பொதுநிலையினர் அருள் பணிக்குழு - Laity Commission Kottar Diocese

  • Home
  • India
  • Campus
  • பொதுநிலையினர் அருள் பணிக்குழு - Laity Commission Kottar Diocese
Call Contact the place of worship

பொதுநிலையினர் அருள் பணிக்குழு - Laity Commission Kottar Diocese Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பொதுநிலையினர் அருள் பணிக்குழு - Laity Commission Kottar Diocese, Religious organisation, Assisi Campus, Campus.

பொதுநிலையினர் உலகத்தின் துறைகளான பொருளாதார அரசியல் கல்வி தொழிற்சங்கங்கள் கலாச்சார அமைப்புகள் போன்ற அனைத்திலும் ஈடுபட்டு கிறிஸ்தவ பார்வையில் அவற்றை நெறிப்படுத்துகின்ற வகையில் அவர்களை உற்சாகப்படுத்துதல் பயிற்சி அளித்தல், வழிகாட்டுதல், ஒருங்கிணத்தல்.

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் செப்டம்பர் மாதக் கூட்டம் 02.09.2026 அன்று நடைபெற்றது.  திருமிகு மேரி...
23/09/2026

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் செப்டம்பர் மாதக் கூட்டம் 02.09.2026 அன்று நடைபெற்றது. திருமிகு மேரி ஜோதிபாய் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். 'திருஅவையில் பெண் தலைமைத்துவம்' என்ற தலைப்பில் திருமிகு. பரிமளச் செல்வி கருத்துரை வழங்கினார்.

பா. ரபேல்
செயலர்
பொதுநிலையினர் பணிக்குழு
கோட்டாறு மறைமாவட்டம்

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் ஜூலை மாதக் கூட்டம் 01.07.2026 அன்று நடைபெற்றது. நான் உன்னை அன்பு செய...
18/07/2026

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் ஜூலை மாதக் கூட்டம் 01.07.2026 அன்று நடைபெற்றது. நான் உன்னை அன்பு செய்கிறேன் என்ற திருத்தந்தை 14 ஆம் லியோ அவர்களின் ஊக்க உரை பற்றி திருமிகு பா ரபேல் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். திருமிகு பிரிட்டோ ஆன்றனி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். புனித வின்சென்ட் தே பவுல் சபையின் கையேடு ஒன்று பணிக்குழுவின் செயலருக்கு வழங்கப்பட்டது.

பா. ரபேல்
செயலர்
பொதுநிலையினர் பணிக்குழு
கோட்டாறு மறைமாவட்டம்

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் ஜூன் மாதக் கூட்டம் 03.06.2026 அன்று நடைபெற்றது. பணிக்குழுவின் செயலர்...
04/06/2026

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் ஜூன் மாதக் கூட்டம் 03.06.2026 அன்று நடைபெற்றது. பணிக்குழுவின் செயலர் K. மார்சலின் ரஜூலா அவர்களின் பணி நிறைவடைந்ததால் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமிகு. ரபேல் அவர்கள். பொறுப்பேற்றார்கள். திருமிகு. ஆண்ட்ரூஸ் அவர்கள் இரண்டு செயலர்களையும் வாழ்த்தி பேசினார்.

பா. ரபேல்
செயலர்
பொதுநிலையினர் பணிக்குழு
கோட்டாறு மறைமாவட்டம்

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் மே மாதக் கூட்டம் 06.05.2026 அன்று பொதுநிலையினர் நாள், இறையியலாக்கப் ...
08/05/2026

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் மே மாதக் கூட்டம் 06.05.2026 அன்று பொதுநிலையினர் நாள், இறையியலாக்கப் பயிற்சியின் சான்றிதழ் வழங்குதல், புத்தக வெளியீடு என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. கோட்டாறு ஆயர் தலைமை தாங்கி உரையாற்றினார். ‘குமரியில் நற்செய்தி இன்று’ என்ற இறையியலாகப் பயிற்சியின் தொகுப்பு புத்தகம் மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்களால் வெளியிடப்பட்டது. இறையியலாக்கப் பயிற்சியின் சான்றிதழ்களை தமிழகப் பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் செயலர் அருள்பணி. மரிய மிக்கேல் வழங்கி சிறப்புரையாற்றினார். ‘குமரியில் நற்செய்தி இன்று’ என்ற நாடகம் நடைபெற்றது. மாதிரி பங்கு அருள்பணிப்பேரவை என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. பணிக்குழுவின் சார்பில் நலிவுற்றோர் உதவியும் வழங்கப்பட்டது

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் ஏப்ரல் மாதக் கூட்டம் 01.04.2026 அன்று நடைபெற்றது. இதில் "சமத்துவ வாழ...
06/04/2026

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் ஏப்ரல் மாதக் கூட்டம் 01.04.2026 அன்று நடைபெற்றது. இதில் "சமத்துவ வாழ்வுக்கான அரசியல்" என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற பேராசிரியர் திருமிகு நாகராஜன் உரையாற்றினார்.

