19/04/2023
புனிதமிகு ரமளான் மாத 27ஆம் இரவு சிறப்பு நிகழ்ச்சி
கீழக்கரை, நடுத்தெரு, "அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ" பெரிய ஜும்ஆ மஸ்ஜிதில் 18/4/2023 அன்று புனிதமிகு லைலத்துல் கத்ரு இரவு என அதிகம் கருதப்படும் இரவான ரமளான் பிறை 27ஆம் இரவு தராவீஹ் தொழுகைக்குப் பிறகு சிறப்பு சொற்ப்பொழிவு நிகழ்ச்சி கீழக்கரை டவுன் காஜியும் ஜும்ஆ மஸ்ஜிதின் மஹல்லியுமான மவ்லவி டாக்டர் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீகி மக்தூமி தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஓதி நிறைவு செய்யப்பட்டது. மவ்லவி ஹாஃபிள் அப்துல் கனி மஸ்லஹி, மவ்லவி ஹாஃபிள் செய்யது அஹ்மது நெய்னா ஜமாலி ஸித்தீகி, ஹாஃபிள் அப்துல்லாஹ் ஆகியோர் தராவீஹ் தொழுகை நடத்தினர்.
ஹாஃபிள் அப்துல் கனி மஸ்லஹி லைலத்துல் கத்ர் இரவின் மகத்துவம் குறித்து உரையாற்றினார்.
குர்ஆன் ஷரிஃபின் சிறப்புகள் குறித்து உரை நிகழ்த்தி, குர்ஆன் ஓதியதின் நிறைவு (கத்முல் குர்ஆன்) துஆவை டவுன் காஜியார் ஓதினார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற இரவு தொழுகைகளை மவ்லவி முஹம்மது பஷீர் மிஸ்பாஹி, ஹாஃபிள் அப்துல்லாஹ் ஆகியோர் நடத்தினர். சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜமாஅத்தார்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.