ஆன்மீக சிந்தனைகள்

ஆன்மீக சிந்தனைகள் ஆன்மீகம் தொடர்பான சிந்தனைகள்

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்றஉத்தமர்தம் உறவு வேண்டும்,உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்...
19/04/2025

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்,

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்,

பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்,

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்,

மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்,

தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே

சண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே...

முருகனை வழிபட சஷ்டி உகந்தநாள். அதிலும் தேய்பிறை சஷ்டி நிறையவே விசேஷம். `சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்’ என்பது அனுபவ மொழி.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதியிலிரு ந்து ஆறாம்நாளாக வருவது தேய்பிறை சஷ்டி. இந்த திருநாளில் குழந்தை செல்வத்திற்காக ஏங்கி காத்திருக்கும் பெண்கள் விரதமிருந்து முருகப் பெருமானை மனமுருகி. பிரார்த்த னை செய்திட மன மற்றும் உடல் குறைபாடு கள் நீங்கி குழந்தை வரம் கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.

நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதத்தை தொடர்ந்து மேற்கொள்ள அந்நோய்கள் படிப்படியாக நீங்கிவிடும். இத்து டன் நீடித்த செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும்.

இந்த நாளில் வீடுகளில் அதிகாலையில் நீராடி பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீப, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவே தனம் வைக்கலாம். உணவை தவிர்த்து பூஜை யறையில் கந்த சஷ்டி கவசம், முருகன் துதிப் பாடல்கள், ஸ்கந்த குரு கவசம் படிக்கலாம்.

வேலைகாரணமாக வெளியில் செல்பவர்கள், உடல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனத்தி ல் ஓம் முருகா என்ற மந்திரத்தை ஜெபித்தபடி பணியை தொடரலாம்.

புலால் உணவுகள் மற்றும் போதை வஸ்துக்க ளை தவிர்க்க வேண்டும். மனதில் தீய எண்ண ங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் உண்டு இந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலை வாய்ப்பு, கடன் தொல்லைகள் முழுவதுமாக நீங்கவும் சஷ்டிவிரதத்தை கடைப்பிடிக்கலாம். முழு நாளும் உபவாசம் இருக்க இயலாதவர்க ள் அன்றைய தினம் காலையில் ஆறு மிளகை யும் ஆறு கை நீரையும் முதல் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த முறையில் தொடர்ந்து விரதம் இருந்திட முருகப்பெருமானின் அருளால் மேலான செல் வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும் என்பது ஐதிகம்.

முருகனின் திருவருள் பெறுவோம்.

கந்தா சரணம் ... ஷண்முகா சரணம்...

🙏🪷🙏

18/04/2025

ஏரகரம் கந்தநாதசுவாமி திருக்கோயில்

முருகனின் அறுபடை ஸ்தலங்களில் நான்காவது ஸ்தலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை ஆகும்.

இதற்கு அருகில் உள்ள ஏரகரம் என்ற ஊரில் மிகப் பழமையான கந்தநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது.

கும்பகோணம்-சுவாமிமலை சாலையில், மூப்பக்கோயிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில்
அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இருப்பினும் முருகன் கோயில் என்றே உள்ளூரில் அழைக்கின்றனர்.

*சுப்பிரமணியர் நின்ற நிலையில் ராஜகோலத்தில் உள்ளார்.*

*கந்தநாத சுவாமி, சிவலிங்க வடிவில் வரங்கள் பல தரும் ஈசனாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.*

ஏரகம், திருவேரகம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூருக்கு அருகில் உள்ள புகழ் பெற்ற மற்றொரு முருகன் கோயில் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் ஆகும்.

*இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.*

திருநாவுக்கரசு சுவாமிகள் தமது (திருப்புகலூர்) க்ஷேத்திரக் கோவை திருத்தாண்டகத்தில் இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர்... கயிலாயநாதனையே காணலாமே' என்று பாடியுள்ளார்.

இப்பாடலில் குறிக்கப்படும் ‘ஏர்’ என்ற ஊர், இன்னம்பரோடு சேர்த்துப் பாடப் பெற்றிருக்கிறது. இவற்றின் மூலம் இத்தலத்தின் தொன்மையை மட்டுமன்றி, இது தேவார வைப்புத் தலமாக உள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

இவருக்கு சங்கரநாதர் என்றும் பெயர் உண்டு.

மேலும் குமரன் அமர்ந்த இடமாதலால் இத்தலத்தைக் குமாரபுரம் எனவும் அழைப்பர்.

முருகன், ஒரு முகம் நான்கு கரங்கள் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். பின் கரங்களில் வஜ்ர சக்தியும் திரிசூலமும் கொண்டுள்ளார். முன் வலக்கரத்தால் அபயம் காட்டியும் இடக் கரத்தை இடுப்பில் ஊன்றியபடியும் அருள்பாலிக்கிறார்.

இந்தத்தலத்தில் அம்பிகைக்கு சங்கரநாயகி’ என்று பெயர். கோயிலுக்கு அருகிலுள்ள சரவணப் பொய்கை கந்தப் பெருமானால் உண்டாக்கப்பெற்றது.

அசுரர்களால் முனிவர்களின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டபோது சிவபெருமானை
வேண்டினர்.

அப்போது சிவன் கந்தனை
அழைத்து முனிவர்களைக் காத்திடும்படிக் கூறியதோடு ஒரு அஸ்திரத்தையும் வழங்கி அதனை செலுத்தும் இடத்தை அவருடைய அகமாக அமைத்துக்கொள்ளும்படி அருளியுள்ளார். முருகனின் அஸ்திரம் பூமியில் பாய்ந்த இடம் ஏரகம் என்கின்றனர்.
ஆதிகந்தநாதசுவாமி கோயில் என்றழைக்கப்படுகிறது.

