சித்தரிசமும் பெரியாரிசமும் - Siddharism & Periyaarism

  • Home
  • India
  • Karur
  • சித்தரிசமும் பெரியாரிசமும் - Siddharism & Periyaarism

சித்தரிசமும் பெரியாரிசமும் - Siddharism & Periyaarism தமிழா! தந்தைப் பெரியார் பதினெண்சித்தர் மடம் பீடத்தின் கௌரவத் தலைவர் என்பதை மறந்துவிடாதே! 64வதுநாயனார்

தந்தைப் பெரியார் எதிர்த்தது நமது கடவுளையோ நமது வேதத்தையோ மதத்தையோ அல்ல!!! பிறாமணனின் பொய்யான சனாதன சமசுக்கிருத ”ஹி”ந்து ...
17/09/2023

தந்தைப் பெரியார் எதிர்த்தது நமது கடவுளையோ நமது வேதத்தையோ மதத்தையோ அல்ல!!! பிறாமணனின் பொய்யான சனாதன சமசுக்கிருத ”ஹி”ந்து மதத்தைத்தான்.

15/08/2023

7) கேள்வி : பெரியார் சொன்னார் கடவுள் இல்லையென்று. நீங்கள் சொல்லுகிறீர்கள் கடவுள் உண்டு என்று. நாங்கள் எதை நம்புவது?
பதில் (ஒலிப்பேழையில் பேரருள்மிகு குருதேவர் கூறியது):
மிக்க மகிழ்ச்சி! இது ஒரு சிந்தனையைத் தூண்டுகின்ற ஒரு கேள்வி, கேட்டிருக்கிறீர்கள்.
நாங்கள் ஐம்பது காசில் ஒரு புத்தகம் போட்டிருக்கின்றோம். இரண்டு ரூபாயிலும் ஒரு புத்தகம் போட்டிருக்கிறோம். ஐந்து ரூபாயிலும் ஒரு புத்தகம் போட்டிருக்கின்றோம். அந்தப் புத்தகத்தின் பெயர், 64வது நாயனார், சொல்லடி நாயனார், பெரியார் ஈ.வே.ரா. நீங்களெல்லாம் பெரியாரை நாத்திகர் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். இல்லை! அவர் 64வது நாயனாராகத் தோன்றியவர், சொல்லடி நாயனார் என்பதை நாங்கள் அறிவித்து இருக்கிறோம்.
இந்த ஒன்றை நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால், இந்த கேள்விக்கே இடமில்லை. பெரியார் கடவுள் இல்லை! இல்லை!! இல்லை!!!, இல்லவே இல்லை!!!! கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி! அல்லது நம்புகிறவன் காட்டுமிராண்டி! அல்லது கற்பித்தவன் அயோக்கியன்! அல்லது நம்புகிறவன் அயோக்கியன்! என்று கூறினார் என்றெல்லாம் நீங்கள் நினைப்பீர்கள்....! தந்தை பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் எங்கள் இயக்கத்தின் கெளரவத் தலைவர் என்பதையும் சொல்லிக்கொள்ளுகிறோம். தந்தை பெரியாரை வளர்த்தவர்கள் சித்தர்கள்தான். என்னுடைய தாத்தாதான் வளர்த்தார். அவரை இந்த அளவிற்கு சிந்தனை ஊற்றாக மாற்றியவர்கள் சித்தர்கள்தான். அவர் இவ்வளவு தூரம் பேசியதற்கு அடிப்படையெல்லாம் சித்தர்களுடைய நூல்கள்தான். அவரிடம் கடைசிவரை சுவாமி கைவல்யம் என்பவர் அவரைப் பேச வைத்தார். இந்த விளக்கங்களைத் தெரிந்து கொண்டு நேரடியாகப் பதில் சொல்லுகிறேன்.
நீங்கள் தவறு செய்யும் பொழுது, உங்களுடைய தாயோ, தந்தையோ, உங்களை முதுகிலோ, அல்லது கன்னத்திலோ, உடம்பிலோ நான்கு முறை ஓங்கி ஓங்கி அறைந்து செத்துப் போ, தொலைந்து போ என்று அடிப்பார்கள், பெரும்பாலான பெற்றோர்கள். நீ உயிரோடு இருக்கவே வேண்டாம், உன்னைக் கொன்று போட்டுவிடுவேன் என்று, உன் தந்தையே அடிப்பார்கள். இதை யாரும் மறுக்க முடியாது. நன்றாக நெஞ்சிலே கையை வைத்துப் பார்க்க வேண்டும். உண்மையிலே உங்க அப்பா உன்னைச் செத்துப் போன்னு சொல்றாரா? ஓங்கி அறைவார், தொலைந்து போ! பரிட்சையிலே பெயிலாயிட்டேனா வீட்டுக்குள்ளே நுழையாதே, நீ உயிரோடு இருக்கறதை விட நீ செத்துப் போனா, நாலு நாளைக்கு அழுது என் துக்கம் போயிடும் போ! முகத்துலே முழிக்காதே! என்று மகனை வெளியே தள்ளி கதவைச் சாத்தும் பெற்றோரும் உண்டு.
