Sri Ugra Prathyangara Atharvana Bakthrakali Amman Temple

Sri Ugra Prathyangara Atharvana Bakthrakali Amman Temple Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Ugra Prathyangara Atharvana Bakthrakali Amman Temple, Chennai.

23/02/2020
ஸ்ரீ உக்ர பிரித்தியங்கரா தேவி துணை எனையாளும் ஸ்ரீ உக்ர பிரித்தியங்கரா தேவி மகா சன்னிதான அம்மன் கமலமலர் பாதங்களில் கோடான ...
14/10/2019

ஸ்ரீ உக்ர பிரித்தியங்கரா தேவி துணை எனையாளும் ஸ்ரீ உக்ர பிரித்தியங்கரா தேவி மகா சன்னிதான அம்மன் கமலமலர் பாதங்களில் கோடான கோடி முறை நமஸ்காரம்
புண்ணிய தளங்களில் ஒன்றான திருகழுகுன்றதில் ஆசிரியர் நகரில் எழுந்தருளியிருக்கும் அன்னை ஸ்ரீ உக்ர பிரித்தியங்கரா பெருமைகளை கூறும் வகையில் பிரித்தியங்கரா என்பவள் யார் ? சமீப காலமாக பிரித்தியங்கரா தேவி பெருமை எல்லா இடங்களிலும் பரவி கொண்டு வருகிறது .

பிரித்தியங்கரா தேவி என்பவள் சர்பேஸ்வரர் நெற்றிகண்ணில் இருந்து ஆயிரம் சிங்க முகங்களோடும் , இரண்டாயிரம் கைகளோடும் ஆதிபருவத்து நரசிம்ம மூர்த்தியின் உக்கிர கோலத்தை சாந்திபடுத்த இந்த உலகத்திலே எழுந்தருளினாள் . ஆங்கிரஸ் என்ற மகரிஷியும் பிரித்யங்கரஸ் என்ற மகரிஷியும் பல நெடுங்காலம் பிரித்தியங்கரா அம்பாளை உபாசனம் செய்து அம்பாளுடைய திருவருள் பேருக்கு ஆளாகி அவர்கள் பெயராலேயே பிரித்தியங்கரா , பிரித்தியங்கரா ஆங்கிரஸ் என்ற பெயரை சேர்த்து அழைக்கப்பட்டார்கள்
வாழ்கையில் ஒரு சாதாரணமான மனிதன் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேறிவிட்டாலோ , கஷ்டப்பட்டு உழைத்து நல்ல ஸ்தானம் பெற்று கொண்டாலோ பக்கத்தில் இருப்பவர்கள் பொறாமை பட வாய்புகள் உண்டு . அந்த பொறாமையின் விளைவு மந்திரம் , தந்திரம் , எந்திரம் , ஏவல் , பில்லி , சூனியம் , களிப்பு , வைப்பு , அபிசாரகர்மா , துஷ்ட தேவதைகளை ஏவி விடுதல் , வியாதிகளை ஏவி விடுதல் ஏன் மரணத்திற்கே ஆளாக்குதல் , அந்த கொடிய செயல்களிலிருந்தும் , பயங்கரங்களில் இருந்தும் பயங்கர கோலங்களில் இருந்தும் காப்பாற்றுவதற்கு வேண்டிய ஒரு பிரதான சக்தி தான் இந்த பிரித்தியங்கரா தேவி .