சூரியன், பைரவர், நாககன்னியர் உள்ளனர். மூலவர் கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் உள்ளன. மூலவர் சன்னதிக்குப் பின்புறம் ஆதிகந்தநாதசுவாமி சன்னதி உள்ளது.

இக்கோயில் நான்கு பிராகாரங்களுடன், நெல்லி மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டும் அமைந்திருக்கிறது.

கச்சியப்ப சிவாசாரியார், நக்கீரர், அருணகிரிநாதர் ஆகியோர் இக்கோயிலில் உள்ள முருகனைப் பாடியுள்ளனர்.

இப்பெருமானை சஷ்டி திருநாளில் விரதம் இருந்து வழிபடுவோர்க்கு உரிய காலத்தில் திருமணம் நடந்து, குழந்தைப்பேறும் பெற்று இன்புறுவர் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

கும்பகோணத்திலிருந்து
சுவாமிமலை செல்லும் பாதையில் மூப்பக்கோயிலிலிருந்து பிரியும் சாலையில், ஆசூர் வாய்க்காலுக்கு மேற்புறம் இக்கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமான இன்னம்பரில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் சாலை வழியில் வலதுபுறம் ஏரகரம் செல்லும் சாலை பிரிகிறது. அவ்வழியாகச் சென்றும் ஏரகரம் அடையலாம்.ஓம்

18/04/2025

*பாவம் போக்கும்*
*12 ஜோதிர்லிங்க துதி*!

புனிதமும் அழகும் நிறைந்த சவுராஷ்டிர தேசத்தில் ஜோதிமயமாக இருப்பவரும்; தலையில் பிறைச் சந்திரனைச் சூடியவரும்; எல்லையற்ற கருணை காரணமாக எல்லாருக்கும் பக்தியை அளிப்பதற்காகவே அவதாரம் செய்தவருமாகிய சோமநாதர் என்ற சிவலிங்கத்தைச் சரணடைகிறேன். மேலான இமயமலையின் தாழ்வுப் பிரதேசத்தில், கேதாரம் என்ற இடத்தில் ஆனந்தமாகக் குடிகொண்டிருப்பவரும்; சிறந்த முனிவர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் யட்சர்களாலும் நாகர்களாலும் எப்போதும் பூஜிக்கப்படுபவரும்; இரண்டற்றவருமான கேதாரேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைத் துதிக்கிறேன்.

மிக உயர்ந்த ஸ்ரீசைலம் என்ற மலையில், அறிஞர்களின் சத்சங்கத்தில் மிகவும் மகிழ்ச்சியோடு வசிப்பவரும்; சம்சாரம் என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு உதவும் தோணி போன்றவருமாகிய மல்லிகார்ஜுனர் என்ற சிவலிங்கத்தை வணங்குகிறேன். நல்லவர்களுக்கு முக்தி அளிப்பதற்காக அவந்திகா (உஜ்ஜயினி) நகரத்தில் அவதாரம் செய்தவரும்; தேவர்களுக்குத் தலைவனுமாகிய மகாகாலேஸ்வரர் என்ற சிவலிங்கத்தை எனக்கு அகால மரணம் நேராமல் இருக்கும் பொருட்டு வணங்குகிறேன். நர்மதை நதி பாயும் தூய்மையான இடத்தில், நல்லவர்களைக் காக்க எப்போதும் மாந்தாத்ரு என்ற ஊரில் வசிப்பவரும்; ஓங்காரேஸ்வரர் என்ற அத்விதீயருமான (இரண்டற்ற) சிவபெருமானை வணங்குகிறேன்.

வடகிழக்கு திசையில் கொழுந்துவிட்டு எரியும் தீ ஜ்வாலை உள்ள மயானத்தில் வசிப்பவரும்; கிரிஜா என்ற பார்வதிதேவியுடன் எப்போதும் சேர்ந்திருப்பவரும்; தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவருமாகிய வைத்தியநாதர் என்ற சிவலிங்கத்தை வணங்குகிறேன். தென்திசையில் மிகவும் அழகிய ஸதங்கம் என்ற நகரத்தில், நன்கு அலங்கரிக்கப்பட்ட அங்கங்களோடு நிகரற்ற செல்வங்கள் நிறைந்தவரும்; உயர்ந்த பக்தியையும் முக்தியையும் வழங்கும் ஒரே தெய்வமாகத் திகழ்பவருமாகிய நாகேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைச் சரணடைகிறேன்.

தாமிரபரணி நதி கடலில் கலக்கும் இடத்தில், எண்ணற்ற அம்புகளைக் கொண்டு அணையைக் கட்டிய ஸ்ரீராமராவ் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட ராமேஸ்வரர் என்ற சிவலிங்கத்தை முறைப்படி வணங்குகிறேன்.

அழகாகவும் விசாலமாகவும் இருக்கும் இளாபுரம் என்ற இடத்தில் விளங்குபவரும்; பெருங்கருணையைத் தமது இயல்பாகக் கொண்டவரும்; கிருஷ்ணேஸ்வரர் (குசுருணேஸ்வரர்) என்ற பெயர் பெற்ற வருமாகிய பரமேஸ்வரனைச் சரணடைகிறேன்.

புனிதமான ஸஹ்ய மலையில், பவித்ரமான கோதாவரி நதிக்கரையில் எழுந்தருளியிருப்பவரும்; எவருடைய தரிசனத்தால் எல்லாப் பாவங்களும் விலகி விடுகின்றனவோ, அந்த த்ரியம்பகேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைத் துதிக்கிறேன்.

டாகினீ, சாகினீ முதலிய பூதகணங்கள் வசிக்கும் இடத்தில், அரக்கர்களால் வணங்கப்படுபவரும்; என்றும் பீமேஸ்வரர் என்று புகழப்படுபவரும்; பக்தர்களுக்கு நன்மை செய்பவருமாகிய சங்கர பகவானுக்கு நமஸ்காரம் செய்கிறேன்.

