தமிழும் சமயமும்.....

தமிழும் சமயமும்..... வான் முகில் வழாது பெய்க! மலி வளம சுரக்க! மன்னன் கோன்முறை அரசு செய்க! குறைவிலாது உயிர்கள் வாழ்க

===================================நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க
===================================
பலவந்தமான மதமாற்ற நடவடிக்கைகளுக்கு மசிந்து கொடாது சைவ சமயத்தினையே தொடர் ந்து அனுட்டித்து வந்த பெருமைக்குரியவர்கள் பலர். சைவசமயத்துக்கு ஒரு சோதனைக் காலமாக இருந்த இக்கட்டான காலகட்டத்திலே அறநெறிக் காவலர் ஆறுமுக நாவலர் அவர்கள் தமது சொந்த மதமான சைவ சமயத்தை தமிழ் மக்கள் புறக்கணித்து வருவதைக் கண்டு வேதனையுற்ற ஆறுமுகநாவலர் சைவத்தினைக் காக்கும் பணியில் ஈடுபட்டார்.
தமிழ் மொழிக்குப் புத்துணர்வு தந்து, பாமரமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் இனிய கவிதைகளை எழுதியவர் மகாகவி பாரதியார். பழைய தமிழை புதிய வடிவில் வடித்து தந்தவர். ஒருபுறம் புதுமையை விரும்பும் மனம், மறுபுறம் அதன் விளைவைக் கண்டு அஞ்சுகிறது. பழம்பொருட்களாக மீண்டும் மீண்டும் பரிந்து செல்கிறது. இவ்வாறெல்லம் இருப்பினும் தன்னிடத்தில் நிலையான அன்பு கொண்ட ஒன்றாக மனத்தை விரும்பி வேண்டுகிறார் பாரதியார். அதனை மேம்படுத்தி, என்றும் அதனிடம் இன்பமே பெற விழைவதாகப் பாடுகிறார் அதன் விழிப்படாமல் தன் விழிப்பட்ட சிவம் என்னும் பொருளைத் தினமும் போற்றி மனத்திற்கு இன்பம் ஓங்கிடச் செய்வதாகக் கூறுகிறார். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற கோட்பாட்டுக்கமைய வாழ்ந்து வந்த பெரியோர் பலர். இங்கு நான் குறிப்பிட்டவர் வெகு சிலரே.
சைவம் தமிழுக்கு செய்த தொண்டு அளவிட முடியாதது. கவிச்சுவையில் சைவர்களான ஔவையும், காளமேகமும் ( பாடுக! என்றதும் மழை பொழிவதைப்போல் பாடும் திறமை பெற்றதால் இவர் ‘காளமேகம்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.)செய்த பணிகள் இணையில்லாதவை. பூரணமான அன்புமிகுந்த பக்தி காலத்தையே மாற்றி இறையருளை ஊட்டும் என்பதை அபிராமிப்பட்டர் மற்றும் மார்க்கண்டேயர் கதைகளிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம். தமிழின் இனிமையை மாணிக்கவாசகர், சேக்கிழார் போன்ற சைவப் புலவர்கள் தங்கள் பாடல்களில் உணர்த்தியிருக்கின்றனர். இன்று நமக்கு கிடைத்திருக்கும் தமிழ் நூல்களில் மிகவும் தொன்மையான நூலான தொல்காப்பியத்தில் தமிழர்களால் வணங்கப்பட்ட தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.தொல்காப்பியம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. அதில் குறிஞ்சி நில மக்களின் தலையாய தொழில் வேட்டையாடுவது. அவர்களின் தெய்வமாகவே முருகன் என்பவர் குறிப்பிடப் பட்டிருக்கிறார். சைவமும் தமிழும் தழைத்தோங்க வேண்டுமென்று விரும்பினர் ஆன்றோர்;