உண்மையிலேயே அவர்கள் அப்படி நினைக்கிறார்களா? இந்த ஒன்றுக்குப் பதில் சொன்னால், பெரியார் சொன்னது உங்களுக்குப் புரியும். ஏனென்றால், தந்தை பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் தொன்னூற்றி ஆறு ஆண்டு காலம் இந்த நாட்டிலே சொல்லிப் பார்த்தார். மதத்தின் பெயரால் மடமை கூடாது! அறியாமை கூடாது! சுரண்டல் கூடாது! ஏற்றத் தாழ்வு கூடாது! ஏழை பணக்காரன் என்று வேறுபாடு கூடாது! உயர்ந்தவர், தாழ்ந்தவன் என்று கூடாது! சாதியிலே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று கூடாது! தீண்டாமை என்பது கூடாது! ஒரு குறிப்பிட்ட இனத்தவர் மட்டும் உயர்ந்தவனாக வாழக் கூடாது! மற்றவனை தாழ்ந்தவனாக ஆக்காதே!
பணக்காரன், ஏழை என்பதைக் கண்டு கொதித்து எழுகின்ற பொதுவுடமைவாதிகளே! கம்யூனிசுடுகளே! மார்க்சிசுட்டுகளே! நீங்கள் ஏழை பணக்காரன் என்றுதானே பார்க்கிறீர்கள். அதைவிட இந்த நாட்டிலே ஒழிக்கப் பட வேண்டியது உயர்ந்த சாதிக்காரன், தாழ்ந்த சாதிக்காரன் என்ற வேற்றுமை இருக்கிறது. It is a Social Problem. இது ஒரு சமுதாயச் சிக்கல், சமுதாய உணர்ச்சிக்கு நீ என்ன சொல்லுகிறாய்? ஏழை பணக்காரன் என்பதை விட, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதை உடைத்து, நொறுக்கி, தூள் தூளாக்க முடியுமா உன்னால்?!
ஏ மார்க்சிய வாதியே, ஏ கம்யூனிசுடே, அதற்குப் பிறகு உன் பின்னால் நான் வருகிறேன். ‘பாட்டாளி வர்க்கம், பணக்காரன் என்பது கூடாது!’ என்று அறைகூவல் விடுத்த சிந்தனைச் சிற்பிதான் தந்தை பெரியார் ஈ.வே.ரா.
அவர் சொல்லிப் பார்த்தார், இந்த நாட்டிலே ஒரு பயலுக்கும் புரிந்ததாக இல்லை. அவர் shock treatment, electric shock treatment என்று சொல்லுவார்கள். அதுபோல பல அதிர்ச்சி வைத்தியம் செய்ததுதான் தந்தை பெரியார் ஈ.வே.ரா.
இராமன் சிலையைப் போட்டு உடைத்தார், படத்தை எரித்தார், பிள்ளையார் சிலையை உடைத்தார். இராமாயணத்தை தீ வைத்துக் கொளுத்தினார். எதற்காக! உனக்கே கோபம் என்றால்! தந்தை பெரியார் வெளியில் வந்தார். உனக்கு வேலை கிடைக்க வில்லை என்றால் இந்த certificateஐ எரிக்க வேண்டும் என்று சொல்லுகிறாய் அல்லவா? அதன் பொருள் என்ன? பயன்பட வில்லை என்பதினால் வெறுப்பு வருகிறது.
நீ எதை அடைந்தாயோ அது உனக்குப் பயனற்றுப் போகும்போது, உனக்கு வெறுப்பு, மறுப்பு, கசப்பு, எதிர்ப்பு...., அதனால் அழிக்கிறான், எதிர்க்கிறான், எரிக்கிறான், கிழிக்கிறான், உடைக்கிறான். அல்லது இல்லை! இல்லை!! இல்லை!!! என்று மறுக்கிறான். அந்தக் கட்டத்திலேதான், தந்தை பெரியார் இந்த மக்களைக் கெடுப்பது இந்தக் கடவுள்தான். எதை எடுத்தாலும் கடவுள் செயல் என்று சொல்லுகிறான். விதி என்று நம்புகிறான். எனவே, கடவுள் இல்லை! இல்லை!! இல்லை!!! என்று சொன்னார். இதைச் சொன்னாலாவது இவன் திருந்துவானா?!?! என்று. கடவுள் என்று சொன்னதால் அவரே ஒரு கடவுள் அவதாரம்தான். 64வது நாயனார். சந்தேகம் இருப்பவர்கள், புத்தகங்கள் இருக்கிறது. வாங்கிப் படித்து விட்டுக் கேட்கலாம். எனவே, அவர் கடவுள் இல்லை, இல்லை, இல்லை என்று சொன்னது, உங்க அப்பா உன்னை அடிக்கும்போது தொலைந்து போ, செத்துப் போ என்று சொன்னதைப் போன்றது. அவ்வளவுதான் சரியான விளக்கம்.