காசியில் ஆனந்தபவனத்தில் பேரானந்தத்துடன் வசிப்பவரும், மகிழ்ச்சிக் குவியலாக விளங்குபவரும்; பாவம் அகற்றுபவரும்; வாரணாசியின் தலைவரும்; ஆதரவற்ற அநாதைகளுக்கு நாதனுமாகிய விஸ்வநாதரைச் சரணடைகிறேன்.

ராஜஸ்தான் மாநில மக்களின் கோடைகால வெயிலை சமாளிக்க தொலைநோக்குப் பார்வையில் உருவான படிக்கிணறுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்....
17/04/2025

ராஜஸ்தான் மாநில மக்களின் கோடைகால வெயிலை சமாளிக்க தொலைநோக்குப் பார்வையில் உருவான படிக்கிணறுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்....

மூன்று மாடிகளைக் கொண்ட கலைநயமிக்க படிக்கிணறு தெரியுமா....?

தமிழ்நாட்டில் உள்ள கிணறுகள் பொதுவாக வட்ட வடிவத்தில் காணப்படும். கிணற்றில் இறங்கி உள்ளே செல்லுவதற்காக பத்து அல்லது பதினைந்து படிக்கட்டுகள் போன்ற கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். ஆனால்..... இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள படிக்கிணறுகள் பிரம்மாண்டமானவை. கலைநயம் மிக்கவை. இந்தியாவில் இத்தகைய படிக்கிணறுகள் கட்டும் வழக்கம் கி.பி.ஏழாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கலைநயமிக்க இத்தகைய படிக்கிணறுகள் பாவோரி அல்லது பாவோலி (Baori or Baoli) என்று அழைக்கப்படுகின்றன. சில இடங்களில் இவற்றை வாவ் (Vav) என்றும் அழைக்கிறார்கள்.

இயற்கையாகவே வறண்ட மாநிலமான இராஜஸ்தானில் கோடை காலத்தில் நீர் மட்டம் மிகவும் வெகுவாக கீழே இறங்கி விடும்.
இதனால் தண்ணீருக்காக மக்கள் தவிப்பது வழக்கம். இந்த பிரச்னையை சமாளிக்க அக்காலத்தில் பிரம்மாண்டமான படிக்கிணறுகள் இராஜஸ்தான் மாநிலமெங்கும் அமைக்கப்பட்டன. இதன் மூலம் மழை நீரானது பக்கவாட்டிலிருந்தும் அடிப்பகுதியிலிருந்தும் இக்கிணறுகளில் முடிந்த மட்டும் சேமிக்கப்பட்டது.

தொடக்கத்தில் சாதாரணமாக தோண்டப்பட்ட இந்தப் படிக்கிணறுகள் நாளடைவில் கோயில்களுக்கு இணையாக கலைநயமிக்க வகையில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டன. கிணற்றுக்குள் அமைக்கப்பட்ட பாதுகாப்பான படிக்கட்டுகளில் இறங்கி மக்கள் தங்களுக்குத் தேவையான தண்ணீரை எடுத்துப் பயன்படுத்தினர்.

=======

படிக்கிணறுகளின் சிறப்பம்சம்...

இராஜஸ்தான் மாநிலமெங்கும் கிராமங்களிலும், கோட்டைகளிலும், அரண்மனை வளாகத்திலும் இத்தகைய படிக்கிணறுகள் அமைக்கப்பட்டன. கோடை கால வெயிலை சமாளிக்க இத்தகைய படிக்கிணறுகள் பயன்பட்டன. படிக்கிணறுகளின் அடிப்பகுதியின் வெப்பநிலையானது பூமியின் மேற்பகுதி வெப்பத்தைவிட 10 டிகிரி அளவிற்கு குறைவாக இருக்கும். இதனால் படிக்கிணறுகளின் உள்பகுதியானது வெளிப்பகுதியை விட குளிர்ச்சியாகக் காணப்படும்

=======

ஜெய்ப்பூரிலிருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் அபனேரி என்ற கிராமத்தில் அமைந்துள்ள, ‘சந்த் பௌரி (Chand Baori) படிக்கிணறு’ மிகவும் பிரபலமானது. இப் படிக்கிணறு 3500 படிகளைக் கொண்டு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

அமர் கோட்டையில் அமைந்துள்ள, ‘பன்னா மீனா கா குண்ட்’, ஜெய்ப்பூரிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மூன்று மாடிகளைக் கொண்ட படிக்கிணறான, ‘ஹாடி ராணி கி பாவோரி’, பூண்டி நகரில் அமைந்துள்ள, ‘ராணிஜி கி பௌரி’ படிக்கிணறு முதலானவை மிகவும் அதிகஅளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கலைநயமிக்க கிணறுகளாகும்.

ராஜஸ்தானில் ஹிண்டான் நகரில் அமைக்கப்பட்டுள்ள, ‘ஜச்சா கி பௌரி’ படிக்கிணறு இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய படிக்கிணறுகளில் ஒன்றாகும். இதேபோல ஜோத்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள, ‘தூர்ஜி கா ஜால்ரா’ படிக்கிணறு பிரபலமானது மட்டுமல்ல, மிகவும் பழைமையானதும் கூட. இராஜஸ்தான் மாநிலம் மட்டுமின்றி, பக்கத்து மாநிலமான குஜராத் மாநிலத்திலும் இத்தகைய படிக்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தெரிந்து கொள்வோம்.....

சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பற்றி அறிவோம்சிறப்பு கட்டுரைகள்சங்கடஹர சதுர்த்தியில் இதை செய்தால்... உங்கள் வாழ்க்கை அமோகமாக இ...
17/04/2025

சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பற்றி அறிவோம்

சிறப்பு கட்டுரைகள்

சங்கடஹர சதுர்த்தியில் இதை செய்தால்... உங்கள் வாழ்க்கை அமோகமாக இருக்கும்...!!

வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு மிக முக்கியமான விரதங்களில் ஒன்று #சங்கடஹரசதுர்த்தி #விரதம் ஆகும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் நான்காவது திதி சங்கடஹர #சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவதன் மூலம் அனைத்து விதமான சங்கடங்களும் (துன்பங்கள், தடைகள்) நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

விநாயகப் பெருமானுக்கு உகந்த நாளான சதுர்த்தி திதியும், பொதுவாக ஒவ்வொரு வாரமும் வரும் புதன்கிழமையும் விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். சதுர்த்தி திதி, புதன்கிழமை இரண்டும் இணைந்து வரும் நாளில் விரதம் இருந்து ஒரு குறிப்பிட்ட வழிபாட்டினை செய்வதால் அதிக பலன் கிடைக்கும்.

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை மனதார வழிபட்டு, சந்திரனையும் தரிசித்து வந்தால் எப்படிப்பட்ட துன்பமும் விலகி வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சங்கடங்களை தேய்ந்து போக வைக்கக் கூடிய சதுர்த்தி என்பதால் இதற்கு சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். சங்கடஹர சதுர்த்தி நாளில் பலரும் விரதம் இருந்து அனுஷ்டிப்பது வழக்கம்.

சங்கடஹர சதுர்த்தி:

💫சங்கடம் என்றால் துன்பம் என்றும், ஹர என்றால் ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை என்பதாகும்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் தேய்பிறையில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி விரதத்தை தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்றும், சங்கட ஹரண சதுர்த்தி விரதம் என்றும் கூறுகின்றனர்.

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர் விநாயகர். அன்றைய தினத்தில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடையின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

விரதம் இருப்பது எப்படி?

சதுர்த்தியன்று அதிகாலையில் நீராடி உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணபதியின் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.

முழுநேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழச்சாறு அருந்தி விரதத்தை கடைபிடிக்கலாம்.

விநாயகர் அகவல், விநாயகர் கவசம், சங்கடஹர சதுர்த்தி ஸ்தோத்திரம் போன்றவற்றை படிக்கலாம்.

விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், அப்பம், சுண்டல் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.

சதுர்த்தியன்று மாலை வேளையில் ஆலயத்திற்குச் சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும்.

விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் சிறப்பானது.

அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவதால்..

வாழ்வில் உள்ள அனைத்து துன்பங்கள், கஷ்டங்கள் மற்றும் தடைகள் விலகும்.

எந்த ஒரு புதிய முயற்சியும் தடையின்றி வெற்றிகரமாக முடியும்.

மனக்குழப்பங்கள் நீங்கி அமைதியான மனநிலை ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும்.

எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் மற்றும் பிரச்சனைகள் அகலும்.

நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள் நீங்கும்.

16/04/2025

நமது கர்ம வினைகள் நீங்கி நாமும் நமது பிள்ளைகள் மற்றும் சந்ததிகள் எதிர்காலத்தில் நல்லபடியாக வாழ எளிமையான பரிகாரம்
------------------------------------------------------
1.முதலில் தாய் தந்தையை மதிக்க ( வணங்க) வேண்டும்

2.நேரம் இருக்கும் போதெல்லாம் குலதெய்வத்தை குடும்பத்துடன் சென்று வணங்க வேண்டும்.

3.முன்னோர்களுக்கு வருட திதி செய்து வணங்கி காக்கைக்கு அன்னம் வைக்க வேண்டும்.

4.முன்னோர்கள் படத்திற்கு தினமும் நெய் அல்லது எள் அல்லது இலுப்பை எண்ணெய் விளக்கு ஏற்றி வணங்கி காக்கைக்கு அன்னம் வைக்க வேண்டும்
( உயிரோடு இருக்கும் போது பெற்றோருக்கு உதவாமல் அவர்கள் இறந்த பிறகு போட்டோவுக்கு பூஜை செய்தாலும் பயனில்லை )

5.பெரியோர்களிடம் ஆசி வாங்க வேண்டும்.

6.மகான்கள், சித்தர்கள், அகோரிகள் இவர்களை கண்டால் ஆசிர்வாதம் பெற வேண்டும்

7.புனித தீர்த்தங்களான ஆறு, குளம் இருக்கும் கோயில்களில் நீராடி இறைவனை தரிசனம் செய்ய வேண்டும் ( திருப்பதி என்றாலும் கோயில் பக்கத்தில் உள்ள குளத்தில் நீராட வேண்டும் அதற்காக சோப்பு சீக்காய் சாம்பு போட்டு புனிதமான தீர்தங்களை அசுத்தம் செய்யாமல் 3 முறை முழுங்கினால் போதும் )

8.உடல் ஊனமுற்றோர், அநாதை முதியோர்கள், கணவனை இழந்த விதவை பெண்கள், தாய் தந்தை இல்லாத குழந்தைகள் இவர்களுக்கு முடிந்தவரை தர்மம் செய்ய வேண்டும்.

9.தனது திருமண நாள், பிறந்த நாள் மற்றும் குழந்தைகள் பிறந்த நாள் அன்று மாமிசம் சாப்பிடாமல், கேக் வெட்டி கொண்டாடுவதை விட நாம் பிறந்த தமிழ் மாத நட்சத்திர நாளில் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வர வேண்டும்.
( முடிந்தால் அபிஷேகம் பூசை செய்து அன்ன பிரசாதம் வழங்கலாம் )

10.பலநூறு மற்றும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களுக்கு அவ்வப்போது சென்று வர வேண்டும்
( கோயிலுக்கு உள்ளே நுழைந்து விட்டால் மனதை ஒரு நிலைபடுத்தி சுவாமி யை பிரார்த்தனை செய்ய வேண்டும் மொபைல் போன் தொடவே கூடாது)

11.யாருக்கும் உதவி செய்ய முடியாத பட்சத்திலும் அடுத்தவர்களுக்கு எந்த விதமான துன்பம் நம்மால் ஏற்படக் கூடாது..