அது மட்டும் அல்லாமல் கால சக்கரம் சுழன்று கொண்டு இருக்கிறது , சிவனின் அம்சமான காலபைரவன் புதிய உயிர்களை படைத்தது காப்பாற்றுவதற்காக பழைய உயிர்களை வதம் செய்து உலக பாரத்தை குறைப்பதாக ஐதீகம் . அந்த வகையில் அவருடைய சிருஸ்டியாக சனிபகவான் இருக்கிறார் . இருந்தாலும் தர்மவான்கள் தர்ம வழியிலே செல்லும் பொது இன்னும் கொஞ்ச நாள் இருக்கக்கூடாதா? பல தர்மங்களை செய்ய முடியாதா? என்று ஏங்கும் போது அவர்களை காபாற்றுவதற்க்காகவும் , அவர்கள் குடும்பத்தில் திடீர் என்று வரும் ஆபத்துகளிலிருந்து காபாற்றுவதர்க்காகவும் இந்த பிரித்தியங்கரா தேவியை உள்ளன்போடு பக்தி செய்தால் அவர்களை நிச்சயமாக காபாற்றக்கூடியவள் . பஞ்ச பூதங்களால் வரக்கூடிய ஆபத்துக்களை விலக்கி பக்தர்கள் தீய சக்தியில் போகாமல் தடுத்து நிறுத்தும் அதிகாரம் இந்த தேவிக்கு உண்டு .

அந்த வகையில் பிரித்தியங்கரா தேவி திருக்கழுகுன்றம் எழில்மிகு ஆசிரியர் நகரிலே அருள்கோலம் கொண்டு அருளாட்சி புரிந்து வருகிறாள் . இந்த அம்மனுடைய திரு உருவப்படம் ஒவொரு வீட்டிலும் இருக்க வேண்டும் . தினம் தினம் இந்த மறவாமல் இந்த தேவியை மனதில் நிறுத்தி வீட்டின் பூஜையறையிலேயே வைத்து பூஜை செய்து வந்தால் அவர்கள் வீட்டில் துஷ்ட கருமங்கள் வராது . எதிரிகளால் செய்யக்கூடிய ஏவல் , பில்லி , சூனியம் , களிப்பு , வைப்பு ஆகியவை பலிதம் அளிக்காது . எப்போதும் தேவி அந்த தன பக்தர்களையும் அவர்களின் குடும்பத்தையும் எல்லா நேரங்களிலும் , எல்லா இடங்களிலும் எந்த காலத்திலும் காப்பாற்றுவாள் என்பதற்கு சந்தேகமே இல்லை

சிறப்பு மிக்க அந்த பிரித்தியங்கரா தேவியின் அருளை பெற்று எல்லோரும் அம்பாளை உள்ளம் உருகி பூகிக்க வேண்டும் . தங்கள் குறைகளெல்லாம் தீர வேண்டும் என்று அம்பாளை பிரார்த்தனை செய்து ஒவ்வொரு அமாவசை அன்றும் மிளகாய் யாகம் செய்துகொண்டு வருகின்றோம் . இதை விரும்பி செய்யும் பக்தர்கள் ஒரு குடும்பத்தினரோ அல்லது ஐந்து குடும்பத்தினரோ சேர்ந்து செய்யலாம் .

திருமண தடை , புத்திர பாக்கியம் , படிப்பின்மை , வேலையின்மை , சனி , ராகு , கேது பகவான்களின் உக்கிர தோஷங்கள் இந்த அம்பாளை தரிசனம் பெற நிவர்தியடையும் திருமண தடை , புத்திர பாக்கியம் , படிப்பின்மை , வேலையின்மை , சனி , ராகு , கேது பகவான்களின் உக்கிர தோஷங்கள் இந்த அம்பாளை தரிசனம் பெற நிவர்தியடையும்

அணுகவேண்டிய முகவரி பிரித்தியங்கரா பாலாம்பிகை அடியார் R.ஆறுமுகம் ஆசிரியர் நகர் திருகழுக்குன்றம்

அருள்வாக்கு சொல்லும் நாட்கள் அமாவாசை , பௌர்ணமி , ஞாயிறு மற்றும் செவ்வாய்

05/07/2019

Hi Everyone Like&Share This Page

25/05/2019
In 2005
16/11/2017

In 2005

Address

Chennai

Telephone

+919790168985

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Ugra Prathyangara Atharvana Bakthrakali Amman Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Ugra Prathyangara Atharvana Bakthrakali Amman Temple:

Share