St.antony's church, varthanvillai

St.antony's church, varthanvillai கேட்கும் வரம் தரும் பதுவை புனித அந்தோணியார் ஆலயம்⛪️

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அன்னை ஸ்கொலாஸ்திக்கா "இறை ஊழியர்" (Servant of God) என அறிவிப்பு கொண்டாட்டம்இந்தியக் கத்தோலிக்...
25/07/2026

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அன்னை ஸ்கொலாஸ்திக்கா "இறை ஊழியர்" (Servant of God) என அறிவிப்பு கொண்டாட்டம்

இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபைக்கு மகிழ்ச்சியூட்டும் முக்கியமான நிகழ்வாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அன்னை ஸ்கொலாஸ்திக்கா அவர்கள் "இறை ஊழியர்" (Servant of God) என்ற திருச்சபையின் முதல் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

1917 அக்டோபர் 15 அன்று, கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகரை அடுத்த பட்டரிவிளை கிராமத்தில் சவரிமுத்து – சவரியாயி தம்பதியருக்கு மகளாகப் பிறந்த அவர், இயேசுவின் திருஇருதய சகோதரிகள் சபையை நிறுவினார்.

இயேசுவின்
திருஇருதய சபையைத் தொடங்கி, தனது வாழ்நாள் முழுவதும் ஆழ்ந்த ஜெப வாழ்க்கை, கருணை, தியாகம் மற்றும் தன்னலமற்ற அன்புச் சேவையின் மூலம் ஏழைகள், ஆதரவற்றோர், நோயாளிகள் மற்றும் முதியோருக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, எண்ணற்ற மக்களின் இதயங்களில் அழியாத ஆன்மீகச் சுவடுகளைப் பதித்தார்.

தற்போது அவர் "இறை ஊழியர்" என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது புனிதர் பட்ட வழக்கு "வணக்கத்துக்குரியவர்" (Venerable), "அருளாளர்" (Blessed) மற்றும் இறுதியில் "புனிதர்" (Saint) என்ற நிலைகளை நோக்கி முன்னேறும்.

இந்தியாவின் முதல் மறைசாட்சிப் புனிதரான புனித தேவசகாயத்தின் வரிசையில், அன்னை ஸ்கொலாஸ்திக்காவும் திருச்சபையால் புனிதராக உயர்த்தப்பட வேண்டி நாம் அனைவரும் இறைவனிடம் மன்றாடுவோம்.

நமது பங்கின் புதிய பங்கு தந்தையாக Fr. Maria Susai P. அவர்கள் நியமிக்க பட்டுள்ளார்,புதிய பங்கு தந்தையை இறைவன் நிறைவாக ஆசி...
25/05/2026

நமது பங்கின் புதிய பங்கு தந்தையாக Fr. Maria Susai P. அவர்கள் நியமிக்க பட்டுள்ளார்,
புதிய பங்கு தந்தையை இறைவன் நிறைவாக ஆசிர்வதிக்க இறைவனை வேண்டுவோம்

நமது பாசமிகு பங்கு தந்தைFr. Starvin Cyril Shajan G. அவர்கள் தங்கள் 3 ஆண்டு பணியை நிறைவு செய்து புதிய பங்குக்கு சென்றுள்ள...
25/05/2026

நமது பாசமிகு பங்கு தந்தைFr. Starvin Cyril Shajan G. அவர்கள் தங்கள் 3 ஆண்டு பணியை நிறைவு செய்து புதிய பங்குக்கு சென்றுள்ளார் அவரின் புதிய பணி சிறக்க வாழ்த்துகள்

03/04/2026

Good Friday

29/03/2026

நல்லடக்கம்:  கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மறை மாவட்ட முதல் ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் உடல் திருத்துவபுரம் மூவொரு இறைவன்...
25/03/2026

நல்லடக்கம்: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மறை மாவட்ட முதல் ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் உடல் திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயத்தின் உள்ளே நல்லடக்கம் செய்யப்படுகிறது.

நினைவு திருப்பலி:  குழித்துறை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜெரோம் தாஸ் வறுவேல் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இன்று சென்னை ப...
24/03/2026

நினைவு திருப்பலி: குழித்துறை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜெரோம் தாஸ் வறுவேல் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இன்று சென்னை புனித லூர்து அன்னை திருத்தலம், பெரம்பூரில் வைத்து நினைவு திருப்பலி நடைபெற்றது.

RIP our Beloved Bishop
24/03/2026

RIP our Beloved Bishop

கண்ணீர் அஞ்சலிகுழித்துறை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு ஜெரோம் தாஸ் வறுவேல், ச.ச (74) அவர்கள், இன்று (24.03.2026) இறைவனடி ச...
24/03/2026

கண்ணீர் அஞ்சலி

குழித்துறை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு ஜெரோம் தாஸ் வறுவேல், ச.ச (74) அவர்கள், இன்று (24.03.2026) இறைவனடி சேர்ந்தார். அவரின் ஆன்மா, இறைவனில் இளைப்பாறுதல் பெற ஜெபிப்போம்....

Address

Varthanvillai
Bethelpuram
629803

Alerts

Be the first to know and let us send you an email when St.antony's church, varthanvillai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share