தெரிந்து கொள்வோம்......

*பசுவிற்கு_அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்?*********************************🌺பசு ஏதாவது விஷத்தன்மை உடைய தாவரத்தை அல்...
16/04/2025

*பசுவிற்கு_அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்?*
********************************

🌺பசு ஏதாவது விஷத்தன்மை உடைய தாவரத்தை அல்லது உணவை அருந்தி அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா?என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.*

90 நாட்கள் பசுவுக்கு தினமும் விஷம் கலந்த தாவரத்தை கொடுத்து விட்டு அதன் பாலை ஆராய்ந்து பார்த்தார்கள்.

🌺விஷத்திற்கான எந்த தடயமும் அந்த பாலில் இல்லை..

🌺சரி அந்த விஷம் எங்கு தான் போனது
என்று ஆராய்ந்து போது ஆச்சர்யம்
அடைந்தார்கள்.

🌺ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்தான்
என்பதுதான் வரலாறு.

🌺அதே போல் பசுவும் விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்திருக்கிறதாம்.
அதனால் தான் பழங்கால்ம் தொட்டு பசுவுக்கு அகத்திக் கீரை கொடுக்கிறோம்.
அகத்திக்கீரை விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.
*பசுவிற்கு அகத்திக்கீரை தருவதால் ஏற்படும் பலன்கள்*

🌺பசுவுக்கு நாம் அகத்திக்கீரைதருவதால்.,

🌺முதலில் நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

🌺கொலை களவு செய்வதால் உண்டாகும்
பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.

🌺நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.

🌺பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.

*கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்* . பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும்.
முன்னோருக்கு செய்ய வேண்டிய நீத்தார் கடன்களான திதி, கர்மா செய்யாமல் இருந்தால் ஏற்படும் பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால்
நீங்கும். மேலும் பித்ரு தோஷங்களும் நீங்கும்.
பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
கோமாதாவை சிரத்தையுடன் வணங்கிட பிரம்மா, விஷ்ணு, முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். உண்பதற்கு
பசுவிற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்)
நம்மை பிடித்த தீராத பாவங்கள் விலகும்.

பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும்.பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள்
பூசிக்கொண்டார்கள்.
"மா" என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது. பசு வசிக்கும் இடத்தில், அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு மடங்கு
பலன்களை அள்ளித் தரும்.

பஞ்ச ராமர் ஷேத்திரங்கள் :வென்றிசேர் இலங்கையானை வென்ற மால்வீரன் ஓத நின்ற ராமாயணத்தின்நிகழ்ந்திடு கதைகள் தம்மில் ஒன்றினைப்...
15/04/2025

பஞ்ச ராமர் ஷேத்திரங்கள் :

வென்றிசேர் இலங்கையானை வென்ற மால்வீரன் ஓத நின்ற ராமாயணத்தின்
நிகழ்ந்திடு கதைகள் தம்மில் ஒன்றினைப்படித்தோர் தாமும் உரைத்திடக்கேட்டோர் தாமும்
நன்று இது என்றோர் தாமும் நரகமது எய்திடாரே

இது, தான் இயற்றிய ராமாயணத்தில் கம்பன், காப்புப் படலமாக அறிவித்திருக்கும்
தகவல் பாடல். ராமாயண நிகழ்ச்சிகளைப் படித்தோர், உரைத்தோர், கேட்டோர் யாவரும் நரகம் எய்த மாட்டார்.

அதாவது, இவ்வுலகிலேயே எந்தத் துன்பமுமின்றி நெடிது நாள் வாழ்ந்து சிறப்பெய்துவர், மறுமையிலும் நரகம் செல்லமாட்டார்.

பஞ்சராமர் க்ஷேத்திரங்கள் என்று போற்றப்படும் ஐந்து ராமர்
கோயில்களுக்கு ராம
தரிசனம் செய்வதற்கு ஒரு
வலம் வருவோம்

உலகெங்கும் பிரசித்தி பெற்ற இராமர் ஆலயங்கள் பல இருக்கின்றன. பெரும்பாலான பெருமாள் கோவில்களில் இராமருக்கென்று தனி சந்நிதிகள் இருக்கும். அதிலும் தமிழ்நாட்டில் இராமபிரானுக்கென்று அருமையான பல கோவில்கள் உண்டு.

இதில் கும்பகோணம் இராமஸ்வாமி ஆலயம், தனுஷ்கோடி இராமர் ஆலயம், மதுராந்தகம் ஏரிகாத்த இராமர், புன்னைநல்லூர் இராமர், நாகப்பட்டினம் வனபுருஷோத்தம இராமர், திருஐந்தடி இராமர், திருச்சேறை இராமர், திருதண்டை இராமர், திருவாலங்காடு இராமர், இஞ்சிமேடு இராமர், வெள்ளியங்குடி இராமர், தஞ்சை விஜயகோதண்ட இராமர், செஞ்சி பனப்பாக்கம் தசரத இராமர், திருப்புல்லாணி தர்பசயன இராமர் என்று எத்தனையோ அற்புதமான ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் உண்டு.

இதில் ‘பஞ்சராமர் க்ஷேத்திரங்கள்’ என்று போற்றப்படும் இந்த ஐந்து கோவில்கள் மிக மஹிமை வாய்ந்தவை. அவை புகழ் பெற்ற தில்லைவிளாகம், வடுவூர், பருத்தியூர், முடிகொண்டான், அதம்பார் என்ற இந்த இடங்களின் இராமர் கோவில்கள் மிகச் சக்தி
வாய்ந்த ஆலயங்களாகும்.
இவை யாவுமே தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது.