சைவம் என்பது ஜாதி மத இன சார்பற்றது என்பதை முதலில் நாம் அனைவரும் உணரவேண்டும்; பிற உயிர்களைக்கொன்று நம் உடல் வளர்க்க வேண்டிய நிலையில் நாம் இல்லை!! இதை எத்தனையோ சித்தர்களும், புத்தர்களும் காலம் காலமாய் கூறிவிட்டார்கள்!! தமிழர்களின் சமய பெருமைகள் அனைவரும் அறிய வேண்டும். நான் ஆன்மீகவாதி தான் என்றாலும், கடவுளின் பெயரில் நடக்கும் கூத்துகளை ரசிக்கும் மூடன் அல்ல. "அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்" என்ற அறநெறியை போதிக்கும் திருநெறியில் ஒழுக விரும்புபவன். இந்து மதத்தின் மிகப்பெரிய நோய் போலி சாமியார்கள் ......தான் இந்த நோயை முதலில் சுகப்படுத்த வேண்டியது இந்துக்களின் முக்கிய கடமை.

நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெருமானென்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வேனே.
---- திருமந்திரம்

எல்லாம் வல்ல பரம்பொருளின் அருட்பெருங்கருணை ஆலயங்கள் தோறும் விளங்கித் தோன்றுகின்றன. அதனால் நம் முன்னோர் " ஆலயம் தொழுவது சாலமும் நன்று " என்று கூறினர். இவ்வாலயங்களைப் பாடல் பெற்ற திருத்தலம் என்றும் வைப்புத்தலம் என்றும் கூறுவர். தேவாரங்கள் பாடப்பட்டவை பாடல் பெற்ற திருத்தலம் என்றும் மற்றவை வைப்புத்தலம் என்றும் கூறுவர். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகாகத் திகழும் தமிழகம், மணங்கமழும் திருக்கோயில்களின் நந்தவனம். நெறிநிலை தவறாது வாழ்ந்த சங்க காலத்தைப் பறைசாற்றும் பழந்தமிழகத்தில் திருக்கோயில்கள் நிறைந்திருந்தன. இதனை இளங்கோவடிகள் அழகாகச் சொல்கிறார்.

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
---- இளங்கோ அடிகள்

அன்பும் சிவமும் ஒன்றாதலினால் இறைவன் பின் செலுத்தும் மாசற்ற அன்பே, பக்தி வழிபாடே பக்திக்கு வித்தாகிறது. வழிபாடு இருவகையானது ஒன்று அக வழிபாடு, மற்றொன்று புற வழிபாடு. இறைவனைத் தன்னுள்ளே கண்டு பூசனைகள் இயற்றி வழிபடுவது அக வழிபாடு. "தலங்கள் தோறும் சென்று அவ்விடையமர்ந்த
தம்பிரான் திருதளினை வணங்கி"
வலங் கொளும்படி என்னையும் கூட
வா என் கிறவனை வாழி என் நெஞ்சே "
---- இராமலிங்க அடிகளார்

