Christ Believer's Association

Christ Believer's Association Building a fellowship with all people who believes in Jesus Christ...

இன்றைய கர்த்தருடைய வார்த்தை.நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும். சங்கீதம் 37:23.உங்கள் எதிர்காலம் இயேசு கிறிஸ்...
09/09/2020

இன்றைய கர்த்தருடைய வார்த்தை.

நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும். சங்கீதம் 37:23.

உங்கள் எதிர்காலம் இயேசு கிறிஸ்துவின் கரத்தில் பாதுகாப்பாய் இருக்கிறபடியால் மகிழ்ச்சியாயிருங்கள்.

இன்று, நீங்கள் கர்த்தருக்குள் இருந்தால், பயப்படாதிருங்கள். ஏனென்றால், நீங்கள் பாதுகாப்பாயிருக்கிறீர்கள். உங்கள் பாதையும் பாதுகாப்பாயிருக்கிறது. அதே வேளையில் உங்கள் எதிர்காலமும், நீங்கள் போய்க் கொண்டிருக்கும் உங்கள் தற்கால சூழ்நிலையும் பாதுகாப்பாயிருக்கிறது.

நீங்கள் தேவனுக்குள் இருந்து, அவரே உங்களுக்கு எல்லாமாயிருக்கும் போது, புன்னகைத்துக் கொண்டே இருங்கள். ஏனென்றால், உங்கள் நடக்கை தேவனால் ஆளுகை செய்யப்படுகிறது. உங்கள் வழிகளில் அவர் பிரியப்படுகிறார். கர்த்தர் உங்களை உயர்த்தி, உங்களை ஆசீர்வதிப்பார்.

இன்றைய சிந்தனை. பாதுகாப்பான நடத்துதல் நீதிமானுக்கு உண்டு.

Today's God's Word.The steps of a good man are ordered by the Lord.Psalm 37:23.Be joyful for your future is safe in the ...
09/09/2020

Today's God's Word.

The steps of a good man are ordered by the Lord.
Psalm 37:23.

Be joyful for your future is safe in the hands of Jesus Christ.

If you are in the Lord today, fear not for you are safe and your path is also safe. Your future is safe and at the same time, the present situation you are going through will also be safe.

If you are in the Lord, and He is your everything, keep smiling because your steps are governed by Him and He delights in your ways. God will lift you and make you a blessing.

Thought for the day. The righteous have a safe walk.

இன்றைய கர்த்தருடைய வார்த்தை.உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.சங்கீதம் 119:1...
20/08/2020

இன்றைய கர்த்தருடைய வார்த்தை.

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
சங்கீதம் 119:105.

கிறிஸ்துவில் விசுவாசியாயிருக்கிற ஒருவன் தேவனுடைய வார்த்தை இல்லாமல் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியாது.

தேவனுடைய வார்த்தை உங்களுக்கு வழி காட்டுகிறது. நீங்கள் எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறி வழி நடத்துகிறது. அந்த வார்த்தையைப் பற்றிக் கொண்டு, உங்கள் வாழ்க்கையில் அது ஆளுகை செய்யும் படி அதற்கு ஒப்புக் கொடுங்கள். அந்த வார்த்தை உங்கள் பாதைகளைப் பிரகாசிக்கச் செய்கின்றது. எனவே, உங்கள் பாதையைப் பிரகாசிக்கச் செய்கிற தேவனுடைய வார்த்தை உங்களுக்கு அவசியம்.

அன்பானவர்களே, இந்த வார்த்தை இன்று உங்களுடைய தியானமாக மாறட்டும். தேவனுடைய வார்த்தையை விட்டு ஒருபோதும் பிரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்றைய சிந்தனை. தேவனுடைய வார்த்தையைப் பற்றிக் கொள்ளும் போது நாம் பிரகாசிக்கிறோம்.

Today's God's Word.Your word is a lamp for my feet, a light on my path.Psalm 119:105.A believer of Christ cannot live a ...
20/08/2020

Today's God's Word.

Your word is a lamp for my feet, a light on my path.
Psalm 119:105.

A believer of Christ cannot live a victorious life without God's Word.

The Word of God shows you and guides you where you have to go and what you have to do. Hold on to the Word and master it every day in your life for the Word produces light unto your path. Hence you need God's Word which will illuminate your path.

Beloved, today this Word should be your meditation. You and the Word should not be separated.

Thought for the day. When we hold on to the Word of God we shine.

இன்றைய கர்த்தருடைய வார்த்தை.நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற படிய...
16/08/2020

இன்றைய கர்த்தருடைய வார்த்தை.

நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற படியால்,.... நம்மை வெட்கப்படுத்தாது. ரோமர் 5:5.

தேவ பிள்ளைகளின் இருதயங்களில் காணப்படும் தேவ அன்பு அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது.

அன்பு சகோதர சகோதரிகளே, உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரில் அன்பு செலுத்துங்கள். பரிசுத்த ஆவியானவர் இன்று உங்களை வழி நடத்தட்டும். உங்களுக்காக எதையும் வைக்காமல் அவருடைய தெய்வீக அன்புக்கு முற்றிலும் ஒப்புக் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் கடந்து செல்லும் உபத்திரவங்கள் சீக்கிரத்தில் மறைந்து போவதைக் காண்பீர்கள்.

இன்றைய சிந்தனை. தேவனை நேசிக்கிறவர்கள் தூண்களைப் போல் நிலைத்திருப்பார்கள்.

Today's God's Word.Hope does not disappoint us, because God has poured out His love into our hearts by the Holy Spirit. ...
16/08/2020

Today's God's Word.

Hope does not disappoint us, because God has poured out His love into our hearts by the Holy Spirit. Romans 5:5.

God's divine love in the hearts of the people makes the difference between them and others.

Dear brothers and sisters, love the Lord with all your heart. Let the Holy Spirit lead you today. Submit yourself totally with no reservation but experience His divine love. You will see present sufferings in your life vanish quickly.

Thought for the day. They that love God stand as pillars.

இன்றைய கர்த்தருடைய வார்த்தை.வெளிமான் வேட்டைக்காரன் கைக்குத் தப்புவது போல, நீ உன்னைத் தப்புவித்துக் கொள். நீதிமொழிகள் 6:5...
15/08/2020

இன்றைய கர்த்தருடைய வார்த்தை.

வெளிமான் வேட்டைக்காரன் கைக்குத் தப்புவது போல, நீ உன்னைத் தப்புவித்துக் கொள். நீதிமொழிகள் 6:5.

தேவ பிள்ளைகளை விழத்தள்ளும்படி அவர்கள் கால்களுக்கு வலைவிரித்து சாத்தான் காத்துக் கொண்டிருக்கிறான். அந்த வலைகளுக்குத் தப்பும்படி கர்த்தர் இன்று உங்களை எச்சரிக்கிறார்.

இன்று, கர்த்தருடைய வார்த்தையினால் எச்சரிப்பைப் பெற்ற நீங்கள், தேவனுடைய பிரசன்னத்தில் காத்திருந்து, வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் கவனமாயிருங்கள். கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோவென்று வகைதேடிச் சுற்றித் திரியும் சாத்தானின் கண்களுக்கு விழிப்பாயிருங்கள். உங்கள் கால்களின் கீழாக எப்போதும் ஒரு வலை விரிக்கப்பட்டிருக்கிறது என்கிற எண்ணத்தோடு நடந்து கொள்ளுங்கள்.

நீங்கள் சாத்தானுக்குப் பயந்து நடுங்க வேண்டியதில்லை. கர்த்தர் கல்வாரி சிலுவையில் சாத்தானை ஜெயித்து, உங்களுக்குக் கிருபையைத் தந்திருக்கிறார். சாத்தானின் கிரியைகளை அளிக்கத் தேவையான வல்லமையையும் அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

இன்றைய சிந்தனை. கர்த்தர் இரு கரங்களையும் விரித்து எப்போதும் நம்மை அழைக்கிறார்.

Today's God's Word.Deliver yourself like a gazelle from the hand of the hunter. Proverbs 6:5.The Lord warns you to escap...
15/08/2020

Today's God's Word.

Deliver yourself like a gazelle from the hand of the hunter. Proverbs 6:5.

The Lord warns you to escape from the snares of the devil who always follows God's children and waits till they fall down.

Today, be warned by God's Word to be active in the presence of God and watchful for in some way or other you will be hunted by the devil. Always remember the devil is a hunter and a fowler wanting to put you in the net that you may not escape but become its victim.

Do not fear for the Lord has defeated satan on the Cross and has given you His grace that you may destroy the works of the devil by the power of the Almighty God.

Thought for the day. The Lord's open arms welcome us always.

இன்றைய கர்த்தருடைய வார்த்தை.கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.எபேசியர் 6:10.தேவ பிரசன்னத்தின் ...
14/08/2020

இன்றைய கர்த்தருடைய வார்த்தை.

கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
எபேசியர் 6:10.

தேவ பிரசன்னத்தின் வலிமைக்கு முன்பாக வேறு எந்த வலிமையும் நிற்க முடியாது.

அநேகர் தேவ பிரசன்னத்தின் மகிமையை அறிந்தவர்களே. ஆயினும் அந்த தேவ பிரசன்னம் தங்களோடிருக்கும் விதமாக அவர்கள் எதையும் செய்வதில்லை. அதிக சம்பளம், நல்ல வருமானம், சௌகரியமான வாழ்க்கை என அவர்களுக்கு வாய்ப்பு வரும் போது தேவ பிரசன்னத்தில் வாழ்வதை விட்டு விடுகின்றனர். தேவ உறவில் வாழ்வதற்கு ஏதுவாக வேலை, தொழில் போன்றவற்றை ஒழுங்கு படுத்துவதற்கு தவறி விடுகின்றனர். அதிக பணமே அதிக வலிமை, அதிக ஞானமே அதிக பெலன் என எண்ணி தேவ பிரசன்னத்தில் வாழ்வதை அலட்சியம் செய்து விடுகின்றனர்.

எனவே, வாழ்க்கையில் எந்த சோதனைச் சூழலையும் எதிர்கொள்ளும் தேவ பலத்தை இழந்து போகின்றனர்.

இன்றைய சிந்தனை. தீயவர்களின் சௌகரியங்கள் அவர்களை மகிழ்விக்காது. நல்லவர்களின் அசௌகரியங்கள் அவர்களைச் சஞ்சலப்படுத்தாது.

Today's God's Word.Be strong in the Lord and in His mighty power.Ephesians 6:10.The presence of God surpasses all the po...
14/08/2020

Today's God's Word.

Be strong in the Lord and in His mighty power.
Ephesians 6:10.

The presence of God surpasses all the powers.

Many of us are aware of the greatness of the presence of God but they don't do anything to enjoy the presence. When they step into a luxurious life and enjoy the worldly comforts, they stray from the presence of God. They ignore living in the presence of God because of the wrong idea that possession of greater wisdom and money can make them more powerful.

That's why when they face difficulties they lose the strength of God and remain powerless to overcome the challenges.

Thought for the day. The comfort and luxury of the wicked can't make them happy. Problems in the lives of the righteous can't make them sad.

இன்றைய கர்த்தருடைய வார்த்தை.உங்களுக்குள்ளே  உப்புடையவர்களாயிருங்கள்;  ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயுமிருங்கள். மாற்கு...
13/08/2020

இன்றைய கர்த்தருடைய வார்த்தை.

உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள்; ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயுமிருங்கள். மாற்கு 9:50.

உங்களுடைய நல்ல முன்மாதிரியான வாழ்க்கையைக் காண்கின்ற மற்றவர்கள், ஒருவரோடொருவர் சமாதானத்துடன் வாழ்வதை வாஞ்சிக்கட்டும்.

இயேசு உப்பை மாதிரியாகப் பயன்படுத்தியதற்கு ஒரு விசேஷித்த நோக்கமுண்டு. உப்பு ஒரு உணவுப் பண்டத்தின் சுவையை அதிகரிப்பது போன்று, சமாதானமும் விளங்கும். இயேசு கூறிய எளிய போதனைகளை அநேகர் பின்பற்றுவதில்லை. எனவே தான் அநேகக் குடும்பங்கள் குழப்பங்களும் காணப்படுகின்றன.

அன்பு சகோதர சகோதரிகளே, நீங்கள் உப்பைக் குறித்த செய்தியைச் செயல்முறைப் படுத்தி, ஒருவருக்கொருவர் சமாதானமாயிருங்கள். அப்பொழுது, உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாகக் காணப்படும்.

இன்றைய சிந்தனை. உப்பைப் போலிருந்து, மற்றவர்களுக்குக் சமாதானத்தைக் கொண்டு வாருங்கள்.

Today's God's Word.Have salt in yourselves, and be at peace with each other. Mark 9:50.Those who see your your good exam...
13/08/2020

Today's God's Word.

Have salt in yourselves, and be at peace with each other. Mark 9:50.

Those who see your your good example life may change and strive to live at peace with one another.

There is a special purpose in the example of salt that Jesus has used. Just as salt is useful in improving taste, peace is useful like salt. Many do not follow the simple teachings of Jesus. That is why many families are in chaos.

Practice the message of salt and peace with one another so that your life will be a blessing.

Thought for the day. Be like salt and bring peace to others.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Christ Believer's Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share