அருள்மிகு தில்லைவிளாகம் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ளது. வேலூர் தேவர் எனும் இராம பக்தர் கனவில் இராமர் கோவில் கட்ட தெய்விக உத்தரவு வர, அதனை நிறைவேற்ற கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார். அஸ்திவாரம் சில அடிகள் தோண்டியவுடன் செங்கற்கள் தெரிந்தன. மேலும் ஆழமாகத் தோண்டியதும் பூமியில் சுயம்புவாய் ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீராமபிரானின் 5 அடி உயர பஞ்சலோக சிலைகளுடன்
ஒரு கோவிலே புதைந்து கிடப்பதைக் கண்டார்.

பின்பு 1862இல் சிறியதாக ஒரு கோவிலை எழுப்பினார். 1905க்குப் பின்னர் கோவில் விரிவாக்கப் பட்டது. மூலவரே பஞ்சலோக விக்ரகமாய் எழுந்தருளி இருக்கும் தலம் இது. ராமரின் ஐந்தடி உயர பஞ்சலோக சிலாரூபம் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும். அவர் திருமேனியில், திரிபங்கம் என்று சொல்லப்படும் மூன்று வளைவுகள், திண்தோள், இடுப்பு மற்றும் முழந்தாள் பகுதிகளில் காணப்படுகின்றன.
கைகளில் விரல்களும் மனிதர்களைப் போலவே விரல்களில் நகங்களும் அமைந்திருக்கின்றன. திருமார்பில் போரினால் ஏற்பட்ட வடுக்கள், தேமல்கள் மனிதர்களுக்கு உள்ளது போலவே காட்சியளிக்கின்றன.

கைகள் மற்றும் கணுக்காலில் பச்சை நிற நரம்புகளும் விரலில் உள்ள ரேகைகளும் தெளிவாகத் தெரிவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவருடைய திருமேனியின் முழங்கால்கள், மனிதர்களின் முழந்தாள்களைப் போலவே உருண்டு திரண்டு, கால்களில் பச்சை நரம்போடுவது தெரிகின்றன. கால்களில் தாயார் கௌசல்யை கட்டிய ரக்ஷை மற்றும் மச்சங்கள், தேமல்கள் வடுக்கள் காட்சியளிக்கின்றன.

இதென்ன இப்படியொரு அமைப்பு என மூச்சே நின்று விடும் போலுள்ளது. பேசினால் பேசுவாரோ என்று கூடத் தோன்றுகிறது. மற்ற திருத்தலங்களில்
ஸ்ரீராமனின் வலது கையில் சாதாரணமாக அர்த்த சந்திரபாணம் என்ற பிறைநிலா வடிவிலான பாணம் தான் இருக்கும். ஆனால் இங்கு இங்கு ராமசரம் எனப்படும் அம்புடன் காட்சி தருகிறார். ராமசரம் எனும் பாணம் ஏவப்பட்ட பிறகு அழித்து விட்டு மீண்டும் ராமரிடமே திரும்பும் விசித்திரமான தன்மை உடையது.

ஸ்ரீராமன், இந்த ராம சரத்தை காகாசுரன், வாலி மற்றும் இராவண வதத்திற்காக பிரயோகித்தார். கம்பீரமான இந்தத் திருமேனிக்கு ‘ஸ்ரீ வீர கோதண்டராமர்’ என்று பெயர்.
சீதை அன்பும், கனிவும், இனிமையும் பொலிய
பேரழகு பிராட்டியாக சேவை சாதிக்கிறாள். இளையாழ்வார் லட்சுமணர் கம்பீரத்தோடு சேர்ந்த பணிவோடு அண்ணலுக்கு அருமைச் சகோதரனாக நின்றிருக்கிறார்.

எல்லாவற்றையும். தாண்டி ராமதாசனான அனுமன் தன்னை சிறியோனாக நினைத்து மிக பவ்யமாக வாய் பொத்தி, விநயமாக தலை தாழ்த்தி நிற்கும் பாங்கு வேறெங்கும் காண முடியாது. கருவறையே ஒரு ராஜதர்பார் போன்று விளங்குகிறது.

அர்த்த சந்திர பாணத்துடன் காட்சியளிக்கும் ராம சரம் என்னும் அம்பினை ஒரு கையில் ஏந்தியவாறு, ஜானகி அன்னையுடனும்,
தம்பி இலக்குவனுடனும்
நின்ற கோலத்தில் மட்டுமே விளங்குவதால் "தில்லை சித்ரகூடம்" என இத்தலம் வழங்கப்படுகிறது. இவ்வாலயம் உள்ள இடமே தண்டகாரண்யம்.
ஸ்ரீராமர் ராவணனை வென்ற பின் சேதுக்கரை வழியே வந்த போது, இவ்வூரில் தங்கிச் சென்றதாக தலபுராணம் கூறுகிறது.

இவ்வாலயத்தில் வீர கோதண்ட ராமர் சன்னிதி மட்டுமே உள்ளது.
இங்கு மூலவர் கிடையாது. நான்கடி உயரமுள்ள பஞ்சலோக உற்சவ மூர்த்தியே பிரதான மூர்த்தி. வலக்கையில் அம்பும், இடக்கையில் வில்லுமாகக் கம்பீரமாகக் காட்சி கொடுக்கும், வீரகோதண்டராமசுவாமி. ராவணனை வென்று சீதையை மீட்டபின் அயோத்தி செல்லும் வழியில் பரத்வாஜர் ஆசிரமத்தில் தங்கிச் சென்றதாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது .

