Iraivanin Arulmazhai

Iraivanin Arulmazhai ISLAM ORU INIYA MARKAM

03/08/2026

*﷽ உபதேசம் : 946*
*03.08.2026*
* திங்கள்கிழமை

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்*

*செய்திகளில் மிகவும் ( உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும்.*

*நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும்.*

*காரியங்களிலெல்லாம் மிகத்தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும்.*

*புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.*

*ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.*

*அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)*

*நூல்: நஸாயீ-1560*

*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி*

*நபிவழி நடந்தால் நரகமில்லை!*

03/08/2026

🌹🌹🌹🌹🌹🌹🌹

0️⃣3️⃣▪️0️⃣8️⃣▪️2️⃣0️⃣2️⃣6️⃣

*தினமும் ஓர் 'உபதேசம்* 8️⃣4️⃣8️⃣

*நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்;*

1. *என் பெயரால் சத்தியம் செய்து அதில், மோசடி செய்தவன்.*

2. *சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தை உண்டவன்.*

3. *கூலியாளிடம் நன்றாக வேலை வாங்கிக்கொண்டு அவனது கூலியைக் கொடுக்காமல் இருந்தவன்.*

*ஆகிய மூவருக்கெதிராக மறுமை நாளில் நான் வாதிடுவேன்.*

*அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)*

*நூல் : புகாரி 2️⃣2️⃣2️⃣7️⃣*

03/08/2026

🔮🔮🔮🔮🔮🔮

0️⃣3️⃣▪️ 0️⃣8️⃣ ▪️ 2️⃣0️⃣2️⃣6️⃣

*தினமும் ஓர் இறைவசனம்*

*உங்களையே மாய்த்துக் கொள்ளுங்கள்! அல்லது உங்கள் வீடுகளிலிருந்து வெளியேறுங்கள்!” என்று நாம் அவர்களுக்கு விதித்திருந்தால் அவர்களில் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைச் செய்திருக்க மாட்டார்கள். தமக்கு அறிவுறுத்தப்பட்டதை அவர்கள் செயல்படுத்தியிருந்தால் அதுவே அவர்களுக்கு மிகச் சிறந்ததாகவும், மிகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.*

*திருக்குர்ஆன் : அந்நிஸா 4️⃣ வது அத்தியாயம் 6️⃣6️⃣ வது வசனம்*

03/08/2026

நோன்பு. [ 70 ]
*தேவைப்பட்டால், வாகனத்தின் மீதமர்ந்தும் வித்ர் தொழலாம்.*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “தமது வாகனத்தின் மீதமர்ந்து வித்ர் தொழுவார்கள்.”
என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 1256.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் இருந்தவாறு கூடுதல் (நஃபில்) தொழுகைகளைத் தொழுவார்கள்; அப்போது அவர்கள் எத்திசையை முன்னோக்கியிருப்பினும் சரியே! (அவ்வாறே) “வாகனத்தில் இருந்தவாறு வித்ரும் தொழுவார்கள்.” ஆனால், கடமையான (ஃபர்ள்) தொழுகைகளை வாகனத்தின் மீதமர்ந்து தொழமாட்டார்கள். (இறங்கித்தான் தொழுவார்கள்).
இப்னு உமர் (ரலி).
நூல் : முஸ்லிம் 1257.
🌖🌖🌖🌖🌖🌖🌖

03/08/2026

தொழுகை. { 236 }
*ஜனாஸா தொழுகை - 8.*

*ஆண் ஜனாஸாவாக இருந்தால் தலைப்பகுதியை நோக்கியும், பெண் ஜனாஸாவாக இருந்தால் வயிற்றுப் பகுதியை நோக்கியும் இமாம் நிற்க வேண்டும்.*