====
இல்லத்து மற்றும் தொழில்கூட யாகம், பூசை, அனைத்துவகை இல்லத்து விழாக்களுக்கும், இலவச சித்தர்நெறிப் பயிற்சிகளுக்கும் &
கோயில் விழாக்களுக்கும், கோயில் யாகம், பூசைகள், இலவச பூசாறி பயிற்சி, பூசாறி தேவைகள், கோயில் குடமுழுக்கு, கோயில் புத்துயிர்ப்பு பூசைகளுக்கும் தொடர்புகொள்ள...
+91 97515 52688, +91 82200 05088, +91 80985 15136, +91 98426 06340, +91 77089 56945
Website: www.induvedam.com; www.siddharneri.com
Email: [email protected]
Twitter: https://twitter.com/induvedam
Facebook: https://facebook.com/induvedam
Instagram: https://instagram.com/induvedam
WhatsApp: https://chat.whatsapp.com/EST0tpo634V7CCXYeTmm3d
Telegram: https://t.me/+5kAtOSKdDgE1NmU1
YouTube: https://www.youtube.com/c/இந்துமறுமலர்ச்சிஇயக்கம்இமஇ
====

🔱🩸பொற்காலம் பிறக்கட்டும்! பிறாமணனின் சதியறியாமல் பிறாமணனுக்கே அடிமையாய்ப் போன அடிமைத்தமிழனும் சரி.... தந்தைப் பெரியாரைப்...
24/01/2023

🔱🩸பொற்காலம் பிறக்கட்டும்! பிறாமணனின் சதியறியாமல் பிறாமணனுக்கே அடிமையாய்ப் போன அடிமைத்தமிழனும் சரி.... தந்தைப் பெரியாரைப் புரியாத அவரது தொண்டர்களும் சரி... இவர்கள் இல்லாமல் போனால்தான் தமிழ் மக்களுக்கு பொற்காலம்!

22/01/2023

பெரியார் நாத்திகரல்ல, 64வது நான்மார்- தந்தை பெரியார்.

22/01/2023

பெரியார்தான் 64வது நாயன்மார்- சொல்லடி நாயனார்

Address

Karur
Karur

Alerts

Be the first to know and let us send you an email when சித்தரிசமும் பெரியாரிசமும் - Siddharism & Periyaarism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to சித்தரிசமும் பெரியாரிசமும் - Siddharism & Periyaarism:

Share