இராமனை ஜானகியோடு சேர்த்து வைத்த அனுமன் நம்முடைய பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வைக்கிறார்.
திருமணம் கைகூடாதவர்களும், புத்திரபாக்யம் அற்றவர்களும் இந்த மாருதியை பிரார்த்தனை செய்ய மனம் போல் மாங்கல்யம் அமையும்..

இரட்டைக் கொம்புடைய தேங்காய் இங்கு சிறப்புடையது, கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் சன்னிதிக்கு எதிரே காட்சியளிக்கிறார். வடக்கில் சிவன் கோயில் உள்ளது.
கிழக்கு நோக்கி காட்சி தரும் ராமனின் முன் மண்டபத்தில் நாம் நின்றால் இருவரையும் ஒரு சேர தரிசிக்கலாம். சிவன் கோவிலில் நடராஜர் சன்னதியும் உண்டு. ஆதலின் இந்த தலம் ஆதிதில்லை என்றும் அழைக்கப்படுகிறது

இந்த ஆலயத்தின் பின்புறம் கோவில்குளம் இராம தீர்த்தமும், தெற்கில் சீதா தீர்த்தமும், வடக்கில் அனுமார் தீர்த்தமும் உள்ளன.
இந்தத் தீர்த்தங்களில் தை,
ஆடி அமாவாசைகளில் பெருந்திரளாக பக்தர்கள்
புனித நீராடுகின்றனர்.
சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். பகை விலக, புத்திர தோஷம் நீங்க தில்லைவிளாகம் வீரகோதண்ட ராமரைத் தரிசிக்கலாம்.

இந்தக் கோவிலில் இராம நவமி, ஹனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை, நவராத்திரி வைகுண்ட ஏகாதசி, தை, ஆடி அமாவாசை திருவிழாக்கள் நடைபெறும்.

ஜெய் ஶ்ரீ ராம்!!!

முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை வழிபாடு பற்றி அறிவோம் விரதமிருந்து வழிபடுவது எப்படி?..சிறப்பு கட்டுரைகள்நமது ம...
15/04/2025

முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை வழிபாடு பற்றி அறிவோம்

விரதமிருந்து வழிபடுவது எப்படி?..

சிறப்பு கட்டுரைகள்

நமது முன்னோர்கள் நவகிரகங்களில் ராகு, கேதுவை தவிர்த்து மற்ற கிரகங்களின் தொடர்போடு, வார தினங்களுக்கு (ஞாயிறு முதல் சனி வரை) பெயர் வைத்தனர்.

அந்த வகையில் செவ்வாய் கிரகத்தின் தொடர்புடன் செவ்வாய்க்கிழமை உண்டாயிற்று.

கிரகங்களில் மங்களகரமான கிரகம் செவ்வாய். பெயரிலேயே மங்களம் இருப்பதால் #செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் செயல்களில் நிச்சயம் வெற்றி உண்டாகும். அதேபோல் மங்களகாரகன் என்கிற பெயர் மட்டுமல்லாமல், செவ்வாய்க்கு பூமிகாரகன் என்கிற பெயரும் உண்டு.

நவகிரகங்களில் ஒரு மனிதனின் ரத்தம், நோய் எதிர்ப்பு சக்தி, தைரியம், பூமி சம்பந்தமான சொத்துக்கள், #செவ்வாய் தோஷம், சொந்த வீடு ஆகியவற்றிற்கு காரகனாக செவ்வாய் பகவான் இருக்கிறார்.

நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் பகவானுக்கு அதிபதி முருகப்பெருமான். எனவே, செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்சனைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.

முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு அதிக பலன் உண்டு.

செவ்வாய் கிழமையில் முருகனை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு தீராத பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.

முருகா என்றால் அனைத்து துன்பங்களும் பறந்துவிடும் என்பார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானை நினைத்து செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். குடும்ப அமைதி, மன நிம்மதி என அனைத்தும் தேடி வரும்.

செவ்வாய் கிழமைகளில் என்ன நினைத்து வழிபாடு செய்கிறோமோ அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். அதோடு வாழ்க்கையில் ஏற்றம் என்பது இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையை மாற்றும் சிறப்பான வழிபாடு என்று கூட இதை சொல்லலாம்.

ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் நிலை சரி வர அமைய பெறாதவர்கள் செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து வழிபட நன்மை உண்டாகும்.

முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகின்றன.

வார விரதம்; நட்சத்திர விரதம்; திதி விரதம்

வார விரதம் என்பது செவ்வாய்கிழமைகளில் அனுஷ்டிப்பது

நட்சத்திர விரதம் என்பது கிருத்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது

திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது.

*9 செவ்வாய்க்கிழமை விரதம் :*
செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் குளித்துவிட்டு, அருகில் உள்ள முருகப்பெருமான் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். பிறகு வீட்டிற்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம்.

"ஓம் சரவணபவ" என்ற மந்திரத்தை தொடர்ந்து ஜெபிப்பது நல்லது.

முருகப்பெருமான் அன்னதானப் பிரபு என்பதால், இந்த விரத நாட்களில் உங்களால் முடிந்த அளவு அன்னதானம் செய்வது மிகச் சிறந்த பலனைத் தரும்.

மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவுசெய்ய வேண்டும்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதன் மூலம் தோஷத்தின் பாதிப்புகள் குறையும்.

இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்து வழிபட்டால்...
செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறையும்.
சொந்தவீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும்.
பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும்.
பய உணர்வுகள் நீங்கி தைரியம் பிறக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனின் அருளைப் பெறுவோம்..!!

முருகனின் சொந்தங்கள் ஆன்மீக சிந்தனைகள் ஆன்மிகம்

10/04/2025

ஜாதக கட்டத்தில் ஒரு நல்லது கூட நடப்பதற்கு வாய்ப்பு இல்லையா? ஜாதகத்தை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு, நெற்றியில் இதை வைத்துக் கொள்ளுங்கள். எல்லா நல்லதும் ஒவ்வொன்றாக உங்கள் பின்னால் வரும்...