ஒரு ஆணுடைய ஜனாஸா தொழுகையில் அனஸ்(ரலி) யுடன் நானும் கலந்து கொண்டேன். அப்போது அவர் (மய்யித்தின்) தலையை நோக்கி நின்றார். பிறகு குறைஷி குலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடைய ஜனாஸா கொண்டு வரப்பட்டது. அபூஹம்ஸாவே! இவருக்கு தொழ வையுங்கள் என்று கேட்டனர் அப்போது கட்டிலின் நடுப்பகுதியை நோக்கி நின்றார் அப்போது அவர்களிடம் “ஆண் ஜனாஸாவுக்கு தலைப்பகுதியிலும், பெண் ஜனாஸாவுக்கு இப்போது நீங்கள் நின்ற இடத்திலும் நபி(ஸல்) அவர்கள் நின்றதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்ட போது அனஸ்(ரலி) ஆம் என்று கூறினார். தொழுது முடித்ததும் இதை கவனத்தில் வையுங்கள்” எனக் கூறினார்கள்.
நூல்கள்: திர்மிதீ 955, இப்னுமாஜா 1483.
⏰⏰⏰⏰⏰⏰⏰

03/08/2026

*﷽ உபதேசம் : 945*
*02.08.2026*
*ஞாயிற்றுக்கிழமை*

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*

*நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான (தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும்.*

*அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.*

*அறிவிப்பவர் : இர்பாள் பின் ஸாரியா (ரலி)*

*நூல் : அஹ்மத் 16519*

*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி*

*நபிவழி நடந்தால் நரகமில்லை!*

01/08/2026

*﷽ உபதேசம் : 944*
*01.08.2026*
*சனிக்கிழமை*

*ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள்.*

*ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.*

*அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)*

*(நூல் புகாரி: 7288)*

*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி*

*நபிவழி நடந்தால் நரகமில்லை!*

01/08/2026

🌹🌹🌹🌹🌹🌹🌹

0️⃣1️⃣▪️ 0️⃣8️⃣ ▪️ 2️⃣0️⃣2️⃣6️⃣

*தினமும் ஓர் 'உபதேசம்* 8️⃣4️⃣6️⃣

*நபி (ﷺ) " கணவன் கட்டளையிடாமலேயே ஒரு பெண் அவனுடைய பொருளை நல்வழியில் செலவு செய்தால், அதன் நன்மையில் பாதி கணவருக்கும் உண்டு" என்று கூறினார்கள்.*

*அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)*

*நூல் : புகாரி 5️⃣1️⃣9️⃣5️⃣*

01/08/2026

.💞💞💞💞💞💞💕

0️⃣1️⃣▪️ 0️⃣8️⃣ ▪️ 2️⃣0️⃣2️⃣6️⃣

*தினமும் ஓர் இறைவசனம்*

*அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்தபோது உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம் அவர்கள் பாவ மன்னிப்புக் கோரி, தூதரும் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோரியிருந்தால் அல்லாஹ்வை மிக்க மன்னிப்பவனாகவும், நிகரிலா அன்பாளனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.*

*திருக்குர்ஆன் : அந்நிஸா 4️⃣ வது அத்தியாயம் 6️⃣4️⃣ வது வசனம்*

31/07/2026

*﷽ உபதேசம் : 943*
*31.07.2026*
*வெள்ளிக்கிழமை*

*உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்*

*(அறியாமைக் காலத்தில் கணவன் இறந்தபின்) மனைவி அவளுடைய 'ஆடைகளிலேயே மோசமானதில்' அல்லது*

*'மோசமான வீட்டில்' தங்கியிருப்பாள். (கணவர் இறந்து) ஒருவருடம் கழிந்துவிட்டால் (அவ்வழியாகக்) கடந்துசெல்லும் ஏதேனும் ஒரு நாய் மீது ஒட்டகச் சாணத்தை அவள் வீசியெறிவாள். (அந்த அவலம் இப்போது இல்லை.)*

*எனவே, அவள் நான்கு மாதம் பத்து நாள்கள் கழியும் வரை அஞ்சனம் இட வேண்டாம்' என்று (நபி(ஸல்)) கூறினார்கள்.*

*(நூல் புகாரி : 5338)*

*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி*

*பெண்ணுரிமை போற்றிய பெருமானார்!*

Address

Dubai
Dubai

Alerts

Be the first to know and let us send you an email when Iraivanin Arulmazhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share