாள் என்றும் இருவேறு நம்பிக்கைகள் உள்ளன.
சித்ரகுப்தா தீ வேள்வி
சித்ரகுப்த ஹோமம் - தெய்வீகக் கணக்காளரான சித்ரகுப்தரின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக இந்த நெருப்பு ஆய்வகம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
சித்ரகுப்தன் ஹோமம் - உங்கள் ஆகாஷிக் பதிவுகளில் உள்ள எதிர்மறை கர்மாவை அழிக்க உதவும் தெய்வீக கணக்காளரான சித்ரகுப்தாவின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக இந்த தீ வேள்வி இலக்காகக் கொண்டது
சித்ரகுப்த ஹோமத்தின் தனித்துவமான அம்சங்கள்
'ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ்' என்பது நமது நல்ல மற்றும் கெட்ட செயல்களின் பதிவு புத்தகம் மற்றும் மறைந்திருக்கும் கர்ம விதைகள், நம்மை நாமாகவே இருக்க கட்டாயப்படுத்துகிறது. நிகழ்த்துவதன் மூலம் ஏ ஹோமம் சித்ரகுப்தாவைப் பொறுத்தவரை, இந்த ஜென்மத்திலும் கடந்த ஜென்மத்திலும் நாம் செய்த கர்மத் தவறுகளை அழிக்க முடியும். சித்ரகுப்த ஹோமத்தில் பங்கேற்பதன் மூலம், 'கெட்ட' கர்மாவை அழிக்கவும், உங்கள் 'நல்ல' கர்மாவை அதிகரிக்கவும், அந்த நல்ல கர்மாவைத் தக்க வைத்துக் கொள்ளவும், ஆகாஷிக் பதிவுக் காப்பாளரின் ஆசிகளைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது. சித்ரகுப்தன் கேதுவின் அதிபதி என்பதால், கேது தசா/புக்தி (பெரிய/சிறிய) கிரக காலங்களில் பிறந்தவர்கள், கேது ஆட்சி பெற்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அல்லது ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்களுக்கு சித்ரகுப்த ஹோமம் பரிந்துரைக்கப்படுகிறது.

நன்மைகள்
சித்ரகுப்தா தீ ஆய்வகத்தின் நன்மைகள்
தற்போதைய மற்றும் கடந்தகால வாழ்க்கையில் தெரிந்த மற்றும் தெரியாத கர்மாக்களை அழிக்கவும்

உங்கள் எதிர்மறை கர்ம சமநிலையை குறைக்கவும்

ஜாதகத்தில் கேது தோஷங்களின் தீவிரத்தை குறைக்கவும்

நல்ல கர்மாவை பராமரிக்க உதவுங்கள்
ஆகையால் நமது உறுப்பினர்கள் அனைவரும் இந்த பவுர்ணமி பூசையில் தவறாமல் பங்குகொள்ளவேண்டும்
தங்களால் முடிந்த பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்
Gray no-7867011976

Address

Ambur
632202

Alerts

Be the first to know and let us send you an email when Nandeeswarar Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share