K. மார்சலின் ரஜூலா
செயலர்
பொதுநிலையினர் பணிக்குழு
கோட்டாறு மறைமாவட்டம்

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழு நடத்திய” நான் உன்னை அன்பு செய்கிறேன்” என்ற தலைப்பில் 19.03.2026 சனிக்கிழ...
06/04/2026

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழு நடத்திய” நான் உன்னை அன்பு செய்கிறேன்” என்ற தலைப்பில் 19.03.2026 சனிக்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை சிறப்பு பயிற்சி நடைபெற்றது. ஏறக்குறைய 65 நபர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். கோட்டாறு மறைவட்ட முதன்மைப் பணியாளர் அருள்பணி. ஆனந்த் கருத்துரை வழங்கினார்.. கலந்துகொண்டவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு கலந்துரையாடி விளக்கம் அளித்தார்கள்

தென்ஒலி பத்திரிக்கையில் பணியாற்றிவர்களுக்குப்  பாராட்டு விழா 07.03.2026 சனிக்கிழமையன்று நாகர்கோவில் அசிசி வளாகத்திலுள்ள ...
23/03/2026

தென்ஒலி பத்திரிக்கையில் பணியாற்றிவர்களுக்குப் பாராட்டு விழா 07.03.2026 சனிக்கிழமையன்று நாகர்கோவில் அசிசி வளாகத்திலுள்ள புனித தேவசகாயம் பயிற்சியகத்தில், மேதகு ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வானது பிற்பகல் 3.00 மணிக்கு திருமிகு ஜோஸ்பின் சைமன் குழுவினரின் இறைவேண்டலுடன் தொடங்கியது. திருமிகு T. ஆன்ட்ரூஸ் வரவேற்புரையாற்றினார். தென்ஒலியில் பணியாற்றி இறைவனடி சேர்ந்தவர்களுக்கு திருமிகு S. மரிய ஜாண் அவர்களால் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. தென்ஒலியின் வெளியிட்டாளர் திருமிகு மார்சலின் ரஜுலா அறிமுகவுரையாற்றினார்.
திருமிகு G. ஜெரொமியாஸ், திருமிகு S. யூஜின், திருமிகு T. பங்கிராஸ், திருமிகு P. பால்ராஜ், திருமிகு குமரி ஆதவன், திருமிகு ஓலக்கோடு ஜாண் ஆகியோருக்கு ஆயர் அவர்களால் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. நினைவுப்பரிசைப் பெற்றுகொண்ட அனைவரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தென்ஒலியின் பவளவிழாக் கட்டுரைப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு ஆயர் அவர்கள் பரிசு வழங்கினார்கள். அருள்பணி. எட்வின் ஜாண் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். தொடர்ந்து ஆயர் நசரேன் சூசை தலையுரையாற்றினார். திருமிகு C. லிகோரி நன்றியுறை கூறினார். திருமிகு S. மரிய செல்வி அவர்களால் இறுதி செபம் சொல்லப்பட்டது. திருமிகு M.A. ஜெலஸ்டின் மற்றும் திருமிகு M, சுமதி ஆகிய இருவரும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் மார்ச் மாதக் கூட்டம் 04.03.2026 அன்று நடைபெற்றது. இதில் ""சட்டமன்றத்...
08/03/2026

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் மார்ச் மாதக் கூட்டம் 04.03.2026 அன்று நடைபெற்றது. இதில் ""சட்டமன்றத் தேர்தலும் மதசார்பின்மையும்" என்ற தலைப்பில் பத்திரிகை ஆசிரியர் திருமிகு நீலாம்பரன் அவர்கள் உரையாற்றினார்கள்.

K. மார்சலின் ரஜூலா
செயலர்
பொதுநிலையினர் பணிக்குழு
கோட்டாறு மறைமாவட்டம்

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் பிப்ரவரி மாதக் கூட்டம் 04.02.2026 அன்று நடைபெற்றது. இதில் "நிகழ்கால ...
27/02/2026

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் பிப்ரவரி மாதக் கூட்டம் 04.02.2026 அன்று நடைபெற்றது. இதில் "நிகழ்கால அரசியல் சூழலும் சிறுபான்மையினர் நிலைப்பாடும்" என்ற தலைப்பில் திருமிகு ராஜேஷ் குமார் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்.

K. மார்சலின் ரஜூலா
செயலர்
பொதுநிலையினர் பணிக்குழு
கோட்டாறு மறைமாவட்டம்

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் சனவரி மாதம் கூட்டம் 07.01.2026 அன்று நடைபெற்றது. இதில் 'கடல்சார் வாழ...
26/02/2026

கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் சனவரி மாதம் கூட்டம் 07.01.2026 அன்று நடைபெற்றது. இதில் 'கடல்சார் வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்ற பொதுநிலையினர் அருள்பணிக்குழுவின் முதல் செயலர் திருமிகு. ஜெரொமியாஸ் அவர்களுக்கு பணிக்குழு சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருமிகு. வெனிஸ் எழுதிய 'குமரி துறைமுகமும் மக்கள் போராட்டங்களும்' என்ற நூலுக்காக அவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

K. மார்சலின் ரஜூலா
செயலர்
பொதுநிலையினர் பணிக்குழு
கோட்டாறு மறைமாவட்டம்

Address

Assisi Campus
Campus
629001

Telephone

+919445685443

Website

Alerts

Be the first to know and let us send you an email when பொதுநிலையினர் அருள் பணிக்குழு - Laity Commission Kottar Diocese posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to பொதுநிலையினர் அருள் பணிக்குழு - Laity Commission Kottar Diocese:

Shortcuts

Share