அறுபத்து மூன்று நாயன்மார்கள்

  • Home
  • India
  • Kanchipuram
  • அறுபத்து மூன்று நாயன்மார்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் 63நாயன்மார்களை பற்றி இன்றைய இளையதளை முறை தெரிந்து கொள்ள தயைகூர்ந்து இந்த page ஐ share செய்யவும்....

பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே! ❤️ #சீர்காழி      #ஞானசம்பந்தர்  #தோணியப்பர்
24/05/2023

பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே! ❤️
#சீர்காழி #ஞானசம்பந்தர் #தோணியப்பர்

மதுரை மாநகர் அரசி! ❤️ #மதுரை      #மீனாட்சி
15/04/2023

மதுரை மாநகர் அரசி! ❤️
#மதுரை #மீனாட்சி

கச்சி ஏகம்பன் பங்குனி உத்திரம் திருக்கல்யாண பெருவிழா 2023முதல் நாள் - மாலை
26/03/2023

கச்சி ஏகம்பன் பங்குனி உத்திரம் திருக்கல்யாண பெருவிழா 2023

முதல் நாள் - மாலை

27/02/2023

உலகில் கிளி பிள்ளை என்ற சொல்லுக்கு ஒரு எடுத்துக்காட்டு நம்ம ஐயா தான் யா... 😍
ஏன் தெரியுமா???

சுந்தரர் சொன்னதுக்கெல்லாம் கேட்டுகிட்டு நடந்தானே யா நம்ம ஐயா... 😭

எளிமையிலும் எளிமை யா நம்ம ஐயா... 🥹🥹🥹

திருவாரூர் வீதியில் திருவடித் தேய நடந்தானே அவன் கால் எந்த அளவு நொந்திருக்குமோ!

சுந்தரனின் வசைப் பாட்டுகளை இசை என ஏற்றானே, அவன் மனசு எந்த அளவுக்கு சங்கடப்பட்டிருக்கும் 😭

வாதவூரனுக்காக பிரம்பால் முதுகில் அடிவாங்கினானே, அவன் முதுகு எப்படி நொந்திருக்கும்! 😭

பாணபத்திரணுக்காக, மதுரை வீதியில் கொதிக்கும் வெயிலில் தலையில் விறகு சுமந்தானே, அவனுக்கு என்ன யா தலை எழுத்து? 😭

தன் மேல் சாக்கியன் எறிந்த கல்லை அன்பென ஏற்றுக்கொண்டானே, உடம்பு எல்லாம் வலித்திருக்குமே என் தங்கத்துக்கு. 😭

இறைவனையே புறகு என்று கூறி ஒதுக்க நினைத்த விரன்மிண்டரை பார்த்து எங்கே அவனை அடியவர்கள் ஒதுக்கி விடுவார்களோ என்று பயந்து அவன் அன்புக்கு இசைந்தானே நம்ம ஐயா, எந்த அளவுக்கு உள்ள ஏக்கம் இருந்திருக்கும் யா என் தங்க புள்ள மனசுல.. 😭

இத்தனையும் என் யா அவனுக்கு நடக்கணும்,
தனக்கென ஒரு தாய் , தந்தை அற்றவன் தானே, கேட்க நாதியில்லை என்று அந்த மனசு எவ்வளோ பாடுபட்டிருக்கும்??

இத்தனையும் தாங்கிகிட்டு அவன் அவனை நினைப்பவர்களுக்கு திருவருளை வாரி வாரி பொழியுறானே, அவன் தானே யா ஏழை பங்காளன்.
நாம எல்லாரும் அவன் முன்னாடி நின்னு, எனக்கு இது வேணும், அது வேணும் என்று கேட்கிறோமே, ஒரு முறையாச்சும் எனக்கு நீ வேணும் என்று நாம கேட்டிருக்கிறோமா??
அந்த மனசு எவ்ளோ ஏங்கி இருக்கும்..

ஆனாலும் அந்த ஜீவன் நம் ஜீவனை விடவில்லையே யா.. அது நம்ம கை புடிச்சு கூட்டிட்டு போகுதே. நல்ல விஷயங்களை செய்ய நம்மை பணிக்குதே, அடியவர்களுக்கு தொண்டு செய்யும் பெறுதற்கு அறிய பேறை தருகிறதே.
எவ்வளோ எளிமை யா நம்ம ஐயா..

அவனால் முடியாத விஷயம் ஒன்று உள்ளது, அது அவன் அடியவர்களை விட்டு அவனால் இருக்க முடியாது.

என் தங்கம் அது, நாம அந்த தங்கத்தை விட கூடாது. கூடவே, சாகுற வரைக்கும் அந்த தங்கத்துக்கு தொண்டு பண்ணனும். நம்மை விட்டா அந்த ஜீவனுக்கு யாரும் இல்லை.. 😭

- என்னை பிடித்த பித்தனை, நான் பித்தாக பிடித்தேன் சிக்கென! ❤️

இது:

மாமூலனின் மீளா அடிமைகளில் ஒன்று.