பரிகாரங்கள் எளிமையாக இருந்தால், பரிகாரத்திற்கு பவர் இல்லை என்று சொல்கிறது இந்த உலகம். அப்படி கிடையாது. மிக மிக எளிமையான பரிகாரத்தில் தான் சக்தி வாய்ந்த நன்மைகள் அடங்கியிருக்கிறது. அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப் போகும் பரிகாரம் மிக மிக எளிமையான பரிகாரம். இதை செய்தால் வாழ்க்கையில் முன்னேறி விட முடியுமா என்று நிறைய பேர் சிந்திக்கலாம். இதை மட்டும் செய்தாலே போதும். வாழ்க்கையில் நீங்கள் எங்கோ சென்று விடுவீர்கள்.

அதிலும் குறிப்பாக சில பேருக்கு ஜாதக கட்டத்தில் நல்லது நடக்க வாய்ப்பே இருக்காது. கட்டத்தை சுற்றி சுற்றி பார்த்து கணக்கு போட்டாலும், உன் வாழ்க்கை விளங்காது என்று தான் சொல்லுவார்கள். நேரடியாக ஜோதிடர்கள் இப்படி சொல்ல மாட்டார்கள். காலகட்டம் சூழ்நிலை இப்போது சரியில்லை என்று சொல்லுவார்கள்.

உங்களுடைய ஜாதக கட்டத்திலும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், இன்றிலிருந்து இந்த பரிகாரத்தை செய்ய துவங்கி பாருங்கள். பொதுவாக ஜோதிடத்தில் இன்னொரு விஷயமும் சொல்லப்பட்டுள்ளது. திங்கட்கிழமையும், வியாழக்கிழமை அன்றும் துவங்கக்கூடிய பரிகாரங்களில் தடைவராது என்று. வாய்ப்பு இருந்தால் திங்கட்கிழமை வியாழக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை நீங்கள் துவங்கலாம். மிகவும் நல்லது.

நல்லது நடக்க பரிகாரம்...

தினமும் எழுந்து குளித்து முடித்துவிட்டு சிவசிவ என்று சொல்லி கொஞ்சம் திருநீரை நெற்றியில் பூசுங்கள். இது முதல் பரிகாரம். வெளியில் செல்லும்போது தினமும் ஒரு பசு மாட்டிற்கு உங்கள் கையால் அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் அல்லது பசு மாடு என்ன சாப்பிடும். உங்களுக்கு தெரியும் அல்லவா. பசு சாப்பிடும் படி இருக்கக்கூடிய எந்த பொருளை வேண்டும் என்றாலும் உங்கள் கையால் வாங்கி கொடுங்கள். இந்த பரிகாரத்தை ஒருநாள் செய்தால், இரண்டு நாள் செய்தால் பலன் நிச்சயம் இருக்காது.

தினமும் உங்கள் வாழ்க்கையில் இந்த 2 விஷயங்களையும் தொடர்ந்து செய்து வரும்போது, தானாக உங்களுடைய கால்கள் சிவன் கோவிலை தேடி செல்லும். தானாக உங்களுடைய கால்கள் முருகன் கோவிலை தேடி செல்லும். உங்களுடைய வாய் திருவாசகம் தேவாரம் பாடத் துவங்கும். உங்களுடைய வாய் திருப்புகழ் பாடத் தொடங்கும். அரோகரா சொல்லத் துவங்கும், ஓம் நமசிவாய சொல்ல துவங்கும். ஈசனின் காலையும், முருகனின் காலையும் பற்றி கொண்டவர்களுக்கு எதற்கு ஜாதகம். உங்களுடைய தலையெழுத்து நிச்சயம் மாறும்.

முருகனின் திருப்பாதம் உங்களுடைய தலை மேல் இருக்க, தாறுமாறான தலையெழுத்து அழிந்து, உங்களுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறும் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த பரிகாரத்தில் செய்வதற்கு ஏதேனும் சிரமம் இருக்கிறதா. நிச்சயம் கிடையவே கிடையாது. இந்த பரிகாரத்தை செய்ய துவங்கிய ஒரு சில நாட்களிலேயே மன நிம்மதி உங்களை வந்து சேர்ந்துவிடும்.

ஆனால் இந்த பரிகாரத்தை ஒரு வருடம், இரண்டு வருடம் செய்யும்போது தான் உங்களுடைய வாழ்க்கையில் நிலையான நல்ல மாற்றங்கள் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். குரு பகவான் ரொம்ப பெரிய கிரகம். சனிபகவான் ரொம்ப பெரிய கிரகம். இவர்கள் நினைத்தால் நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் நல்லதாக நடக்கும்.

ஆனால் இவர்களுக்கு செய்யக்கூடிய பரிகாரம் ஒரே நாளில் பலன் தராது. குருவுக்கு 1 வருடம் பரிகாரம் செய்தால் தான் பலன் கிடைக்கும். சனிபகவானுக்கு 2 1/2 வருடம் பரிகாரம் செய்தால்தான் பலன்களைக்கும் என்பதும் ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம். கிரகங்களுக்கு உரிய பரிகாரங்களை தேடித் தேடி நாம் செய்ய, நமக்கு நேரமும் இருக்காது, அதற்கான நிதி நிலைமையும் போதாது.

மேலே சொன்ன பரிகாரத்தை செய்யுங்கள் தினமும் நெற்றியில் திருநீர் அணிந்து, சிவசிவ அரோகரா சொன்னாலே போதும். வேறு எதுவுமே வேண்டாம். பசு மாட்டிற்கு முடிந்தவரை உணவு பொருட்களை உங்கள் கையாலேயே கொண்டு போய், பசு வாயில் வைத்து விடுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆன்மீக சிந்தனைகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category