Canada Tamil Catholic network

Canada Tamil Catholic network To inform our church member to know our progaram

04/12/2026
09/13/2024

உறவுகளை சந்திப்பது அவர்களை
அரவனைப்பது அவர்களோடு உரையாடுவது எல்லாம் எல்லோருக்கும் கிடைக்கும் பாக்கியமல்ல அதற்க்கும் ஆண்டவன் அருள்வேண்டும்
லீனஸ் விரைவில் சுகமடைய
ஆண்டவன் அருள் புரியட்டும்

08/08/2024

The president Election in Sri Lanka will bring new President Sajith Premathasa in my experience no other chances. but I beg Sri Lankan Tamils. that we have to stand our rights and freedom more than anything else.
So. we have to vote for our common Candidate Ariyaratnam,

Call now to connect with business.

06/09/2024

வீட்டுக்குள் நுழைதல்!
‘இயேசுவின் இல்லத்திற்குள் நாம் நுழைய வேண்டுமெனில் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும்!’

அது ஒரு மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி. மாணவர்கள், மாணவியர் என ஏறக்குறைய 63 பேர் அங்கே தங்கியிருந்தார்கள். வௌ;வேறு நாட்டைச் சார்ந்த அவர்களைச் சேகரித்த ஒரு நிறுவனம் அவர்களைப் பாதுகாத்து வந்தது. அங்கிருந்த ஒரு மாணவனின் பெயர் மோங்-லி-லா. அவனுடைய சொந்த நாடு மியான்மர். அவர்களுடைய நாட்டில் இராணுவ ஆட்சி வந்தபோது அவர்களுடைய பெற்றோர்கள் இல்லத்தை விட்டு ஓடுகிறார்கள். சிறுவனாக இருந்த அவன் மனவளர்ச்சி குன்றியிருந்த காரணத்தால் அவனை இல்லத்திலேயே விட்டுச் செல்கிறார்கள். அப்படி விடப்பட்ட சிறுவன் தொண்டுநிறுவனம் ஒன்றில் ஒப்படைக்கப்படுகிறான். தொண்டுநிறுவனம் அவனை தாய்லாந்துக்கு அனுப்புகிறது. பின்நாளில் தன் மகன் தாய்லாந்தில் பத்திரமாக இருப்பதைக் கேள்விப்பட் மோங்-லி-லாவின் பெற்றோர்கள் அவனைக் கண்டு, தங்கள் இல்லம் அழைத்துச் செல்ல விரும்பி வருகிறார்கள். அன்று காலை முதல் தான் வித்தியாசமாக நடத்தப்படுவதையும், தனக்கு புதிய உடைகள் வழங்கப்படுவதையும், தன் பெட்டி தயார்செய்யப்படுவதையும் பார்த்த மோங்-லி-லா ஒன்றும் புரியாமல் நிற்கிறான். சற்று நேரத்தில் அவனுடைய பெற்றோர் வருகிறார்கள். ‘இவர் உன் அம்மா! இவர் உன் அப்பா!’ என்று அவனுக்குச் சொல்லப்படுகிறது. அவன் வந்து தங்களை அள்ளிக்கொள்வான் என்று அவனுடைய பெற்றோர்கள் காத்திருக்க, அவனோ அவர்களைவிட்டுத் தள்ளிச் சென்று ஒளிந்துகொள்கிறான். தொண்டுநிறுவனத்தை மேற்பார்வை செய்யும் அருள்பணியாளரை ஆரத்தழுவிக்கொண்டு, ‘இவரே என் அம்மா! இவரே என் அப்பா!’ என்கிறான். அவர்களுடைய வீட்டுக்குள் நுழைவதற்காகத் அவனை அழைத்துச் செல்ல வந்த தன் பெற்றோரை, தன் வீ;ட்டுக்குள் வருமாறு அழைக்கிறான் மோங்-லி-லா!

நிற்க.

