14/07/2026
*இன்று ஆனி*
*மாத அமாவாசை*
**********************************
குலதெய்வத்தை வழிபடுங்கள்..
மறக்காமல் திருஷ்டி கழியுங்கள்...!!
*மேலும், இந்த வருட ஆனி மாத அமாவாசை போதாயன அமாவாசை என்றும் கூறப்படுகிறது! அதற்கான காரணத்தையும் பார்க்கலாம்!*
-------------------------------------------------------
அமாவாசை என்பது வழிபாடுகளில் மிக முக்கியமான நாள். அமாவாசை, முன்னோர்களுக்கான நாள் என்றும், முன்னோர்களை வழிபடுவதற்கு உரிய நாள் என்றும் சொல்லப்படுகிறது.
முன்னோர் வழிபாடு என்பதும், குலதெய்வ வழிபாடு என்பதும் மிக மிக முக்கியம். முன்னோர்களுக்கு ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம். மாதந்தோறும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பு, கிரகண காலங்கள், திதி, புரட்டாசி மகாளய பட்சத்தின் பதினைந்து நாட்கள் என 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.
பித்ரு காரியங்களை எவரொருவர் தொடர்ந்து முறையே செய்து வருகிறாரோ அவர்களும், அவர்களின் வம்சத்தினரும் பித்ரு சாபத்தில் இருந்தும், பித்ருக்களின் கோபத்தில் இருந்தும் விடுபடுவார்கள். பித்ருக்களின் ஆசீர்வாதம் அவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
*ஆனி அமாவாசை :*
சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது.
ஆனி மாத அமாவாசை தினத்தன்று அதிகாலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் வேதியர்களை கொண்டு மறைந்த முன்னோர்களுக்கு, உறவினர்களுக்கு திதி, தர்ப்பணம் தர வேண்டும்.
அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.
*திருஷ்டி கழியுங்கள் :*
ஆனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிக்காய் அல்லது எலுமிச்சை பழத்தின் மீது கற்பூரம் ஏற்றி உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும், எலுமிச்சை பழத்தை நசுக்கியும் திருஷ்டி கழித்திட வேண்டும்.
*குலதெய்வ*
*வழிபாடு அவசியம் :*
இந்த நாளில் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். எதிர்மறை எண்ணங்களை போக்கி மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்.
போதாயன அமாவாசை என்பது 'போதாயன' (Bodhayana) சூத்திரத்தைப் பின்பற்றும் யஜுர்வேதிகள், தங்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் (திதி) கொடுக்கும் நாளாகும். சாது போதாயனரின் கணக்கீட்டின்படி, பெரும்பாலான அமாவாசை நாட்களுக்கு முந்தைய நாளே (சதுர்த்தசி திதியன்று) இந்த அமாவாசை தர்ப்பணம் செய்யப்படுகிறது.
*ஆன்மீகப் பின்னணி (மகாபாரதக் கதை)*
மகாபாரதப் போர் தொடங்குமுன், போர் தொடங்க உகந்த நாளைக் கூறுமாறு துரியோதனன் சகாதேவனிடம் கேட்கிறான். சகாதேவனும் தர்மத்தின்படி அமாவாசை நாளன்று போரைத் தொடங்கினால் வெற்றி கிட்டும் என்று கூறுகிறான். பாண்டவர்கள் கலங்கி ஸ்ரீகிருஷ்ணரிடம் செல்ல, அவர் அமாவாசைக்கு முதல் நாளே சூரியனும் சந்திரனும் ஒன்றாகக் கூடி வருமாறு தனது யோக பலத்தால் செய்து, தர்மபுத்திரரை அன்று தர்ப்பணம் கொடுக்கச் செய்கிறார். இதன் மூலம் போதாயன அமாவாசை உருவானதாக ஐதீகம்.
*முக்கிய வழக்கம்:*
*எப்போது செய்ய வேண்டும்?*
--------------------------------------------------------
போதாயன சூத்திரத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே இந்த விதியைப் பின்பற்றி திதி கொடுக்க வேண்டும்.
*நாள்:*
வழக்கமான அமாவாசைக்கு முந்தைய நாள் (சதுர்த்தசி திதி) மதியத்திற்கு மேல் அமாவாசை திதி இருந்தால், அன்றைய தினம் போதாயன அமாவாசையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பஞ்சாங்கங்களில் இது "போதா அமா" (Bodha Ama) என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
உங்கள் குல வழக்கப்படி நீங்கள் ஆஸ்தம்ப சூத்திரத்தைப் பின்பற்றுகிறீர்களா அல்லது போதாயன சூத்திரத்தைப் பின்பற்றுகிறீர்களா என்பதைப் பொறுத்து உங்கள் வீட்டில் பெரியவர்கள் அல்லது குடும்ப புரோகிதரிடம் கேட்டு சரியான நாளில் தர்ப்பணம் செய்வது நல்லது.
*சர்வம் சிவார்ப்பணம்*
➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️