26/02/2023

திருஞானசம்பந்தர் தில்லை திருப்பதிகம் ❤️
செல்வ நெடுமாடம் என்று தொடங்கும் திருப்பதிகம் ❤️❤️

#நடராஜா

திருகச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) திருப்பதிகங்கள்:7 ஆம் திருமுறை - சுந்தரமூர்த்தி நாயனார் அருளியது.சுந்தரமூர்த்தி சுவாமிகள...
25/02/2023

திருகச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) திருப்பதிகங்கள்:

7 ஆம் திருமுறை - சுந்தரமூர்த்தி நாயனார் அருளியது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது இடக்கண் ஒளி வேண்டி ஏகம்பனை பாடி போற்றிய திருப்பதிகம் இது.

திருச்சிற்றம்பலம்!

#இன்று #தகவல் #தேவாரம்

25/02/2023

அனைவரும் வருக! ஏகம்பன் அருள் பெறுக!!

திருச்சிற்றம்பலம் ❤️
24/02/2023

திருச்சிற்றம்பலம் ❤️

சுந்தரமூர்த்தி நாயனார் இடக்கண் ஒளி பெற்ற திருநாள் அழைப்பிதழ், 02.03.2023 மாசி திருவாதிரை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில்.

நிகழ்ச்சி நிரல்:

1. காலை 8.00 மணிக்கு மூலவர், உற்சவர் அபிஷேகம்.

2. காலை 9 .30 மணிக்கு சுந்தரமூர்த்தி நாயனார், திருவேகம்பநாதர் முன்பு நின்று "ஆலந்தான் உகந்து" எனும் திருப்பதிகம் பாடி, இடக்கண் ஒளி பெறும் ஐதீக பெருவிழா.

3.பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் சீவிகையில் இராஜ வீதிகளில் புறப்பாடு கண்டருளி திருக்கோவில் வந்தடைதல்.

அடியார்கள் அனைவரும் தங்கவதற்கு இடம் வசதி மற்றும் அன்னம்பாலிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு:
9944966049
9791327239

அனைவரும் இப்பெரு விழாவில் கலந்துகொண்டு, சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் திருக்கச்சி ஏகம்பனின் திருவருள் பெற்று உய்ய அழைக்கிறோம்.

#ஏகாம்பரம் #காமாட்சி

16/02/2023

காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் திருக்கோவில் "சுந்தரமூர்த்தி நாயனார் இடது கண் ஒளி பெரும் ஐதீக பெருவிழா"

02-03-2023,
மாசி திருவாதிரை நன்னாள்,

அனைவரும் வருக! ஏகம்பன் அருள் பெறுக!

#ஏகம்பன் #ஏலவாரகுழலி #கச்சி #ஏகம்பர்

11/02/2023

திருச்சிற்றம்பலம்

பைங்குவலை கார்மலரால்,
செங்கமலப் பைம்போதால்,
அங்கம் குருகினத்தால்,
பின்னும் அரவத்தால்,
தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்!

இந்த வரிகளின் மூலம் திருவெம்பாவையில் மாணிக்கவாசகர் நமக்கு என்ன சொல்கிறார்?

1. பைங்குவலை கார்மலரால்,
குவலை என்னும் மலர் போன்று கருவிழிகளால் [நயன தீட்சை]

2. செங்கமலப் பைம்போதால்,
செம்மையான கமலம் போன்ற இருதயத்தில் நினைந்து பெருதல் [உணர்வால் தீட்சை]

3. அங்கம் குருகினத்தால்,
குருகு என்னும் ஒரு வித நீர் பறவை, தன் ஸ்பரிசத்தால் அதன் குஞ்சி பொரிக்க செய்யும். அது போன்று திருவடியால் பெறுதல் [ஸ்பரிச தீட்சை]

4. பின்னும் அரவத்தால்,
அரவம் என்பதற்கு ஓசை, சொல் என்னும் பொருளும் உள்ளது, [சொல்லால் தீட்சை (நானே ஓர் தவம் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்)]

5. தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்!
அவனை நான் சார்ந்ததினால் [அடைந்ததால்] இந்த நான்கு வகைகளில் எம்பிரான் என் மூன்று மலங்களை (ஆணவம், கன்மம், மாயை) அழித்தார்.

இதனால் வாருங்கள் நீங்களும் அவனை அடைந்து உய்யுங்கள் என்று மாணிக்கவாசகர் அழைக்கிறார் நம்மை..

என்னே ஓர் பெருந்தன்மை, தான் உகந்து பருகிய அருமையான பேரானந்தத்தை அகிலம் உணர வழி காட்டுகிறானே நம் மாணிக்கம் ❤️❤️❤️❤️

#திருவாசகம் #இன்று #தகவல்

பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவருக்காக தில்லையில் (சிதம்பரம்) வந்து, ஶ்ரீ மத் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்தி பரமானந்த தாண்டவ தரிசனம...
05/02/2023

பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவருக்காக தில்லையில் (சிதம்பரம்) வந்து, ஶ்ரீ மத் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்தி பரமானந்த தாண்டவ தரிசனம் அருளிய நாள் இன்று தை பூசம்!

#தை #பூசம்

Address

Kanchipuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when அறுபத்து மூன்று நாயன்மார்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share