மாற்கு நற்செய்தியாளர் சிறந்த கதைசொல்லி மட்டுமல்ல, நடந்ததை அப்படியே பதிவு செய்வதிலும் சிறந்தவர். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ‘நெருடல் பகுதி’ (’embarrassment text’) ஒன்றை வாசிக்கிறோம். அதாவது, வாசகர் அப்பகுதியை வாசிக்கும்போது உள்ளத்தில் நெருடலை உணர்கிற பகுதி இது. ஏன் இது நெருடல் தருகிறது? இயேசுவை அவருடைய சொந்த ஊரார், ‘இவர் மதிமயங்கி இருக்கிறார்!’ (கிரேக்கத்தில், ‘இவருடைய மூளை இவரிடம் இல்லை!’ அல்லது ‘இவர் தனக்கு வெளியே இருக்கிறார்!’ அல்லது ‘இவர் மனநலம் குன்றியவராக இருக்கிறார்!) என்று முத்திரை பதிக்கிறார்கள். தங்களுடைய ஆண்டவரும் போதகருமான ஒருவரைப் பற்றி மற்றவர்கள் இவ்வாறு குறிப்பிடுவதைக் கண்ட மாற்குவின் குழுமத்தார் நெருடலாக இதை உணர்ந்திருப்பார்கள்.

‘இயேசு அவருக்கு வெளியே இருக்கிறார்’ என்று ஊரார் சொல்லக் கேட்டு, வெளியே இருந்த அவரைத் தங்களுக்குள்ளே அழைத்துக்கொள்ள விரும்பி அவரிடம் வருகிறார்கள் இயேசுவின் உறவினர். உறவினர்களின் பெயர்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால், நிகழ்வின் இறுதியில் ‘அவருடைய தாயும் சகோதரர்களும்’ என மாற்கு குறிப்பிடுகிறார்.

அவர்களுடைய இல்லத்திற்குள் தம்மை அழைத்துச் செல்ல வந்திருந்தவர்களைத் தம் இல்லத்திற்குள் வருமாறு அழைக்கிறார் இயேசு. இனி இரத்த உறவு அல்ல, மாறாக, கடவுளின் திருவுளம் நிறைவேற்றும் இறையாட்சி உறவே தமக்கு நெருக்கம் எனச் சொல்லி, வீட்டுக்கு வெளியே நின்றவர்களை வீட்டுக்கு உள்ளே அழைக்கிறார் இயேசு.

இயேசு அவருக்கு வெளியே நின்றுகொண்டிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு, அவரை ‘வீட்டுக்கு உள்ளே, உறவு வட்டத்துக்குள்ளே’ அழைத்துக்கொள்ள விரும்பியவர்கள், இயேசுவின் வட்டத்துக்குள், வீட்டுக்குள் அழைத்துக்கொள்ளப்படுகிறார்கள். இரத்த உறவு என்ற வட்டம் மறைந்து, இறைத்திருவுளம் உறவு என்னும் புதிய வட்டம் பிறக்கிறது.

இயேசுவின் உறவினர்கள் அவரைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் எனில், இயேசுவின் எதிரிகள், இதே புரிதலை முன்வைத்து இயேசுவைப் பழித்துரைக்கிறார்கள்.

‘இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது. பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்’ எனக் குற்றம் சுமத்துகிறார்கள். இவ்வாறாக, இயேசுவைப் பேய்பிடித்தவன் (‘மதிமயங்கியவன்’) என்று அழைத்ததோடல்லாமல், அவருடைய வல்ல செயல்களையும் புறக்கணிக்கிறார்கள்.

உவமைகள் வழியாக அவர்களுக்கு விளக்கம் தருகிறார் இயேசு. ‘தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் (வீடும்) நிலைத்துநிற்க முடியாது … வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியாது.’

