02/05/2023
*மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கு வணக்கம், தமிழ்நாட்டின் முதல்வராய் ஆட்சியில் பொறுப்பேற்றமைக்கு இந்த ஏழை சித்தவைத்தியனின் உளம்கனிந்த வாழ்த்துக்கள்,!!!, முத்தமிழறிஞர் கலைஞர் ஐயா அவர்கள் பாரம்பரிய மருத்துவ நலவாரியம் தொடங்கினார் அது சென்ற ஆட்சியில் முடக்கப்பட்டது, தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் தொடங்கி,தமிழக சட்டசபை தீர்மானத்தின்படி பரம்பரை பாரம்பரிய மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த E.s.m.p பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. Ccim மத்திய அரசின் பழைய சட்டத்தை பொய்யான காரணம் கூறி புறக்கணிக்கப்படுகிறது,!!! தமிழ் மாநில எல்லைக்குள் மருத்துவம் செய்ய Enlistment registration, பதிவுக்காக காத்திருக்கும் பட்டியல் மருத்துவர் சி கிளாஸ், Vvc, கிராம வைத்தியர், இது முந்தைய ஆட்சி காலங்களில் வழங்கப்பட்டது, தமிழகத்தில் சுமார், ஊருக்கு இரண்டு மூன்று பரம்பரை மருத்துவர்கள் என 2இலட்சம் பேர் உள்ளனர், அனுபவமுறையிலும் குருகுல முறையிலும் கற்று எளிய செலவில் குணமாக்கி வருகின்றனர்., ஆனால் தொழில் போட்டியாலும் காழ்ப் புணர்ச்சிகளாலும், போலி மருத்துவர்கள் என சித்தரிக்கப்பட்டு, தொழில் சுதந்தரமின்றி, சித்த வைத்தியத்தொழில் செய்யமுடியாமல் பெறும் மனவேதனையுடனும், சங்கடத்துடனும் உள்ளனர், இருபது முப்பது வருடங்களாய், தொழில் செய்து வருபவரை, திடீரென நீ படிக்காதவன், தொழில் செய்யாதே, என்றால் வைத்தியர் குடும்பம் வாழ்வாதாரம் குழந்தைகளின் கல்வி, என பட்டதாரி மருத்துவர்களால் மிரட்டப்படும் செயல்களால் மன உழைச்சல்கள் தொடர்கிறது, பெருந்தொற்று பரவி வரும் இச்சூழலில் சித்த மருத்துவமுறையில் பல்லாயிரக் கணக்கானோர் குணமாகியுள்ளனர், ஒருவர் கூட இறக்கவில்லை,!!! மருந்துகள் தயாரித்து கொடுத்து குணப்படுத்தும் அளவு அனுபவ மருத்துவ அறிவுடையவர்கள் தமிழக பரம்பரை மரபுவழி மருத்துவர்கள், இச்சூழலில் நாட்டுமக்களை காப்பாற்ற சித்த மருத்துவ சிகிச்சையளிக்க பாரம்பரிய மருத்துவர்களாகிய எங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டுகிறோம்,!!!, பரம்பரை மருத்துவர்கள் அந்த அந்த ஊர் கிராம நிர்வாகஅலுவலர், R.i.தாசில்தார் போன்ற அரசு அதிகாரிகளின் விசாரணையில் ரெகுலர் பிராக்டீஸ் பாம்.7, சான்றிதழ் விண்ணப்பித்து தாசில்தார் சான்றிதழ் வாங்கி, கிராமங்களில் முறையான சித்தவைத்தியம் மட்டும் செய்து வருகிறோம், தற்சமயம் மேற்குவங்கத்தில் R.h.p, சான்றிதழ் வழங்கி கிராமிய மருத்துவர்களை அல்லோபதி, மருத்துவம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது, ஆந்திராவிலும் மாநில அதிகாரங்களின் படி முன்பு R.m.p அல்லோபதி வழங்கப்பட்டுள்ளது, நாங்கள் கேட்பது அரசு அங்கீகாரம் மட்டுமே, வேறெந்த சலுகையும் வேண்டாம், Dr. என்று போட்டுக்கொள்ள ஆசையில்லை, எங்களுக்கு, எங்களை வைத்தியராய் வாழவிடுங்கள்,!!! வாழவழிவகை செய்து தாருங்கள்,!!! கியூபாவின் வெறுங்கால் மருத்துவர்களால் தேசத்தையே பாதுக்கமுடிந்தது,!!! மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ள இச்சூழலில் இந்த மண்ணின் மைந்தர்களாகிய எங்களுக்கும் வாழ்வு கொடுங்கள்,!!!, தயை கூர்ந்து தமிழகத்தைக் காப்பாற்ற எங்களுக்கும் ஒரு வாய்ப்பளியுங்கள், நன்றி,!!!, நன்றி,!!!, நன்றி!!!, இதைப்படிக்கும் நல்ல உள்ளங்கள், மாண்புமிகு முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு, சேரும் படி பலருக்கும் சேர் செய்யுங்கள், Pls share public, தமிழனையும் தமிழ் மண்ணையும் காக்க,!!! தமிழ்ப்பாரம்பரிய மருத்துவத்தை மீட்டெடுப்போம்,, 🌹💐🌸🌸🌸🌸💐🌸🌸🙏*