இராமலிங்க அடிகளார், நெஞ்சே ! இடப
வாகனத்தில் மேவும் சிவபெருமான் கோயில் கொண்டுள்ள திருத்தலங்கள் தோறும் சென்று அவன் திருத்தாளை வணங்குக, திருக்கோயிலை வலம் வருக, என்னையும் வா என அழைக்கும் நன்னெறியுடைய தன்மையாயினை, நீ, வாழி" என்று கூறுகிறார். " கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்ற முதுமொழிக்கேற்ப ஆலயங்களில் வழிபடுவது நம் மக்களிடையே தொன்று தொட்டு வரும் வழக்கமாகும். பாரத நாட்டில் தானே தோன்றிய " ஸ்வயம் வியக்த " தலங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்பெற்ற தலங்கள் பல உண்டு. ஆதிசங்கரர் முதலிய பெரியோர்கள் கால் நடையாகவே பாரத நாடு முழுதும் சென்று இடையிலுள்ள தலங்களையெல்லம் வழிபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் தலப்புராணங்கள் சிலவற்றிற்கே உள்ளன. தலப்புராணங்களை அறிந்துகொண்டு தரிசித்தால் பல செய்திகளை அறியலாம், இறைவன் அருளையும் முழுமையாகப் பெரலாம். தமிழும் சைவமும் இரு கண்கள் இந்த இரண்டு மட்டுமே இரட்டை குழல் துப்பாக்கி, சமயத்தை விடுத்து வெறும் தமிழை மட்டுமே பேசுவதால் எந்த பயனும் இல்லை, வாழ்க நம் சைவ சித்தாந்த பண்பாடு! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!!!!!! வான் முகில் வழாது பெய்க! மலி வளம சுரக்க! மன்னன் கோன்முறை அரசு செய்க! குறைவிலாது உயிர்கள் வாழ்க! நான்மறை அறங்கள் ஒங்க! நற்றவம், வேள்வி மல்க! மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகெலாம்!
எங்கும் நிறைந்திருக்கும் இறைவன், நாடிவரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிலைக் கலன்களாக விளங்குவதே ஆலயங்களாகும், இங்கு பரம்பொருளாகிய இறைவன், உலகத்திலுள்ள பல உயிர்களுக்கும் துன்பம் நீங்கி, இன்பம் இறங்கி, பல தலங்களில் உருவத்திருமேனி கொன்டு எழுந்தருளி தம்மை மெய்யுணர்வுடன் பணிந்தோருக்கு அருள் செய்து காக்கின்றனர். " இருஞ்சுருபிக் கெங்கும் உருக்காண ஒண்ணாத
பால் முலைப்பால் விம்மி ஒழுகுவதுபோல
வெளிப்பட்டருள்வன் அன்பர்க்கே "
------ சிவஞானசித்தியார்

" எங்கும் சிவனிருப்பன் ஆனாலும் ஏசற்ற
சங்கமத்தும் சற்குருவின் தன்னிடத்தும் - லிங்கத்தும்
ஆவினுடம் பெல்லாமும் அவதரித்து நிற்கினும்பால்
பாவு முலைக்கண் மிகுதிப்பார். "
------ சிவஞானபிரகாச வெண்பா

பசுவின் உடல் முழுவதும் பால் நிறைந்திருந்த போதிலும் மடியின் மூலமாவே பால் வெளிப்படுவது போண்றும், சூரியன் எங்கும் பரவி இருந்த போதும் பளிங்குக் கல்லின் மூலமே கிரணங்கள் வெளிபடுவது போண்றும், நிலத்துக்கடியில் நீர் நிறைந்திருந்த போதும் தோண்டிய இடத்தில் நீர் வெளிப்படுவது போண்றும்,இறைவன் எங்கும் வியாபித்திருந்த போதிலும் ஆலயங்களில் உள்ள மூர்திஅளின் மூலமாகவே அன்பர்க்கு அருள்செய்வான்.

பரம்பொருளாகிய இறைவனின் அருளும் ஆசியும் எலோர்க்கும் கிடைக்க வேண்டும் எனும் அவாவின் உந்துதலால் என்னால் இயன்ற வரை, இன் சிற்றறிவுக்கு எட்டியவரையில், எம்பெருமர்களின் பெருமைகள் மற்றும் தமிழ் மொழி சார்ந்த விடயங்களைப் பகிர்ந்துகொள்ள இயம்புகிறேன். குறை ஏதேனும் இருப்பின் பொறுத்தருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை!!!
அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை!!!!
வல்லமை தாராயோ! - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!


வாழ்க சைவம், வளர்க அதன் தொண்டு, சைவம் உள்ள வரை நம் தமிழும் தழைத்தோங்கும்.

வாழ்க தமிழ் வாழ்க சைவம்.

Address

Chennai

Telephone

+919790794573

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழும் சமயமும்..... posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to தமிழும் சமயமும்.....:

Shortcuts

Share