சாத்தான் சாத்தானுக்கு எதிராக உடைந்த நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம். ஆண்டவராகிய கடவுள் நம் முதற்பெற்றோரை ஏதேன் தோட்டத்துக்குள் குடிவைக்கிறார். பாம்பின் சூழ்ச்சியால் பெண்ணும் ஆணும் விலக்கப்பட்ட கனியை உண்கிறார்கள். ‘நீ எங்கே இருக்கிறாய்?’ என்று மனிதனைத் தேடி வருகிறார் கடவுள். பாம்பைச் சபிக்கிற கடவுள், ‘உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்!’ என்கிறார். அன்றே, சாத்தானின் இல்லம் உடைகிறது. ‘புதிய ஏவாளின்’ (மரியா) வித்தாக வருகிற இயேசு சாத்தானின் தலையைக் காயப்படுத்துகிறார். சாத்தானோ அவருடைய குதிங்காலைக் காயப்படுத்த – அவர்மேல் குற்றம் சுமத்த முற்படுகிறது. இவ்வாறாக, ஏற்கெனவே பிளவுபட்ட சாத்தானின் அரசு இனிமேல் நிலைக்க முடியாது என்றும், சாத்தான் என்னும் வலியவரைக் கட்டக்கூடிய ஆற்றல் தனக்கே உண்டு என்றும் மொழிகிறார் இயேசு.

சாத்தானின் வீடு உடைகிறது. அவனுடைய அரசு வீழ்கிறது. அவனுடைய இல்லம் கொள்ளை போகிறது. ஆக, இயேசு சாத்தானுக்கு எதிரானவராகவும், சாத்தானைவிட வலிமையானவராகவும் இருக்கிறார். மறைநூல் அறிஞரின் குற்றச்சாட்டு பொய்யாகிறது. இயேசுவின் வீடு வலிமை வாய்ந்ததாக இருக்கிறது. அதை உடைக்க யாராலும் இயலாது.

இயேசுவின் வலிமைமிகுந்த வீட்டுக்குள் நாம் நுழைவதற்கான எளிய வழி கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், கொரிந்தியருக்கு எழுதுகிற பவுல் (தன்நிலை விளக்க மடல்), ‘நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்துபோனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு’ என்கிறார். இவ்வுலகில் நாம் வசிக்கும் வீட்டையும் நம் உடலையும் கூடாரம் (தற்காலிகமானது) என அழைக்கிற பவுல், நிலையான வீட்டுக்கான எதிர்நோக்கை முன்மொழிகிறார். ஆக, பவுலைப் பொருத்தவரையில் ‘வீடு’ என்பது மறுவுலகம் சார்ந்தது, இறப்புக்குப் பின்னர் நாம் சென்றடைவது.

பதிலுரைப்பாடல் ஆசிரியர் (திபா 130), ஆண்டவருக்காக, ஆண்டவரின் இல்லம் திரும்புவதற்காகக் காத்திருக்கிறார்: ‘ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். விடியலுக்காய் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கிறது.’

இயேசு அவரைவிட்டு வெளியே நிற்கிறார் எனக் கேள்விப்படுகிற அவருடைய உறவினர்கள் அவரைத் தங்களுக்குள்ளே அழைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். தாம் அல்ல, மாறாக, அவர்களே அவருக்கு வெளியே நிற்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு.

நாம் நம்மைவிட்டு வெளியே நிற்கிற பொழுதுகள் எவை? நம்மையே ஏற்றுக்கொள்ளாதபோது, தாழ்வு மனப்பான்மை, குற்றவுணர்வு கொள்ளும்போது! பாவச் செயல்கள் பழக்கங்களாக மாற நாம் அவற்றையும் அவை நம்மையும் பற்றிக்கொள்ளும்போது! கடவுளின் திருவுளம் நிறைவேற்றுவதற்குப் பதிலாக, நம் முதற்பெற்றோர்போல அவருக்குக் கீழ்ப்படிய மறுக்கும்போது! இயேசுவைப் பழித்துரைக்கும்போது! தூய ஆவியாரைப் பழித்துரைக்கும்போது!

இப்படி நாம் வெளியே நிற்கிற பொழுதுகளில் நாம் வெளியே நிற்பதை உணராமல், ‘கடவுளுக்கு மதிமயங்கியது’ என்ற நிலையில் அவரோடு கண்டும் காணாமல் உறவுகொள்கிறோம்.

நம்மைவிட்டு வெளியே நிற்கிற நம்மைத் தேடி வருகிற இயேசு, நம் வீட்டை வெற்றிகொண்டு அவருடைய வீடாக அதை மாற்றிக்கொள்கிறார். அங்கே நாம் அவருடைய தாயும் சகோதரர்களுமாக மாறுகிறோம்.

இயேசுவோடு இணைந்து நாம் அமைக்கும் இல்லம் அழியாததாக, நீடித்து நிலைக்கிற இன்பமாகத் தொடர்கிறது.

இயேசுவின் வீட்டுக்குள் நுழைதலே நம் வாழ்வின் இலக்கு!

(மனவளர்ச்சி குன்றியவர்களை, மனவளர்ச்சி குன்றியவர் என முத்திரையிடப்படுபவர்களை இன்றைய நாளில் சிறப்பாக நினைவில்கொண்டு அவர்களுக்காக இறைவேண்டல் செய்வோம். அவர்களுடைய பெற்றோர்கள், உடன்பிறந்தோர்கள், உறவினர்கள், அவர்களைப் பராமரிக்கிற நன்மக்கள் அனைவரும் துணிவையும் பொறுமையையும் பெற்றுக்கொள்ள அவர்களுக்காகவும் வேண்டுவோம்.)

04/26/2024

வத்திக்கான்
வியட்நாம் நாட்டில் பேராயர் கலகரின் 6 நாள் பயணம்
வத்திக்கானுக்கும் வியட்நாமுக்கும் இடையே அரசியல் உறவு 1975ஆம் ஆண்டு முறிவுபட்டபோதிலும், 1990ஆம் ஆண்டிலிருந்து உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வியட்நாம் நாட்டின் பிரதமர், வெளியுறவு அமைச்சர், தலத்திருஅவை அங்கத்தினர்கள் ஆகியோரை நேரடியாக சந்திக்கும் நோக்கத்துடன் அந்நாட்டில் 6 நாள் பயணத்தைத் துவக்கியுள்ளார் பேராயர் பால் ரிச்சர்டு கலகர்.

நாடுகளுடன் ஆன உறவுகளுக்கான துறையின் செயலர் பேராயர் கலகர் அவர்கள் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஞாயிறு வரை வியட்நாம் நாட்டில் தன் அரசியல் மற்றும் திருஅவை தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருப்பார்.

வியட்நாம் பிரதமர் Pham Minh Chính, வெளியுறவு அமைச்சர் Bui Thanh Son ஆகியோரைச் சந்தித்து உரையாடுவதுடன் உள்துறை அமைச்சகத்தின் அரசியல் கூட்டத்திலும் கலந்துகொள்வார்.

Hanoi நகரின் புனித யோசேப்பு பேராலயத்தில் விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றுவதும் பேராயர் கலகரின் பயணத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

Hue நகரிலுள்ள உயர் குருத்துவப் பயிற்சி இல்லத்திற்குச் சென்று மாணவர்களை சந்திக்கும் பேராயர், அங்குள்ள "Phu Cam" பேராலயத்தில் திருப்பலியும் நிறைவேற்றுவார்.

வியட்நாமின் கம்யூனிச பிரதிநிதிகள் குழு திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்து உரையாடியபின் ஜனவரி 18ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த பேராயர் கலகர் அவர்கள், வியட்நாம் நாட்டிற்கு அரசியல் உறவு சார்ந்த பயணம் மேற்கொள்ளவுள்ளது குறித்து எடுத்துரைத்திருந்தார்.

வத்திக்கானுக்கும் வியட்நாம் நாட்டிற்கும் இடையேயான அரசியல் உறவு 1975ஆம் ஆண்டு முறிவுபட்டபோதிலும், 1990ஆம் ஆண்டிலிருந்து உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் கண்டு, 2011ஆம் ஆண்டில் வியட்நாமில் உறைவிடத்தைக் கொண்டிராத திருப்பீடத் தூதுவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக, 2023ஆம் ஆண்டு டிசம்பரில், வியட்நாமிலேயே திருப்பீடத் தூதுவர் தங்கி பணியாற்ற இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04/26/2024

நான் விரைவில் கொலைசெய்யப்படலாம்! மட்டக்களப்பில் உள்ள அருட்தந்தை பரபரப்பு வாக்குமூலம்
மட்டக்களப்பில் அருட்தந்தை ஒருவர் தான் விரைவில் சுட்டுக் கொலை செய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளமை கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அருட்தந்தையர்களுக்கான விசேட திருப்பலி ஒன்று ஆயர் தலைமையில் மட்டக்களப்பு ஆயரில்லத்தில் இடம்பெற்றுள்ளது.
அதன் பின்னர் அருட்தந்தை ஒருவர் தனக்கு ஆயரில்லத்தில் உள்ள சிலரால் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் அச்சுறுத்தல் குறித்து அருட்தந்தையர்கள் மத்தியில் ஆதங்கப்பட்டதுடன் என்னை துப்பாக்கி முனையில் கொலை செய்யப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அருட்தந்தை கருத்து தெரிவித்த காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது,
அந்த காணொளியில், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் என் மீது குரோத உணர்வை கொண்டுள்ளதுடன், மறைமாவட்டம் மீது கரிசனையுடன் நல்ல விடயங்களை கூறும் மதகுருமாரை வெறுக்கின்றார்.
நான் உயிரிழந்தால் வெறுமனே புதைத்துவிட்டு சென்றுவிடாதீர்கள். ஏன் இறந்தேன் என்பதை விசாரணை செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மறைமாவட்ட நிர்வாகம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்திய குறித்த அருட்தந்தை பிரச்சினைகள் தொடர்பில் கேள்வி எழுப்புவதன் காரணமாக தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய ஆதாரங்களை அழித்து விட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

04/26/2024

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தொடர்பில் வெளியான தகவல்
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் அவர்கள் தனது பதவி விலகல் கடிதத்தை பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Brian Udaigwe ஊடாக பாப்பரசருக்கு அனுப்பி வைத்துள்ளார்
மின்னஞ்சல் மூலமாக இந்த பதவி விலகல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பதவி விலகல்
ஆயரின் பதவி விலகல் கடிதம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இது தொடர்பில் எமது செய்திப் பிரிவு மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜீவராஜ் தொடர்புகொள்ள முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.
தொடர்ச்சியாக உடல் நிலை பாதிப்புக்குள்ளான ஆயர் அவர்கள் இதன் காரணமாக பதவி விலகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தே முதன் முறையாக தெரிவு செய்யப்பட்ட ஆயராக இவர் திகழ்கின்றார்.
எனினும், அடுத்து வரப் போகும் ஆயர் எங்கிருந்து தெரிவு செய்யப்படுவார் என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
மறைமாவட்டம் தொடர்பான சர்ச்சைகள்
எவ்வாறாயினும், ஆயரின் கோரிக்கை தாமதமின்றி ஏற்று கொள்ளப்பட்டு விரைவில் புதிய ஆயர் ஒருவர் நியமிக்கப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவரையான காலப்பகுதியில், அருகில் உள்ள ஆயர் ஒருவரின் கீழ் பெறுப்புக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதேவேளை, மட்டக்களப்பு மறை மாவட்டம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளும், குற்றச்சாட்டுக்களும் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களின் வாயிலாக அண்மையக் காலத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆயர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை, அருட்தந்தையர்களும் சுமத்தியிருக்கின்றனர்.
இந்தநிலையிலேயே, ஆயரின் பதவி விலகல் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

04/13/2024

SRI LANKA PRESIDENT ELECTION, WE CAN HAVE A CANDIDATE FOR MEMORANDAM OF TAMILS NORTH AND EAST TO JOIN WE CAN GET TO KNOW ABOUT OUR TAMILS OPINION ON IT.

03/30/2024

இன்றைய வாசகங்கள்
திருத்தூதர் பணி 10:84-49
கொலோசையர் 8:1-4
யோவான் 20:1-9

திருப்பலி முன்னுரை
கிறிஸ்துவின்‌ உயிர்ப்பு, வரலாற்று ஏடுகளில்‌ புதைந்துபோன அல்லது அழிந்துபோன நிகழ்வல்ல. மாறாக நமக்கும்‌ கடவுளுக்கும்‌ இடையில்‌ உள்ள தடைகளை உடைத்து நம்மை இறைவனோடு இணைக்கும்‌ உன்னத நிகழ்வாகும்‌. உயிர்ப்பு இல்லையெனில்‌ நற்செய்தியில்லை, உயிர்ப்பு இல்லையெனில்‌ கிறிஸ்தவ சமூகம்‌ இல்லை. உயிர்ப்பு நம்மைப் பிரிக்கும் சக்திகளை உடைத்தெரியும்‌ மக்களாக வாழ அழைப்பு விடுக்கிறது. தோற்றுவிட்டோம்‌. எல்லாம்‌ முடிந்துவிட்டது என்று கலங்கிக்‌ கொண்டிருந்த சீடர்களுக்கு, கிறிஸ்துவின்‌ உயிர்ப்பு வளமையையும்‌ வாழ்வையும்‌ தந்தது.

நாமும்‌ உயிர்த்த இயேசுவின்‌ நற்செய்தியைப்‌ பிறருக்கு கொண்டு செல்ல வேண்டும்‌. உயிர்ப்பின்‌ மக்களாக வாழ வேண்டும்‌ என அழைப்பு விடுக்கிறது. எனவே உயிர்த்த கிறிஸ்துவின்‌ அன்பையும்‌, ஆசிகளையும்‌ அனைவருடனும்‌ பகிர்ந்து கொள்வோம்‌ என்ற உறுதிப்பாட்டோடு இந்தத்‌ திருப்பலியில்‌ பங்கெடுப்போம்‌.

முதல்‌ வாசக முன்னுரை :
கிறிஸ்து காட்டும்‌ பாதையில்‌ அன்பு உண்டு. அமைதி உண்டு. வெற்றி உண்டு. நாமும்‌ கிறிஸ்துவோடு இணைந்து அவரது பாதையில்‌ செல்லப் புனித பேதுரு இவ்வாசகம்‌ மூலம்‌ நமக்கு அழைப்பு விடுக்கிறார்‌. நம்மை முழு மனிதராக்கும்‌ கிறிஸ்துவின்‌ பாதையில்‌ நாமும்‌ பயணம்‌ செய்ய இறைவனுக்கு ஏற்புடைய செயல்களை நாம்‌ செய்ய வேண்டும்‌ எனக்‌ கூறும்‌ இவ்வாசகத்திற்குச்‌ செவிகொடுப்போம்‌

பதிலுரைப் பாடல்
திபா 118: 1-2. 16-17. 22-23 (பல்லவி: 24)

பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.
அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! - பல்லவி
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். - பல்லவி
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! - பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை :
கிறிஸ்துவின்‌ உயிர்ப்பு என்பது புதிய தொடக்கமாகும்‌. உலகம்‌ சொல்லும்‌ அனைத்து விதமான கருத்துகளுக்கும்‌ முற்றுப்புள்ளி வைத்த இந்த நிகழ்வு விண்ணக வாழ்விற்குப்‌ புதிய தொடக்கமாகிறது. அவரது உயிர்ப்பினால்‌ அவரோடு புனித படைப்பான நாமும்‌ விண்ணக வாழ்வைப்‌ பற்றி எண்ணி கிறிஸ்துவோடு இணைந்து துன்பங்களை மறந்து வாழ்வோம்‌ என அழைக்கும்‌. வாசகத்தைக்‌ கவனமுடன்‌ கேட்போம்‌.

தொடர்பாடல்
இன்று இதைச் சொல்ல வேண்டும் அல்லது பாட வேண்டும். எண்கிழமை நாள்களில், விரும்பினால், சொல்லலாம்.

பாஸ்காப் பலியின் புகழ்தனையே
பாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே.

மாசில் இளமறி மந்தையினை
மாண்பாய் மீட்டுக்கொணர்ந்தாரே;
மாசறு கிறிஸ்துவும் தந்தையுடன்
மாசுறு நம்மை இணைத்தாரே.

சாவும் உயிரும் தம்மிடையே
புரிந்த வியத்தகு போரினிலே
உயிரின் தலைவர் இறந்தாலும்
உண்மையில் உயிரோடாளுகின்றார்.

வழியில் என்ன கண்டாய் நீ?
மரியே, எமக்கு உரைப்பாயே.

உயிரோடுள்ள கிறிஸ்து பிரான்
கல்லறைதன்னைக் கண்டேனே;
உயிர்த்து எழுந்த ஆண்டவரின்
ஒப்பரும் மாட்சியும் கண்டேனே.

சான்று பகர்ந்த தூதரையும்
போர்த்திய பரிவட்டத்தினையும்
அவர்தம் தூய துகிலினையும்
நேராய்க் கண்ணால் கண்டேனே.

கிறிஸ்து என்றன் நம்பிக்கை,
கல்லறை நின்று உயிர்த்தாரே,
இதோ, உமக்கு முன்னாலே
செல்வர் கலிலேயாவிற்கே.

மரித்தோர் நின்று உண்மையிலே
கிறிஸ்து உயிர்த்தது யாமறிவோம்.
வெற்றிகொள் வேந்தே, எம்மீது
நீரே இரக்கங் கொள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்‌ மன்றாட்டுகள்‌
1. எம்தாய்த் திருஅவையை வழிநடத்தும்‌ திருத்தந்தை, ஆயர்கள்‌, குருக்கள்‌ அனைவருக்கும்‌ உமது ஆசியை அளித்தருளும்‌. அவர்கள்‌ உமது உயிர்ப்பின்‌ செய்தியைத் தங்கள் வாழ்வாலும்‌, போதனையாலும்‌ மக்களுக்கு அறிவிக்க வேண்டிய அருளைத்‌ தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.

2. அன்பு இறைவா ! உமது உயிர்ப்பில்தான்‌ எங்களது விசுவாசம்‌ பொருளுள்ளதாய்‌, உயிருள்ளதாய்‌ இருக்கிறது என்பதை நாங்கள்‌ உணர்கிறோம்‌. எங்களது அன்றாட வாழ்க்கையில்‌ வரும்‌ துன்ப துயரங்கள்‌, வேதனைகள்‌, சுமைகளை நிறைவாக ஏற்றுக்கொண்டு உம்மில்‌ நம்பிக்கை கொண்டு, இலட்சியத்தோடு போராட உமது உயிர்ப்பில்‌ நாங்களும்‌ பங்குபெற வரம்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்‌.

3. எங்களது துன்பத்தில்‌ பங்கெடுக்கும்‌ இறைவா ! துயருறுவோர்‌ யாவருக்காகவும்‌ செபிக்கிறோம்‌. துன்பத்தின்‌ மூலமே ஒருவர்‌ இன்பத்தை அடைய முடியும்‌ என்பதை உமது உயிர்ப்பின்‌ மூலம்‌ நாங்கள்‌ உணர்ந்து வாழவும்‌, பிறரது துன்பங்களில்‌ பங்கெடுத்து அவர்களில்‌ இரண்டறக்‌ கலந்து, உமது உண்மை அன்பை செயலில்‌ காட்டும்‌ மாமனிதர்களாக வாழ்ந்திட வரம்தர உம்மை மன்றாடுகிறோம்‌.

4. வெற்றியின்‌ நாயகனே இறைவா ! உம்‌ மகன்‌ இயேசுவின்‌ உயிர்ப்பினால்‌ எம்பங்கு மக்கள்‌ யாவரும்‌ ஒளிபெற்று, ஒருவரை ஒருவர்‌ அன்பு செய்து, விட்டுக்‌ கொடுத்து ஏற்றுக்‌ கொண்டு, உமது மதிப்பீடுகளின்படி வாழ வரம்‌ தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்‌.

நன்றி: இனிய தோழன்

Address

2625 Eglintont Avenue East
Toronto, ON
M1K1S1

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+14162655540

Website

Alerts

Be the first to know and let us send you an email when Canada Tamil Catholic network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Canada Tamil Catholic network:

Share